எல்ஐசி ஐபிஓ: ஆட்டம் காணும் பங்குச்சந்தை; ஆர்வம் காட்டாத அந்நிய முதலீட்டாளர்கள்

புதுடெல்லி: இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எல்ஐசி ஐபிஓ இன்று நிறைவு பெறும் சூழலில் சிறு முதலீட்டாளர்களும், உள்நாட்டு முதலீட்டாளர்களும் ஆர்வம் காட்டியுள்ள நிலையில் அந்நிய முதலீட்டாளர்கள் ஒதுங்கியுள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும் உக்ரைன் – ரஷ்யா போர் மூண்டதால் பங்குச் சந்தைகள் கடுமையாகச் சரிவு காரணமாக பங்கு வெளியீடு தள்ளிப்போனது. பங்குச்சந்தை ஏற்ற – இறக்கமாக இருப்பதன் … Read more

ஜிப்மரில் இந்தி திணிப்பு இல்லை: ஆய்வுக்குப் பின் ஆளுநர் தமிழிசை பேட்டி

புதுச்சேரி: நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் அறிக்கை, மருத்துவ சேவை, குறிப்பு தமிழில்தான் வழங்கப்படும். இந்தி திணிப்பு இல்லை. நிர்வாக ரீதியான சுற்றறிக்கை தவறாக திரிக்கப்பட்டுள்ளதால் போராட்டம் தேவையற்றது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார். ஆனால் அது உண்மையா என்பதை நோயாளிகள் தெரிவிக்கின்றனர். புதுவை ஜிப்மரில் இந்தி திணிக்கப்படுவதை கண்டித்து திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தின. காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் சென்னையிலிருந்து துணைநிலை … Read more

டிஎன்பிஎஸ்சி குருப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு- பகுதி 4

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள் மற்றும் பிற போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா-விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த வெள்ளிக்கிழமை (மே 6) அன்று வெளியிடப்பட்ட பகுதி-3இல் ‘இந்தியா-1 (குடியரசுத் தலைவர்கள், துணைக்குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள்)’ என்னும் தலைப்பின் கீழ் 15 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். அதே தலைப்பின்கீழ் அடுத்த 15 வினாக்கள் :- இந்தியா-1 (குடியரசுத் தலைவர்கள், துணைக்குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள்) 16. … Read more

புதுவை ஜிப்மரில் திமுகவினர் முற்றுகை போராட்டம்: 4 எம்எல்ஏ.,க்கள் கைது

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி திணிப்பதைக் கண்டித்து திமுகவினர் முற்றுகை போராட்டம் நடத்தியதில் 4 எம்எல்ஏ.,க்கள் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரி மாநிலம், கோரிமேட்டில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு புதுவை மட்டுமல்லாமல் தென் இந்தியாவில் தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த நோயாளிகளும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் ஜிப்மரில் அனைத்து கோப்புகள், பதிவேடுகள் மற்றும் தலைப்புகளில் இந்தி கட்டாயம் என்று ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் … Read more

ஆர்.ஏ.புரம் குடியிருப்பு அகற்றம் | தீக்குளித்து இறந்தவருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னை ஆர்.ஏ.புரம் குடியிருப்பு அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து இறந்தவருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை ஆர்.ஏ.புரம், கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில், அரசு நிலத்தில் குடியிருப்பவர்களை அகற்றும் பணி காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 60 வயதுமிக்க கண்ணையா என்ற நபர் ஒருவர் அவரது வீடு இடிக்கப்படுவதை கண்டித்து தீடிரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே சம்பவ … Read more

கல்பாக்கம் அணுமின் நிலைய திறன்சார் பணிகளுக்கு இந்தியில் தேர்வு: ராமதாஸ் கண்டனம்

சென்னை: தச்சர், பிளம்பர் போன்ற திறன்சார்ந்த பணிகளுக்கு திறனும், பயிற்சியும் தான் முக்கியம்; மொழி அல்ல. எல்லாமே இந்தியில் தான் என்பது ஏகாதிபத்திய மனநிலை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து இன்று ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பிளம்பர் உள்ளிட்ட “சி” பிரிவு பணிகளுக்கு கூட இந்தியில் தான் தேர்வும், நேர்காணலும் நடத்தப்படுகின்றன. அதனால், 95% வேலைவாய்ப்புகள் உள்ளூர் மக்களுக்கு கிடைக்காமல் வட இந்தியர்களுக்கு தாரை … Read more

'விழுப்புரம் தடுப்பணையை களிமண்ணால் கட்டினார்களோ' – அமைச்சர் துரைமுருகன் கிண்டல்

சென்னை: விழுப்புரத்தில் உடைந்த தடுப்பணையை சிமென்ட் போட்டு கட்டினார்களா? அல்லது களிமண் போட்டு கட்டினார்களா? என்பதே எனது சந்தேகம் என்று சட்டப்பேரவையில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தேகம் எழுப்பினார். தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது, சட்டமன்ற உறுப்பினர் வேல்முருன், “பண்ருட்டி தொகுதியில் விழுப்புரம் எல்லையில் கடந்த கால ஆட்சியில் கட்டப்பட்ட தடுப்பணையை மழை வெள்ளம் முழுவதும் அடித்துச் சென்று விட்டது. புனரமைப்புப் பணிகளுக்கு கடந்த ஆட்சியில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்தப் … Read more

சிங்கார கவுரி அம்மன் தரிசன வழக்கு | கியான்வாபி மசூதியில் கள ஆய்வு நிறுத்தம்: முஸ்லிம்களின் மனு மீது இன்று விசாரணை

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியின் காசி விஸ்வநாதர் கோயிலில் சிங்கார கவுரி அம்மனை அன்றாடம் தரிசிக்க உத்தரவிட கோரிமாவட்ட சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் நியமித்த குழு, கோயிலை ஒட்டியுள்ளகியான்வாபி மசூதிக்குள் கள ஆய்வு தொடங்கியது. குழுவின் ஆணையர் மூத்த வழக்கறிஞர் அஜய் குமார் மிஸ்ரா தலைமையில் நடந்த கள ஆய்வில் அனைத்து தரப்பின் சார்பில் 36 பேர் பார்வையாளர்களாக இடம்பெற்றனர். சுமார் 4 மணி நேரம் எந்த தடையும் இன்றி … Read more

’பெண்கள் முகத்தை மறைக்க வேண்டுமென்ற தலிபான்களின் உத்தரவு அதிர்ச்சி அளிக்கிறது' – ஐ. நா

பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்ற தலிபான்களின் உத்தரவு அதிர்ச்சியளிப்பதாக ஐ. நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் வீட்டைவிட்டு பெண்கள் வெளியே வரும்போது, உடலை முழுவதும் மூடக்கூடிய நீலநிற புர்கா அணிந்தே வரவேண்டும். அவ்வாறு முகத்தை மறைக்காமல் வரும் பெண்களின் தந்தை அல்லது நெருங்கிய ஆண் உறவினர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அரசாங்க வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தலிபான் அரசின் தலைவரான ஹிபத்துல்லா அகுந்த்ஸாடா தெரிவித்துள்ளார். தலிபான்களின் இந்த உத்தரவுக்கு சர்வதேச அளவில் … Read more

“ஊழலும் குடும்ப ஆட்சியுமே திராவிட மாடல், காங்கிரஸுக்கு ஒரு யோசனை” – ‘துக்ளக்’ விழாவில் குருமூர்த்தி பேச்சு

“மோடி எதிர்ப்பு என்ற ஒற்றைக் கொள்கையை மட்டுமே வைத்துக் கொண்டு காங்கிரஸ் தற்கொலை செய்து கொள்கிறது. திமுக மாநில சுயாட்சி என்று பேசிப் பேசியே குடும்ப சுயாட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது” என்று ’துக்ளக்’ச் இதழின் ஆண்டு விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி பேசினார். ’துக்ளக்’ இதழின் 52-வது ஆண்டு விழா நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் துவக்க உரையாற்றிய ஆடிட்டர் குருமூர்த்தி, மோடியை, பாஜகவை, தமிழக … Read more