வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற டிச.15 வரை விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வீர, தீர செயல்களுக்கான ‘அண்ணா பதக்கம்’ ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின்போது முதல்வரால் வழங்கப்படுகிறது. பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் (சீருடைப் பணியாளர்கள் உட்பட) இந்த பதக்கங்கள் வழங்கப்படும். விண்ணப்பதாரர் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம். வயது வரம்பு கிடையாது. அந்தவகையில், 2026-ம் ஆண்டுக்கான ‘வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம்’ விருதுக்கு பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பம் மற்றும் பரிந்துரைகள் https://awards.tn.gov.in என்ற … Read more