75-வது பிறந்த நாள் விழா: பிரதமர் நரேந்திர மோடிக்கு ட்ரம்ப் உட்பட உலகத் தலைவர்கள் வாழ்த்து

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தனது 75-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு பல்​வேறு நாடு​களின் அதிபர்​கள், பிரதமர்​கள், ஆன்​மிகத் தலை​வர்​கள் உள்​ளிட்​டோர் வாழ்த்து தெரிவித்​துள்​ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் நள்ளிரவில் தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த தகவலை பிரதமர் மோடி ட்ரம்​புக்கு முன்னதாகவே சமூக வலை​தளத்​தில் பதி​விட்​டு​விட்​டார். அதில், “எனக்கு தொலைபேசி​யில் பிறந்த நாள் வாழ்த்து தெரி​வித்த என் நண்​பர், அதிபர் ட்ரம்​புக்கு நன்​றி. உங்​களைப் போல​வே, … Read more

ஒப்போ F31 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: ஒப்போ F31 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது … Read more

“திமுகவுக்கு மாற்று…” – தவெக தலைவர் விஜய்க்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

கரூர்: “இப்போதும் சில பேர் பேசிக் கொண்டிருக்கிறார்களே…‘திமுகவுக்கு நாங்கள்தான் மாற்று’ என்று என்ன மாற்றப் போகிறார்கள் ? தமிழ்நாட்டின் வளர்ச்சியை மாற்றி, பின்னால் இழுத்துச் செல்லப் போகிறார்களா ?” என்று தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக சாடினார் முதல்வர் ஸ்டாலின். அண்ணா பிறந்தநாள் விழா, பெரியார் பிறந்தநாள் விழா, திமுக தொடங்கப்பட்ட நாள் விழா என திமுகவின் முப்பெரும் விழா இன்று கரூர் – கோடங்கிப்பட்டியில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “திமுக என்ன … Read more

இந்தியா – பாக். மோதல் யாருடைய தலையீட்டாலும் நிறுத்தப்படவில்லை: ராஜ்நாத் சிங்

ஹைதராபாத்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் மோதல் எந்தவொரு மூன்றாம் தரப்பு தலையீட்டாலும் நிறுத்தப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். ஹைதராபாத்தில் உள்ள பரேட் மைதானத்தில் இன்று மத்திய அரசு ஏற்பாடு செய்த ‘ஹைதராபாத் விடுதலை தின’ கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் இந்தியாவின் சமூக நல்லிணக்கத்தின் மீது நடத்தப்பட தாக்குதலாகும். எதிர்காலத்தில் இதுபோல ஏதேனும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தால் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை … Read more

“தமிழகத்தில் பாஜகவுக்கு ‘நோ என்ட்ரி’தான்!” – திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

கரூர்: “அந்நாளும் சரி, இந்நாளும் சரி, எந்நாளுமே அடக்குமுறைக்கு இங்கே நோ என்ட்ரிதான். ஆதிக்கத்துக்கு இங்கே நோ என்ட்ரிதான். திணிப்புக்கு இங்கே நோ என்ட்ரிதான். மொத்தத்தில் இங்கே பாஜகவுக்கு நோ என்ட்ரிதான்” என்று முதல்வர் ஸ்டாலின் உறுதிபட கூறினார். அண்ணா பிறந்தநாள் விழா, பெரியார் பிறந்தநாள் விழா, திமுக தொடங்கப்பட்ட நாள் விழா என முப்பெரும் விழா இன்று கரூர் – கோடங்கிப்பட்டியில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்புரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: “2019-ஆம் ஆண்டு முதல் … Read more

பிரதமர் மோடி தாயாரின் ஏஐ வீடியோவை நீக்க காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு

பாட்னா: பிரதமர் நரேந்திர மோடியின் மறைந்த தாயாரின் ஏஐ வீடியோ தொடர்பான சர்ச்சையில், சம்பந்தப்பட்ட அந்த வீடியோவை அனைத்து சமூக ஊடக தளங்களிலிருந்தும் நீக்குமாறு பாட்னா உயர் நீதிமன்றம் காங்கிரஸ் கட்சிக்கு உத்தரவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயார் ஹீராபென் தொடர்பான ஏஐ வீடியோவை பிஹார் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இந்த வீடியோவில் பிரதமர் மோடி தூங்கும் போது, அவரது கனவில் வரும் தாய் ஹீராபென் மோடி, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட விவகாரங்களை குறிப்பிட்டு … Read more

“சட்டப்பேரவையில் இரட்டை இலக்க எண்களில் பாஜகவினர் நுழைவர்” – வானதி சீனிவாசன்

கோவை: தமிழக சட்டப்பேரவையில் வரலாற்றில் முதல் முறையாக இரட்டை இலக்க எண்களில் பாஜகவினர் நுழைவார்கள். அதுவே பிரதமர் மோடிக்கு நாங்கள் வழங்கும் பிறந்தநாள் பரிசு என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார். பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட பாஜக சார்பில், கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட புலியகுளம் பகுதியில் பெண்களுக்கான மருத்துவ முகாம் இன்று நடந்தது. பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ முகாமை தொடங்கி வைத்தார். … Read more

மகாராஷ்டிராவில் என்கவுன்ட்டர்: பெண் நக்சலைட்டுகள் இருவர் சுட்டுக் கொலை!

கட்சிரோலி: மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண் நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். எட்டப்பள்ளி தாலுகாவில் உள்ள கட்டா ஜம்பியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மொடஸ்கே கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டில் கட்டா தலம் நக்சலைட் உறுப்பினர்கள் முகாமிட்டுள்ளதாக கட்சிரோலி காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அஹேரி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சத்ய சாய் கார்த்திக் தலைமையில், அஹேரியைச் சேர்ந்த ஐந்து சி-60 கமாண்டோ பிரிவுகளுடன், கட்டா ஜம்பியா காவல் … Read more

நெற்பயிரில் மோடி பெயரை வரைந்து காஞ்சி பாஜகவினர் பிறந்தநாள் வாழ்த்து!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் அவளூரில் நெற்பயிரில் பிரதமர் மோடி பெயரை வரைந்து அந்தப் பகுதி விவசாயிகள் மற்றும் பாஜகவினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய பாஜகவினர், அவளூர் கிராமத்தில் நெற்பயிரில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை ஆங்கிலத்தில் வரைந்துள்ளனர். பி.எம்.கிசான் திட்டத்தை அமல்படுத்தியது, நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500 விலை வழங்கியது ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த பிரத்யேக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியத் தலைவர் சாட்டை பிரபாகரன் … Read more

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை பாஜக உறுதியாக ஆதரிக்கிறது: அமித் ஷா

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை பாஜக உறுதியாக ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ள அமித் ஷா, ஊடுருவியவர்களை பாதுகாக்கவே ராகுல் காந்தி பிஹாரில் யாத்திரை மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டினார். பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைநகர் டெல்லியில் 101 ஆயுஷ்மான் ஆரோக்கிய நிலையங்களை திறந்து வைத்தார். மேலும், டெல்லி அரசின் ரூ.1,600 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் … Read more