நெற்பயிரில் மோடி பெயரை வரைந்து காஞ்சி பாஜகவினர் பிறந்தநாள் வாழ்த்து!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் அவளூரில் நெற்பயிரில் பிரதமர் மோடி பெயரை வரைந்து அந்தப் பகுதி விவசாயிகள் மற்றும் பாஜகவினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய பாஜகவினர், அவளூர் கிராமத்தில் நெற்பயிரில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை ஆங்கிலத்தில் வரைந்துள்ளனர். பி.எம்.கிசான் திட்டத்தை அமல்படுத்தியது, நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500 விலை வழங்கியது ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த பிரத்யேக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியத் தலைவர் சாட்டை பிரபாகரன் … Read more

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை பாஜக உறுதியாக ஆதரிக்கிறது: அமித் ஷா

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை பாஜக உறுதியாக ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ள அமித் ஷா, ஊடுருவியவர்களை பாதுகாக்கவே ராகுல் காந்தி பிஹாரில் யாத்திரை மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டினார். பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைநகர் டெல்லியில் 101 ஆயுஷ்மான் ஆரோக்கிய நிலையங்களை திறந்து வைத்தார். மேலும், டெல்லி அரசின் ரூ.1,600 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் … Read more

ஆகாஷ் பாஸ்கரன் மீதான நடவடிக்கைக்கு தடை: உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு

சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக மேல் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக அமலாக்கத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்தது. … Read more

டெல்லி பிஎம்டபிள்யூ கார் விபத்து: கைதான பெண்ணுக்கு செப். 27 வரை நீதிமன்றக் காவல்

புதுடெல்லி: பிஎம்டபுள்யூ கார் விபத்தில் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி நவ்ஜோத் சிங் உயிரிழந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ககன்ப்ரீத் கவுரை செப்டம்பர் 27 வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி நவ்ஜோத் சிங், ஞாயிற்றுக்கிழமை மதியம் டெல்லி பங்களா சாஹிப் குருத்வாராவில் இருந்து தனது மனைவி சந்தீப் கவுருடன் வந்து கொண்டிருந்தபோது, ​​ரிங் ரோட்டில் உள்ள தவுலா குவான் அருகே வேகமாக வந்த நீல நிற பிஎம்டபுள்யூ … Read more

‘முகமூடியார் பழனிசாமி’ என்று இனி அழைப்போம்: டிடிவி விமர்சனம்

சென்னை: ‘23-ம் புலிக்கேசி’ பட பாணியில் இன்று முதல் எடப்பாடி பழனிசாமியை ‘முகமூடியார்’ பழனிசாமி என்று அழைக்க வேண்டும் என்று இபிஎஸ் – அமித் ஷா சந்திப்பு குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காட்டமாக விமர்சித்துள்ளார் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “செப்.15-ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் எப்படி எல்லாம் எடப்பாடி பழனிசாமி வீர வசனம் பேசினார். ‘நான் தன்மானம் மிக்கவன்’, ‘எனக்கு ஆட்சி அதிகாரம் முக்கியம் அல்ல’, … Read more

‘வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்’ – டெல்லி காற்று மாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: “சுற்றுச்சூழலை பாதிக்கும்படி வைக்கோலை எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் வைத்தால், அது சரியான செய்தியை அனுப்பும்.” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார். பட்டாசுகளை வெடிப்பதாலும், வைக்கோலை எரிப்பதாலும் தலைநகர் டெல்லியின் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, வைக்கோலை எரிக்கும் விவசாயிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகுல் மெஹ்ராவை நோக்கிப் பேசிய … Read more

டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? – இபிஎஸ் விளக்கம்

சென்னை: டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அதிமுக சார்பில் கடிதம் கொடுத்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேற்று சந்தித்து, தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவருக்கு இந்திய நாட்டின் உயரிய விருதான … Read more

அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாத புதிய இந்தியா இது: பிரதமர் மோடி

தார்: அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாத புதிய இந்தியா இது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலால் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் குடும்பம் மொத்தமாக அழிக்கப்பட்டுவிட்டதாக அந்த அமைப்பைச் சேரந்த முக்கியத் தீவிரவாதி ஒருவர் நேற்று பேசிய நிலையில், அதைச் சுட்டிக்காட்டி பிரதமர் மோடி இதனைத் தெரிவித்தார். பிரதமர் மோடி உரை: மத்தியப் பிரதேசத்தின் தார் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, … Read more

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தில் எங்களுக்கு சம்மதமே; ஆனால் இந்தியா ஏற்பதில்லை: பாக். துணை பிரதமர்

தோஹா: இருதரப்பு விவகாரங்களில் மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும் ஆனால், இந்தியா நிராகரிக்கிறது என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரும் துணைப் பிரதமருமான இஷாக் தர் தெரிவித்துள்ளார். தோஹாவில் நடைபெற்ற அரபு – இஸ்லாமிய அவசர உச்சிமாநாட்டின் இடையே பேட்டியளித்த இஷாக் தர், இந்தியா உடனான விவகாரம், கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் உள்ளிட்டவை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது: இந்தியா உடனான இருதரப்பு விவகாரங்களில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்வதில் … Read more

பெரியார் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி

சென்னை: பெரியாரின் பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர். பெரியாரின் பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “பெரியார் – இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு. தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி. பெரியார் என்றும் – எங்கும் நிலைத்திருப்பார்” எனத் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கேள்விகள் கேட்டு பகுத்தறிவை விதைத்தார். உணர்வுகளைத் தட்டி உழுப்பி உரிமைக்காக போராடினார். சமத்துவ சமுதாயம் … Read more