“போலி செய்திகளை மக்களிடம் சேர்க்க முயற்சி” – ராகுல் காந்தி மீது வானதி சீனிவாசன் விமர்சனம்

கோவை: தேர்தல் ஆணையத்துக்கு எந்தவித புகாரையும் அளிக்காமல் போலியாக சில செய்திகளை மக்களிடம் சேர்க்க ராகுல் காந்தி முயற்சி மேற்கொண்டு வருகிறார் என வானதி சீனிவாசன் தெரிவித்தார். கோவை சுங்கம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய பேருந்து நிழற்குடை அமைக்க பூமி பூஜை இன்று நடந்தது. கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கோவை … Read more

“வாக்குத் திருடர்களின் பாதுகாவலராக தேர்தல் ஆணையம் உள்ளது” – ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு

புதுடெல்லி: “நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி செல்வாக்காக இருக்கும் பகுதிகளில் லட்சக்கணக்கான வாக்காளர்களை ஆன்லைன் மூலம் நீக்கும் மோசடியை ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்படுத்துகிறது.” என வாக்குத் திருட்டு 2.0 குற்றச்சாட்டை நேற்று முன்வைத்த ராகுல் காந்தி, இன்று அதே கருத்தை வலியுறுத்தி அடுக்கடுக்காக ட்வீட்களைப் பதிவு செய்துள்ளார். அதில் அவர், தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டு நடப்பதற்கு வாட்ச்மேன் போல் காவல் காத்திருந்ததாக காட்டமான கருத்தை பதிவு செய்துள்ளார். நேற்றைய செய்தியாளர் சந்திப்பின் ஒரு பகுதியை … Read more

இ-ஆதார் செயலி விரைவில் அறிமுகம்: முகவரி, பெயரை எளிதாக திருத்தும் வசதி!

சென்னை: இந்தியாவில் அனைவருக்கும் ஆதார் அட்டை அவசியமானதாக அமைந்துள்ளது. இந்நிலையில், யுஐடிஏஐ அமைப்பு விரைவில் ‘இ-ஆதார்’ என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் பயனர்கள் டிஜிட்டல் முறையில் ஆதார் அட்டையில் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை தாங்களாகவே அப்டேட் செய்யலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த செயலியின் மூலம் மக்கள் ஆதார் சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆதார் அட்டைதாரர்கள் தங்களது தனிப்பட்ட விவரங்களை … Read more

எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக உயர்த்த முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: “மாநில அரசே எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாடடு நிதியாக ரூ.3 கோடி வழங்கும் நிலையில், எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும்” முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் (திஷா) குழுவின் ஐந்தாவது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதை கவனமுடன் … Read more

ஜென் ஸீ-க்கு அழைப்பு விடுத்த ராகுல்: நேபாள பாணி வன்முறையை தூண்டுவதாக சாடும் பாஜக!

புதுடெல்லி: “இந்த நாட்டின் இளைஞர்கள், நாட்டிலுள்ள மாணவர்கள், ஜென் ஸீ தலைமுறையினர் அரசமைப்பை, ஜனநாயகத்தை பாதுகாப்பார்கள். வாக்குத் திருட்டை தடுப்பார்கள். அவர்களுடன் நான் துணை இருப்பேன்.” என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ள நிலையில், ராகுல் காந்தியும் அவர் சார்ந்த காங்கிரஸுன் நேபாளத்தில் நடந்தது போன்ற ஒரு வன்முறைப் போராட்டத்தை தூண்டுவதாக பாஜக விமர்சித்துள்ளது. முன்னதாக நேற்று டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, “ ‘வாக்கு திருட்டு 2.0’ தகவலை தற்போது ஆதாரத்துடன் வெளியிடுகிறேன். … Read more

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் சட்டத்தை மீறி நடத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் நியமிக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் விசாரணையை தொடங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதாக கூறி அவர்களை விடுவிக்க கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்து. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை … Read more

உ.பி.யில் கோயில் கட்டுமானப் பணியின் போது ஆங்கிலேய ஆட்சிக் கால வெள்ளி நாணயங்கள் கண்டெடுப்பு

பாரபங்கி: உத்தரப் பிரதேசத்தின் பாரபங்கி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ லோதேஷ்வர் மகாதேவ தாம் கோயில் கட்டுமானப் பணிகளின் போது, ​​1882-ம் ஆண்டு வாக்கிலான ஆங்கிலேய ஆட்சிக் காலத்தை சேர்ந்த 75 வெள்ளி நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது. பாரபங்கி கோயில் ஸ்ரீ லோதேஷ்வர் மகாதேவ தாம் கோயில் நடைபாதை கட்டுமானத்திற்காக அஸ்திவாரம் தோண்டியபோது, ஆங்கிலேய ஆட்சிக் கால நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கட்டுமான தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்ட வெள்ளி நாணயங்கள் இருந்த ஒரு களிமண் பானையை முதலில் கண்டுபிடித்துள்ளனர். உடனடியான அவர்கள் … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் செப்.20, 21 தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளையும் (செப்.20), நாளை மறுதினமும் வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான … Read more

டெல்லி பல்கலை. மாணவர் சங்க தேர்தல்: தலைவர் பதவியை கைப்பற்றியது ஏபிவிபி

புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் வேட்பாளர் ஆர்யன் மான் 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்யன் மான் 28,841 வாக்குகளைப் பெற்றார். அதே நேரத்தில் காங்கிரஸ் மாணவர் அமைப்பான என்எஸ்யுஐ-ன் வேட்பாளர் ஜோஸ்லின் நந்திதா சவுத்ரி 12,645 வாக்குகளைப் பெற்றார். தேர்தல் நடத்தப்பட்ட நான்கு பதவிகளில், ஏபிவிபி அமைப்பு தலைவர், செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் … Read more

கரூர் பேருந்து நிலையம் அருகே இபிஎஸ் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரி வழக்கு: மீண்டும் மனு அளிக்க உத்தரவு

மதுரை: கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்பியிடம் மீண்டும் மனு அளிக்க அதிமுகவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் திருவிக, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கரூர் பேருந்து நிலையம் அருகே கரூர் – கோவை சாலையில் செப். 25-ம் தேதி மாலை 06.30 மணியளவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி … Read more