தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் சட்டத்தை மீறி நடத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் நியமிக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் விசாரணையை தொடங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதாக கூறி அவர்களை விடுவிக்க கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்து. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை … Read more

உ.பி.யில் கோயில் கட்டுமானப் பணியின் போது ஆங்கிலேய ஆட்சிக் கால வெள்ளி நாணயங்கள் கண்டெடுப்பு

பாரபங்கி: உத்தரப் பிரதேசத்தின் பாரபங்கி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ லோதேஷ்வர் மகாதேவ தாம் கோயில் கட்டுமானப் பணிகளின் போது, ​​1882-ம் ஆண்டு வாக்கிலான ஆங்கிலேய ஆட்சிக் காலத்தை சேர்ந்த 75 வெள்ளி நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது. பாரபங்கி கோயில் ஸ்ரீ லோதேஷ்வர் மகாதேவ தாம் கோயில் நடைபாதை கட்டுமானத்திற்காக அஸ்திவாரம் தோண்டியபோது, ஆங்கிலேய ஆட்சிக் கால நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கட்டுமான தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்ட வெள்ளி நாணயங்கள் இருந்த ஒரு களிமண் பானையை முதலில் கண்டுபிடித்துள்ளனர். உடனடியான அவர்கள் … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் செப்.20, 21 தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளையும் (செப்.20), நாளை மறுதினமும் வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான … Read more

டெல்லி பல்கலை. மாணவர் சங்க தேர்தல்: தலைவர் பதவியை கைப்பற்றியது ஏபிவிபி

புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் வேட்பாளர் ஆர்யன் மான் 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்யன் மான் 28,841 வாக்குகளைப் பெற்றார். அதே நேரத்தில் காங்கிரஸ் மாணவர் அமைப்பான என்எஸ்யுஐ-ன் வேட்பாளர் ஜோஸ்லின் நந்திதா சவுத்ரி 12,645 வாக்குகளைப் பெற்றார். தேர்தல் நடத்தப்பட்ட நான்கு பதவிகளில், ஏபிவிபி அமைப்பு தலைவர், செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் … Read more

கரூர் பேருந்து நிலையம் அருகே இபிஎஸ் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரி வழக்கு: மீண்டும் மனு அளிக்க உத்தரவு

மதுரை: கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்பியிடம் மீண்டும் மனு அளிக்க அதிமுகவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் திருவிக, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கரூர் பேருந்து நிலையம் அருகே கரூர் – கோவை சாலையில் செப். 25-ம் தேதி மாலை 06.30 மணியளவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி … Read more

அனைத்து மதங்களையும் நம்​பு​கிறேன், மதிக்கிறேன்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் விளக்கம்

புதுடெல்லி: ​நான் அனைத்து மதங்​களை​யும் நம்​பு​கிறேன். அனைத்து மதங்​களை​யும் மதிக்​கிறேன் என்று உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரி​வித்​துள்​ளார். மத்​திய பிரதேசத்​தின் சத்​தர்​பூர் மாவட்​டத்​தில் கஜு​ராஹோ கோயில்​கள் அமைந்​துள்​ளன. கடந்த 10, 11-ம் நூற்​றாண்​டில் சந்​தேல மன்​னர்​களால் இந்த கோயில்​கள் கட்​டப்​பட்​டன. கடந்த 12-ம் நூற்​றாண்​டின்​போது சுமார் 20 சதுர கிலோ மீட்​டர் பரப்​பள​வில் 85-க்​கும் மேற்​பட்ட கோயில்​கள் இருந்​த​தாக வரலாற்று பதிவு​கள் குறிப்​பிடு​கின்​றன. முகலாயர் ஆட்​சிக் காலத்​தில் கஹு​ராஹோ கோயில்​கள் சேதப்​படுத்​தப்​பட்​டன. இதன்​காரண​மாக தற்​போது … Read more

நாகப்பட்டினம், திருவாரூரில் நாளை விஜய் சுற்றுப்பயணம்: இடம், நேரம் அறிவிப்பு

சென்னை: தவெக தலைவர் விஜய் தனது தமிழக சுற்றுப்பயணத்தை கடந்த வாரம் சனிக்கிழமை (செப்.13) அன்று திருச்சியில் தொடங்கினார். அந்த சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து நாளை (செப்.20) நாகப்பட்டினம் மாவட்டத்திலும், திருவாரூர் மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக தவெக தலைமை நிலையக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை நாகப்பட்டினம் மாவட்டத்திலும், … Read more

தேர்தல்களை ஹேக்கர்களிடம் ஒப்படைக்க முடியுமா? – வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து திக்விஜய சிங் சந்தேகம்

புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய சிங், நாட்டின் தேர்தல்களை ஹேக்கர்களிடம் ஒப்படைக்கலாமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படுவது தொடர்பான ஒரு செய்தியை பகிர்ந்து திக்விஜய சிங் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘இன்றைய மேம்பட்ட தொழில்நுட்ப யுகத்தில் நாட்டின் தேர்தல்களை ஹேக்கர்களிடம் ஒப்படைக்க முடியுமா? சற்று யோசித்துப் பாருங்கள். வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி இந்தியாவின் தேர்தல்களை நடத்த வேண்டாமா?. … Read more

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி சிபிஎம் தீர்மானம்

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​ தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2025 செப்டம்பர் 18,19 தேதிகளில் கோவில்பட்டியில் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநில செயலாளர் பெ.சண்முகம், மத்திய குழு உறுப்பினர்கள் பி.சம்பத், கே. பாலபாரதி, மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் … Read more

தெலங்கானா இளைஞர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? – உடலை இந்தியா கொண்டுவர உறவினர்கள் கோரிக்கை!

ஹைதராபாத்: அமெரிக்காவில் தெலங்கானாவை சேர்ந்த 30 வயதான மென்பொருள் தொழில்நுட்ப வல்லுநர் போலீஸாரால் கடந்த 3-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், அவரது உடலை தாயகம் கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் உதவியை அணுகி உள்ளனர். இதன் மூலம் இந்திய தூதரகத்தின் துணை அவர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர். தெலங்கானா மாநிலத்தின் மஹபூப்நகரைச் சேர்ந்தவர் முகமது நிசாமுதீன். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் தங்கியிருந்த அறையில் உடன் இருந்தவருடன் ஏற்பட்ட … Read more