சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு; பலர் காயம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது கோர்பா பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். பிலாஸ்பூர் மாவட்டம் பிலாஸ்பூர் – காட்னி இடையே லால் காடன் பகுதிக்கு அருகில் செவ்வாய்க்கிழமை மாலை இந்த விபத்து நேரிட்டுள்ளது. இதில், பயணிகள் ரயிலின் முன்பக்க பெட்டிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் பிலாஸ்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜ்னீஷ் உறுதிப்படுத்தியுள்ளார். “மீட்புப் பணிகள் … Read more

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறையாக பாகிஸ்தானுக்கு சீக்கியர்கள் புனிதப்பயணம்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறையாக இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளனர். அவர்களுக்கு பாகிஸ்தான் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்தும் மலர்களைத் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து, அதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை எடுத்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தணிந்துள்ள நிலையில், … Read more

விருதுநகரில் நள்ளிரவில் பிரச்சாரம்: கிருஷ்ணசாமி மீது வழக்குப் பதிவு

விருதுநகர்: நள்ளிரவில் பிரச்சாரம் மேற்கொண்டதால் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதிய தமிழகம் கட்சி சார்பில் 2026 ஜனவரி 7ம் தேதி மதுரையில் 7வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தற்போது விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிருஷ்ணசாமி மாநாட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதோடு, ஒவ்வொரு … Read more

பிஹாரில் தே.ஜ. கூட்டணி 160-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று ஆட்சியமைக்கும்: அமித் ஷா

பாட்னா: ‘பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியான வெற்றியைப் பெறும். எங்கள் கூட்டணி 160-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் அடுத்த அரசாங்கம் அமையும்’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அமித்ஷா அளித்த பேட்டியில், “நாங்கள் 160-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று பிஹாரில் மீண்டும் ஆட்சி அமைப்போம். நிதிஷ் குமார் இங்கு முதல்வர், நரேந்திர மோடி அங்கு பிரதமர். மன்மோகன் சிங் பிரதமரானபோது, … Read more

மீண்டும் திமுக துணை பொதுச் செயலாளராக பொன்முடி நியமனம்: மு.பெ.சாமிநாதனுக்கும் கட்சிப் பதவி

சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோர் திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கட்சி நிர்வாகிகளை அறிவித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக சார்பில் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களாக க.பொன்முடி மற்றும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பணியாற்றி வந்த சாமிநாதன், துணைப் பொதுச் செயலாளராக … Read more

3 மாநிலங்களில் தேடப்பட்ட பெண் மாவோயிஸ்ட் சரண்

பாலாகட்: ரூ.14 லட்​சம் பரிசு தொகை அறிவிக்​கப்​பட்​டிருந்த முக்​கிய பெண் மாவோ​யிஸ்ட் மத்​திய பிரதேசத்​தில் சரண் அடைந்​தார். மத்​திய பிரதேசம், சத்​தீஸ்​கர், மகா​ராஷ்டிர மாநிலங்​களில் பல்​வேறு வன்​முறை​களில் ஈடு​பட்டு வந்​தவர் சுனி​தா. தடை செய்​யப்​பட்ட மாவோ​யிஸ்ட் இயக்​கத்​தில் மத்​திய கமிட்டி உறுப்​பின​ராக​வும் இருந்​தார். இவர் மீது 3 மாநிலங்​களி​லும் பல்​வேறு வழக்​கு​கள் உள்​ளன. அத்​துடன், சுனிதா பற்றி தகவல் தெரி​விப்​பவர்​களுக்கு 3 மாநிலங்​களும் சேர்ந்து 14 லட்​சம் பரிசு வழங்​கப்​படும் என்று கூட்​டாக அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில், ம.பி.​யின் … Read more

கரூர் வெண்ணெய் மலை பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு சீல்: மக்கள் போராட்டம்

கரூர்: கரூர் வெண்ணெய் மலை பகுதியில் உள்ள பாலசுப்பிரமணியம் கோயில் நிலத்தில், ஆக்கிரமிப்பு கடைகள் சீல் வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர். கரூர் வெண்ணெய் மலை பகுதியில் பாலசுப்பிரமணியம் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான 547 ஏக்கர் நிலங்களில் பலர் குடியிருப்புகள் கட்டி வசித்து வந்தனர். இது தொடர்பாக திருத்தொண்டர் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் கடந்த 2019 ஆம் ஆண்டு மதுரை சென்னை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். ஆனால் இது … Read more

அணுசக்தி ஆராய்ச்சி ரகசியங்களை விற்றதாக கைது செய்யப்பட்ட போலி விஞ்ஞானி யார்? – திடுக்கிடும் பின்னணி தகவல்கள்

மும்பை: மகா​ராஷ்டிர மாநிலம் மும்​பை​யில் குற்​றப் பிரிவு போலீ​ஸார் கடந்த மாதம் 60 வயதுடைய ஒரு​வரை கைது செய்​தனர். அவர் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்​தின் (பார்க்) விஞ்​ஞானி என்று கூறிக் கொண்டு நாடு முழு​வதும் பயணம் செய்​துள்​ளார். இதுகுறித்து மும்பை போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்​தி​ய​தில் பல திடுக்​கிடும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. இதுகுறித்து போலீ​ஸார் கூறிய​தாவது: பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்​தின் விஞ்​ஞானி என்று கூறிக் கொண்டு ஜார்​க்கண்ட் மாநிலம் ஜம்​ஷெட்பூரைச் சேர்ந்த அக்​தர் … Read more

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மூவரையும் பிடித்தது எப்படி? – காவல் ஆணையர் விளக்கம்

கோவை: கோவை பீளமேடு விமான நிலையம் அருகே, கல்லூரி மாணவி நேற்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீஸார் விசாரித்து மூவரை கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் ஆ.சரவணசுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மாணவி வன்கொடுமை வழக்கில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் (எ) கருப்பசாமி, இவரது சகோதரர் கார்த்திக் (எ) காளீஸ்வரன் (21), இவர்களது தூரத்து உறவினர் மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா (எ) தவசி (20) … Read more

பொங்கல் பண்டிகைதோறும் மகளிர்க்கு ரூ.30,000 நிதியுதவி: தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

பாட்னா: பொங்கல் பண்டிகைதோறும் மகளிர்க்கு ரூ.30,000 நிதியுதவி வழங்கப்படும் என்று மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நவ. 6, 11 என 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்டத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ், “பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மகா கூட்டணி … Read more