இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம் 

நாகப்பட்டினம்: இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகமீனவர்கள் 31 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். அவர்களை மீட்கக் கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நாகை மாவட்​டம் அக்​கரைப்​பேட்​டை, நம்​பி​யார் நகர் மீன்​பிடி துறை​முகத்​தில் இருந்து 3 விசைப்​படகு​களில் 31 மீனவர்​கள் அக்​.31-ம் தேதி கடலுக்கு மீன்​பிடிக்க சென்​றனர். நேற்று முன்​தினம் இரவு இந்​திய எல்லை பகு​தி​யில் மீன்​பிடித்​துக் கொண்​டிருந்​த​போது, அங்கு வந்த இலங்கை கடற்​படை​யினர் மீனவர்​களை … Read more

அனில் அம்பானியின் ரூ.7,500 கோடி சொத்துகள் முடக்கம்: பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை நடவடிக்கை – பின்னணி என்ன?

மும்பை: தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.7,500 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள், வங்கிகளில் பெற்ற ரூ.20 ஆயிரம் கோடி கடனை முறையாக திருப்பிச் செலுத்தவில்லை என புகார் எழுந்தது. இதுகுறித்து, அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதில், கடன் தொகையை முறையாக பயன்படுத்தாமல் போலி நிறுவனங்களுக்கு மாற்றிவிட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு … Read more

பொதுக் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறை வகுக்க அனைத்துக் கட்சி கூட்டம்: நவ.6-ல் நடக்கிறது 

சென்னை: தேர்​தல் பிரச்​சா​ரக் கூட்​டங்​கள், பொதுக் கூட்​டங்​களுக்​கான வழி​காட்டு நெறி​முறை​களை வகுப்பது குறித்து ஆலோ​சிக்​கும் வகை​யில் மூத்த அமைச்​சர்​கள் தலை​மை​யில் நவ.6-ம் தேதி அனைத்​துக் கட்சி கூட்​டம் நடை​பெற உள்​ளது. இதில் பங்கேற்​கு​மாறு அரசி​யல் கட்​சிகளுக்கு தலை​மைச் செயலர் அழைப்பு விடுத்​துள்​ளார். கரூரில் கடந்த செப்​.27-ம் தேதிதவெக தலை​வர் விஜய் பங்கேற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசல் ஏற்​பட்டு 41 பேர் உயி​ரிழந்​தனர். 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இந்த சம்​பவம் நாடு முழு​வதும் பெரும் அதிர்ச்சியை ஏற்​படுத்​தி​யது. இதையடுத்​து, … Read more

ஆர்ஜேடி தேர்தல் சுவரொட்டிகளில் லாலுவின் படத்தை ஏன் காணவில்லை? – தேஜஸ்விக்கு பிரதமர் மோடி சூசகமான கேள்வி

புதுடெல்லி: பிஹாரின் தேர்​தல் பிரச்​சார சுவரொட்​டிகளில் இந்த மாநிலத்​தில் காட்​டாட்​சிக்கு காரண​மானவரின் (லாலு பிர​சாத்) படங்​களை ஏன் பயன்​படுத்​த​வில்லை என்று பிரதமர் மோடி மறை​முக​மாக ஆர்​ஜேடி தலை​வர் தேஜஸ்வி யாதவுக்கு கேள்வி எழுப்பி உள்​ளார். கதி​ஹாரில் நடை​பெற்ற பிரச்​சார கூட்​டத்​தில் பிரதமர் மோடி இதுகுறித்து பேசி​ய​தாவது: பிஹாரில் ஒட்​டப்​பட்​டுள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) மற்​றும் காங்​கிரஸ் கட்​சிகளின் சுவரொட்​டிகளில், பிஹாரில் கட்​டாட்​சியை கொண்டு வந்த நபரின் படங்​கள்(லாலு பிர​சாத்) முற்​றி​லு​மாக காண​வில்​லை. ஒரு சில இடங்​களில் … Read more

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் முடிந்த பிறகு நடத்தினால் பயனில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன் கருத்து

சென்னை: ‘​வாக்​காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி​களை தேர்​தல் முடிந்த பிறகு நடத்​தி​னால் பயனில்​லை’ என மத்​திய அமைச்​சர் எல்​.​முரு​கன் தெரி​வித்​தார். சென்னையில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று அவர் கூறியது: திமுக மீது எப்​போதெல்​லாம் ஊழல் குற்​றச்​சாட்​டு​கள் வரு​கிறதோ, அப்​போதெல்​லாம் அதை திசை திருப்​புவதற்​காக பல்​வேறு விஷ​யங்களைக் கையில் எடுப்​பது வாடிக்​கை​யாக இருக்​கிறது. அப்​படித்​தான் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்தத் திட்​டத்தை கையில் எடுத்​துள்​ளனர். அந்​தக்கூட்​டத்​தில் கலந்​து​கொண்ட மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ, 75 லட்​சம் போலி … Read more

கொடிக் கம்பங்களை அகற்ற தடை கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

புதுடெல்லி: தமிழ்கத்தில் அரசி​யல் கட்​சிகளின் கொடிக் கம்​பங்​களை அகற்ற தடைகோரி இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. தமிழகத்தில் பொதுஇடங்களில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை வைப்பதற்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் தேசிய பொதுச் செய​லா​ளர் டி.ராஜா சார்​பில் வழக்​கறிஞர் ராம் சங்​கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்​முறை​யீடு மனு தாக்​கல் தாக்​கல் செய்​தார். அதில், தமிழகத்​தில் … Read more

“வடமாநில பெண்களை தவறாக பேசிய அமைச்சர் துரைமுருகனை நீக்கியிருக்க வேண்டும்” – ஹெச்.ராஜா

மதுரை: வடமாநில பெண்களை தவறாக பேசிய அமைச்சர் துரைமுருகனை பதவியில் இருந்து நீக்கி இருக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி, அந்த இயக்கம் செய்த பணிகள் குறித்த துண்டு பிரசுரங்களை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மதுரை எஸ்எஸ்.காலனி பகுதியில் பொது மக்களுக்கு வழங்கினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியது: ”கடந்த 35 ஆண்டு காலமாக மாவட்ட தலைவர் தொடங்கி முக்கிய தலைமை பொறுப்புகளை முழு சுதந்திரத்துடன் … Read more

ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு அதிர்ச்சியில் இருந்து மீளாத பாகிஸ்தான், காங்கிரஸ்: பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்

பாட்னா: ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்​கைக்கு பிறகு பாகிஸ்​தானும் காங்​கிரஸும் இன்​ன​மும் அதிர்ச்​சி​யில் இருந்து மீள​வில்லை என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். பிஹார் தேர்​தலை​யொட்டி அரா, நவா​டா, பாட்னா உள்​ளிட்ட பகு​தி​களில் பிரதமர் மோடி நேற்று பிரச்​சா​ரம் செய்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: தேசிய ஜனநாயக கூட்​டணி சார்​பில் தேர்​தல் அறிக்கை வெளி​யிடப்​பட்டு உள்​ளது. இந்த அறிக்கை மாநிலத்​தின் வளர்ச்​சி, உண்​மையை அடிப்​படை​யாக கொண்​டது. காட்​டாட்சி கூட்​டணி (ஆர்​ஜேடி- காங்​கிரஸ்) சார்​பில் தேர்​தல் அறிக்கை வெளி​யிடப்​பட்டு … Read more

தமிழகத்தில் எஸ்ஐஆர் நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு!

சென்னை: தமிழகத்தில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணியை நடைமுறைப்படுத்தற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து திமுக வெளியிட்ட அறிக்கையில், “தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நவ.2-ல் சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ‘தமிழ்நாட்டு வாக்காளர்கள் அனைவரின் வாக்குரிமையையும் நிலைநாட்ட உச்சநீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை. தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பாற்றிட தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது … Read more

“என்டிஏ என்றால் வளர்ச்சி; ஆர்ஜேடி – காங். என்றால் அழிவு” – பிஹார் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு

சஹர்சா(பிஹார்): “வளர்ச்சிக்கான அடையாளமாக விளங்குவது தேசிய ஜனநாயகக் கூட்டணி. அதேநேரத்தில், அழிவுக்கான அடையாளமாக விளங்குவது ஆர்ஜேடி – காங்கிரஸ் கூட்டணி” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சஹர்சா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “இந்த தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கப் போகும் பல மகன்களும் மகள்களும் எனக்கு இருக்கிறார்கள். என் வாழ்க்கையில் முதல் முறையாக வாக்களித்தபோது, என் வாக்கு வீணாகக் கூடாது … Read more