“எங்கள் தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி அடித்துள்ளது என்டிஏ” – தேஜஸ்வி விமர்சனம்
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி தங்கள் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்ட நிலையில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகள் தங்கள் தேர்தல் அறிக்கையைப் பார்த்து காப்பி அடிக்கப்பட்டவை என தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ், “அவர்கள் எல்லாவற்றையுமே காப்பி அடிக்கிறார்கள். அவர்களின் வாக்குறுதிகள் அனைத்தும் எங்கள் தேர்தல் அறிக்கையைப் பார்த்து காப்பி அடிக்கப்பட்டவையே. சமீபத்தில் நாங்கள் … Read more