சொத்து குவிப்பு வழக்கு..மாஜி சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை

Tamilnadu oi-Jeyalakshmi C புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் அருகே மஞ்சக்கரணையில் மருத்துவக்கல்லூரி அமைக்க முறைகேடாக சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் பெயரில் 58 கோடிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார் என விஜயபாஸ்கருக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது. … Read more

ஹை அலர்ட்.. ராணுவத்தின் வளையத்திற்குள் வந்தது காஷ்மீர்! ஸ்ரீநகரில் இன்று ஜி20 உச்சி மாநாட்டு கூட்டம்

India oi-Halley Karthik ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று ஜி20 பணிக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இம்மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் சர்வதேச கூட்டம் இது. எனவே பல அடுக்கில் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. சர்வதேச அளவில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் இந்த ஆண்டு தலைமை இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டு இந்தோனேசியாவுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் … Read more

ஜம்மு காஷ்மீரில் ஜி 20 கூட்டம்.. \"நோ\" சொன்ன சீனா.. மீட்டிங்கிற்கு வர மறுப்பு.. ஏன் தெரியுமா?

India oi-Shyamsundar I ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் நடக்கும் இந்த ஜி20 சுற்றுலா பணிக்குழு கூட்டத்தை புறக்கணிக்க சீனா முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனா, சர்ச்சைக்குரிய பகுதியில் (ஜம்மு காஷ்மீரில்) இதுபோன்ற சந்திப்புகளை நடத்துவதை உறுதியாக எதிர்ப்பதாக தெரிவித்து இந்த நிகழ்வை புறக்கணித்து உள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், “சர்ச்சைக்குரிய ஜம்மு காஷ்மீர் பகுதியில் எந்த விதமான ஜி20 கூட்டங்களையும் நடத்துவதை … Read more

மகன் கல்யாணத்துக்கு ஸ்டாலினிடம் தேதி கேட்டு காத்திருந்த அப்துல் வஹாப்! இடிவிழுந்ததை போல் ஷாக்!

Tamilnadu oi-Arsath Kan நெல்லை: திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அப்துல் வஹாப், அண்மையில் தான் தனது மகனுக்கு நிச்சயத்தார்த்தம் நடத்தியிருந்தார். அதைத் தொடர்ந்து தனது மகன் திருமணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடத்த வேண்டும் என்ற ஆசையுடன் அவரிடம் தேதி கேட்டு காத்திருந்து வந்தார் அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. ஆனால் அதற்குள் அவரிடமிருந்த மாவட்டச் செயலாளர் பதவியை பறித்து ஹைவோல்ட் ஷாக் கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அப்துல் வஹாப் மீதான முதலமைச்சரின் … Read more

முஸ்லிம் இளைஞருடன் மகளுக்கு திருமணம்.. இந்துத்வா அமைப்புகள் எதிர்ப்பால் பின் வாங்கிய பாஜக நிர்வாகி

India oi-Mani Singh S டேராடூன்: பாஜக நிர்வாகி தனது மகளை முஸ்லிம் இளைஞருக்கு மகளை திருமணம் செய்து வைப்பதற்கு இந்துத்வா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்புக்கு பணிந்து மகளின் திருமணத்தை ஒத்திவைப்பதாக உத்தரகாண்ட் பாஜக நிர்வாகி தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பவ்ரி ஹர்வால் மாவட்டத்தின் பவ்ரி நகராட்சியின் தலைவராக யஷ்பால் பேனம் என்பவர் உள்ளார். பாஜக பிரமுகரான இவரது மகள் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்தார். மகளின் விருப்பத்திற்கு … Read more

கர்நாடகாவில் வாங்குன அடி போலவே கன்பார்ம்..சீக்கிரமா தலையிடுங்க சாமீகளா..ம.பி. பாஜக சீனியர்கள் கதறல்!

India oi-Mathivanan Maran போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்வர் சவுகானுக்கும் மாநில பாஜக கட்சிக்கும் இடையேயான முட்டல் மோதல் சீனியர் தலைவர்களை கதிகலங்க வைத்துள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. இதனால் தென்னிந்தியாவில் பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் படுதீவிர பிரசாரம் செய்தும் படுதோல்வி கிடைத்திருப்பதைத்தான் பாஜகவினரால் ஜீரணிக்க முடியவில்லை. இந்நிலையில் தெலுங்கானா, … Read more

இந்திய பிரதமர் எங்கே? பூரித்த முகத்தோடு தேடிவந்த ஜோபைடன்! ஆரத்தழுவிய மோடி! ஜப்பானில் நெகிழ்ச்சி

International oi-Nantha Kumar R டோக்கியோ: ஜப்பானில் ஜி7 மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் தான் பல்வேறு உலக நாடுகளின்பிரதிநிதிகள் மத்தியில் பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் ஜோபைடன் தேடி வந்தார். இதை கவனித்து பிரதமர் மோடி செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி 6 நாள் சுற்றுப்பயணமாக 3 வெளிநாடுகளுக்கு புறப்பட்டு சென்றார். நேற்று முன்தினம் பிரதமர் மோடி ஜப்பான் சென்ற நிலையில் வரும் 24ம் தேதி வரை வெளிநாடுகளில் … Read more

அடடே பாருங்க! 58 வயதில் 8ஆவது குழந்தைக்கு தந்தையானர் போரீஸ் ஜான்சன்! நெட்டிசன்கள் ரிஆக்ஷன் என்ன

International oi-Vigneshkumar லண்டன்: பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமரான போரிஸ் ஜான்சன் குறித்து சில சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் போரீஸ் ஜான்சன். பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் 2019 முதல் 2022 வரை பிரிட்டன் நாட்டின் பிரதமர் பதவியில் இருந்தவர் போரிஸ் ஜான்சன். இவர் அதற்கு முன்பும் கூட பல ஆண்டுகளில் பிரிட்டன் அரசியலில் முக்கிய சக்தியாகவே இருந்துள்ளார். லண்டன் மேயராக இருந்த போது, மிகச் சிறப்பாக செயல்பட்டதாலே இவரால் … Read more

காவலர்களை அவதூறாக பேசினால் காலை உடைக்கலாமா? முதல்வரையே டேக் செய்த அறப்போர் இயக்கம்.. சர்ச்சை

Tamilnadu oi-Velmurugan P சென்னை: மதுபோதையில் வந்து காவலர்களை அவதூறாக பேசியவரை காவல் நிலையத்தில் வைத்து காலை உடைக்கலாம் என்று என்று எந்த சட்ட பிரிவு கூறுகிறது என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த நபர், அதன் பின்னர் மாவு கட்டுடன் காட்சியளித்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மது அருந்துவது முன்பெல்லாம் நாட்டுக்கு வீட்டுக்கு கேடு என்று போர்டு இருக்கும். இப்போது மது … Read more

ரூ.2000 நோட்டு .. பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவரிடமும் பொது மன்னிப்பு கேட்கணும்.. சீமான் ஆவேசம்

Tamilnadu oi-Velmurugan P சென்னை: 2000 ரூபாய் நோட்டுக்கள் அக்டோபர் 1ம் தேதி முதல் செல்லாது என்ற அறிவிப்பிற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தி உள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பாண்டு செப்டம்பர் மாதம் முதல் 2000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற இந்திய ஒன்றிய அரசின் அறிவிப்பு நாட்டு … Read more