மிடில் கிளாஸ் மேல டார்கெட்..எங்க போய் முடியுமோ? தினம் ஒரு ஷாக் .. ஆனந்த் சீனிவாசன் கொதிப்பு

Tamilnadu oi-Jeyalakshmi C சென்னை: பண மதிப்பிழப்பு சமானிய மக்களையும் விவசாயிகளையும் நடுத்தர மக்களையும் அதிகம் பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார். 5 வருடத்திற்கு ஒருமுறை பணம் செல்லாது என்று சொன்னால் பணத்தின் மீது யாருக்கு நம்பிக்கை வரும். நாட்டின் மீது யாருக்கு நம்பிக்கை இருக்கும் என்றும் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு முதல் கடந்த 7 ஆண்டுகளாக புழக்கத்தில் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படுவதாக … Read more

நானோ சிப்பெல்லாம் இருக்குன்னு.. எப்படியெல்லாம் உருட்டுனாங்க.. 2000 ரூபாய் நோட்டு விடை பெறுவது ஏன்?

Tamilnadu oi-Velmurugan P சென்னை: 2000 ரூபாய் நோட்டுல நானோ சிப்பெல்லாம் இருக்னுக்கு சிலர் பெரிய உருட்டு உருட்டுனாங்க… உங்க வாய் உங்க உருட்டு என்பது போல், அப்போது பலரும் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் ஆன போது வதந்திகளை பரப்பினார்கள். அப்படி பரவிய வதந்திகளில் ஒன்றுதான் 2000 ரூபாய் நோட்டுல்ல நானோ சிப்பெல்லாம் இருக்குன்னு சொன்னது. 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு 8 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சிகளில் … Read more

தமிழக மக்கள் அனைவரையும் மதுவுக்கு அடிமையாக மாற்றியது தான் சாதனை.. திமுகவை விமர்சித்த ஜெயக்குமார்

Tamilnadu oi-Mani Singh S சென்னை: தமிழ்நாட்டில் கள்ளச்சாராய ஆறு சர்வ சாதாரணமாக ஓடுகிறது என்றும் அதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து பேசினார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் கள்ளச்சாராய ஆறு சர்வ சாதாரணமாக ஓடுகிறது. அதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. உள்துறையை கையில் வைத்து இருக்கும் முதல்வர் ராஜினாமா செய்ய வெண்டும். செந்தில் பாலாஜி ராஜினாமா … Read more

பல மடங்கு விலை அதிகமாக ‘பிளாக்’கில் பறக்கும் ஐபிஎல் டிக்கெட்.. விவரங்களை தாக்கல் செய்யக்கோரி வழக்கு!

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் பல மடங்கு அதிக விலையில் விற்கப்படுவதாக கூறப்படும் நிலையில், சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை குறித்த விவரங்களை தாக்கல் செய்யக் கோரி சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சி.எஸ்.கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி விரைவில் ஓய்வு பெற இருப்பதால் அதற்குள் அவர் மைதானத்தில் விளையாடுவதை பார்க்க வேண்டும் என்பதற்காக ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் … Read more

வழக்கமான வெயில் இல்லை இது! இயல்பை விட அதிகம்! மக்களே கவனமாக இருங்க! முதல்வர் ஸ்டாலின் தரும் அலர்ட்!

Tamilnadu oi-Arsath Kan சென்னை: தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகரித்துள்ளதால், திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்ட தூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி கூடுதல் வெப்பம் நிலவக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு; தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு … Read more

\"சூடுபட்ட பூனை\".. பேசாமல் பிஜேபி தலைவராகிடலாம்.. நெஞ்சம் எல்லாம் வஞ்சம்.. ஆஹா, திமுக யாரை சொல்கிறது?

Tamilnadu oi-Hemavandhana சென்னை: ஆளுநர் ரவி விளம்பர வெளிச்சத்தில் இருக்க நினைத்தால், தனது பதவியைத் துறந்து அண்ணாமலை போல ஏதாவது ஒரு மாநிலத்தின் பி.ஜே.பி. தலைவராக ஆகிவிடலாம். அதைவிடுத்து தாறுமாறாகச் செயல்பட்டு ஆளுநர் பதவிக்குரிய தகுதியைச் சீரழிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து வருவதை நிறுத்துவது நாட்டுக்கு நல்லது என்று திமுக நாளேடு கடும் விமர்சனம் செய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கள்ளச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம் … Read more

ஆரம்பம் அதிரடி.. \"ஜி7\".. குவாட் உள்ளிட்ட மாநாடுகளில் பங்கேற்க வெளிநாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி

International oi-Halley Karthik டோக்கியோ: ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பான் செல்கிறார். ஜப்பானை தொடர்ந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் மோடி செல்கிறார். சர்வதேச அளவில் கனடா, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ஜி7 எனும் கட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் வருடாந்திர மாநாடு இன்று (மே19) ஜப்பானில் தொடர்கிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்தியாவுக்கு … Read more

ஐஐடி சென்னை – பர்மிங்காம் பல்கலை. இணைந்து Data Science, Artificial Intelligence முதுநிலை படிப்புகள்!

Tamilnadu oi-Mathivanan Maran சென்னை: இந்திய தொழில்நுட்பக் கழகமும் (ஐஐடி சென்னை), பர்மிங்காம் பல்கலைக்கழகமும் இணைந்து தரவு அறிவியல் (Data Science) மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence ) ஆகியவற்றில் புதிய முதுநிலைப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கின்றன. இப்படிப்புக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள் இரு பல்கலைக்கழகங்களாலும் வழங்கப்படும் பட்டத்தைப் பெறுவதோடு, பர்மிங்காம் மற்றும் சென்னையில் படிக்கலாம். அவர்கள் ஆராய்ச்சித் திட்டத்தையும் மேற்கொள்வர். இதர சர்வதேச படிப்புகளுக்கான கட்டணத்தை விட இதற்கான கட்டணம் குறைவாகும். இப்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான … Read more

சுட்டெரிக்கும் அதீத வெப்பம்.. கோடையுடன் முடியாது! புது குண்டை போட்ட சர்வதேச வானிலை மையம்! என்னாச்சு

International oi-Vigneshkumar ஜெனீவா: இப்போதே வெப்பம் நம்மை பாடாய் படுத்தி வரும் நிலையில், இந்த அதீத வெப்பம் இத்துடன் முடியாது என்று புதிய குண்டை சர்வதேச வானிலை மையம் போட்டுள்ளது. அதற்கான காரணத்தைப் பார்க்கலாம். இந்தாண்டு கோடை வெயில் கொளுத்தி வருகிறது. மக்கள் வெளியே கூட செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் மிக மோசமாக இருக்கிறது. கோடைக் காலம் முடியும் வரை வெப்பம் இப்படி அதிகமாகவே இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோடைக் காலம் மட்டுமின்றி … Read more

மணிப்பூர்: பயங்கரவாதிகளின் தாக்குதல் சதியை முறியடித்த ராணுவம்- 3 கிலோ வெடிமருந்து சிக்கியது!

India oi-Mathivanan Maran இம்பால்: மணிப்பூரில் ராணுவத்தினரை இலக்கு வைத்து திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர் மீதான தாக்குதலுக்காக வைக்கப்பட்டிருந்த 3 கிலோ வெடிமருந்து உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மணிப்பூர் மாநிலத்தில் நாகா- குக்கி இன பழங்குடிகள் மற்றும் மைத்தேயி இன மக்களிடையே அண்மையில் பெரும் மோதல் வெடித்தது. மைத்தேயி இன மக்களை பழங்குடி பட்டியலில்- எஸ்டி பட்டியலில் சேர்க்க கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்த மோதல் நிகழ்ந்தது. இம்மோதல்களால் மணிப்பூர் மாநிலமே பற்றி எரிந்தது. … Read more