கோச்சிங் கிளாஸ் எதுவும் போகல.. யூடியூப் வீடியோ பார்த்து ரயில்வேயில் வேலை.. சாதித்த இளைஞர்..சபாஷ்

India oi-Mani Singh S ஐதராபாத்: சிறப்பு வகுப்புகள் எதற்கும் போகாமல், யூடியூப்பில் போட்டி தேர்வுகளுக்கு தேவையான பாடங்களை பார்த்து தேர்வுக்கு தயாரான ஆந்திர இளைஞர் ரயில்வேயில் இரண்டு பணியிடங்களுக்கு தேர்வு ஆகியுள்ளார். வறுமை நிலையிலும் சாதித்த இந்த இளைஞர் குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இன்றைய கால கட்டத்தில் அரசு வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாகிவிட்டது. அரசு மற்றும் அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் வேலையை எப்படியாவது ஒரு வேலையில் சேர்ந்து விட வேண்டும் நாடு … Read more

அம்பானி இதையெல்லாம் கூட செய்வாரா.. வியப்பில் வாயடைத்து போன நெட்டிசன்கள்.. முகேஷ் அம்பானி வீடியோ வாவ்

India oi-Halley Karthik மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த மாதம் ‘NMACC’ எனப்படும் பண்பாட்டு மையத்தை நீடா அம்பானி திறந்து வைத்தார். இந்நிலையில் கிரிக்கெட் பிரபலம் சச்சின் டென்டுல்கர் தொடங்கி சினிமா பிரபலம் ரஜினிகாந்த் வரை பல்வேறு நட்சத்திரங்கள் பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்வில் முகேஷ் அம்பானி பாட்டுப்பாடி அசத்தியுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது மனைவி நீடா அம்பானி. இவருக்கு நீண்ட நாட்களாக ஒரு கனவு இருந்தது. … Read more

\"கண்ட கருமத்தோட பஸ்ஸில் ஏன் வர்ற?\" பறை இசைக் கருவியுடன் வந்த மாணவியை நடுவழியில் இறக்கிய நடத்துநர்

Tamilnadu oi-Vishnupriya R நெல்லை: நெல்லையில் பறை இசைக் கருவியுடன் அரசு பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவியை நடத்துநர் நடுவழியில் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் கணேசனின் மகள் ரஞ்சிதா. இவர் சீதபற்பநல்லூர் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படிக்கிறார். இவர் கல்லூரியில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதற்காக டிரம்ஸ், தோள்பறை இசைக் கருவிகளையும் எடுத்து வந்துள்ளார். கல்லூரியில் நிகழ்ச்சி முடிந்து மதுரை செல்லும் பேருந்தில் இசைக் கருவிகளுடன் ஏறினார். மாணவி … Read more

2 குண்டுவெடிப்பை தொடர்ந்து.. பஞ்சாப் பொற்கோவில் அருகே மீண்டும் பயங்கரமாக வெடித்த பொருள்-பதற்றம்

India oi-Nantha Kumar R அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் அருகே கடந்த மே 6, மே 8 ஆகிய நாட்களில் அடுத்தடுத்து 2 முறை குண்டுகள் வெடித்தன. இதில் 2 பேர் காயமடைந்த நிலையில் நேற்று இரவும் பயங்கர சத்தத்துடன் பொருள் ஒன்று வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப்பில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. முதல்வராக பகவந்த் மான் உள்ளார். இந்நிலையில் தான் தற்போது அங்கு அவ்வப்போது பதற்றமான சூழல் நிலவுகிறது. மீண்டும் காலிஸ்தான் … Read more

டிஆர்பி ராஜாவுக்கு எந்த இலாகா? அவருக்காக 3 அமைச்சர்களின் துறை மாற்றம்? ஆஹா.. இதான் நடக்கப்போகுதா?

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் ஆவடி நாசரை அமைச்சரவையில் இருந்து விடுவித்து, மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜாவை அமைச்சராக்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதன்படி இன்று (மே 11) காலை 10.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராகப் பதவியேற்க உள்ளார். டி.ஆர்.பி.ராஜாவுக்கு என்ன துறை ஒதுக்கப்படும் என பெரிய விவாதமே நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பதவியேற்ற 2 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றம் நடக்கிறது. இதுவரை … Read more

மாநில கல்வி கொள்கை ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து ஜவஹர் நேசன் விலகல்! உதயசந்திரன் ஐஏஎஸ் மீது புகார்

Tamilnadu oi-Vishnupriya R சென்னை: தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கை உயர் மட்ட குழு ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த பேராசிரியர் ஜவஹர் நேசன், மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் முதல்வரின் தனிச் செயலாளருமான உதயசந்திரன் மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை உயர் மட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் நேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்வியின் நலனையும் மாநிலத்து இளைஞர்களின் எதிர்கால நலன்களையும் மனதில் கொண்டு மாநிலத்தின் சரித்திர மரபுகளையும் … Read more

ட்விஸ்ட்! கர்நாடகாவில் தொங்கு சட்டசபை! காங்கிரசுக்கு சிக்கல்! அப்போ பாஜக? சவுத் பர்ஸ்ட் பரபர கணிப்பு

India oi-Shyamsundar I களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் 107- 109 இடங்களில் வெல்லும் என்று சவுத் பர்ஸ்ட் எக்சிட் போல் கருத்து கணிப்பு வெளியிட்டு உள்ளது. அதாவது கர்நாடகாவில் தொங்கு சட்டசபை உருவாகும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு கர்நாடகாவில் தொங்கு சட்டசபை உருவான நிலையில் எடியூரப்பா 6 நாட்கள் ஆட்சி அமைத்தார். அதன்பின் ஜேடிஎஸ் – காங்கிரஸ் சார்பாக குமாரசாமி ஆட்சி அமைத்தார். ஒன்றரை வருட ஆட்சி ஆபரேஷன் கமலா … Read more

இம்ரான் கான் கைதால் கொதிக்கும் பாகிஸ்தான்.. ராணுவம் ரோந்து பணியில் ஈடுபட அனுமதி.. ஒரே பதற்றம்

International oi-Mani Singh S இஸ்லாமாபாத்: இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடும் வன்முறையில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து, அந்த மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட ராணுவத்திற்கு உள்துறை அமைச்சகம் அதிகாரம் அளித்துள்ளது. பாகிஸ்தானில் பிரபல கிரிக்கெட் வீரரான இம்ரான் கான், ‘பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப்’ என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். இவரது கட்சி கடந்த 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஆட்சியை பிடித்தது. இம்ரான் கானின் … Read more

அமைச்சரவையில் இலாகா மாற்றம்! ஆளாளுக்கு அரசியல் லாபி! மன வருத்தத்தில் சீனியர் அமைச்சரான துரைமுருகன்!

Tamilnadu oi-Arsath Kan சென்னை: அமைச்சரவையில் இலாகா மாற்றப்படுவது குறித்த தகவல் கடந்த மூன்று நாட்களாக சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீயாய் பரவி வரும் நிலையில் சீனியர் அமைச்சரான துரைமுருகன் மன வருத்தத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. காரணம் திமுக பொதுச்செயலாளராகவும், மூத்த அமைச்சராகவும் இருக்கும் தாம், பல விஷயங்களை ஊடகங்கள் வாயிலாகவே தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது என்பது தான். நேற்றுக்கூட அமைச்சரவை மாற்றம் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு யாமறியோம் பராபரமே என விரக்தியுடன் துரைமுருகன் பதிலளித்ததற்கு இது தான் … Read more

இத்தனை கோடியா? அம்பானி பரம்பரையாச்சே சும்மாவா? ஆனந்த் அம்பானி கட்டியிருக்கும் வாட்ச் விலை தெரியுமா?

India oi-Vishnupriya R மும்பை: முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி கையில் அணிந்திருந்த வாட்ச்சின் விலை என்ன தெரியுமா? இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவருடைய மனைவி நீடா அம்பானி பரதநாட்டிய கலைஞர். மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். முகேஷ் அம்பானியின் வளர்ச்சியில் நீடாவுக்கும் பங்குண்டு. முகேஷ் அம்பானியை விட நீடா அம்பானி பற்றிய செய்திகள்தான் அதிகம் வரும். அவரை விட்டால் அவருடைய மகன்களுடைய செய்தி வரும். முகேஷ்- நீடா தம்பதிக்கு ஆகாஷ் … Read more