திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை.. ராஜஸ்தானில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளி.. துப்பாக்கி முனையில் கைது

India oi-Vishnupriya R ஜெய்ப்பூர்: திருவண்ணாமலையில் பிப்ரவரி 12 ஆம் தேதி ஏடிஎம் மையங்களில் ரூ 72 லட்சம் கொள்ளை போன சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி அதிகாலை திருவண்ணாமலை , போளூர், கலசப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது. கேஸ் வெல்டிங் எந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரங்களை வெட்டி அதில் இருந்த … Read more

‛டக்’ அவுட் ரோகித்.. கிண்டலடித்த பஞ்சாப்! மும்பை சுளீர் பதிலடி! ‛வடிவேல்‛ மீமோடு சிஎஸ்கே ஆதரவு-ஆஹா

Tamilnadu oi-Nantha Kumar R மொஹாலி: ஐபிஎல்லில் நேற்றைய போட்டியில் மும்பை-பஞ்சாப் அணிகள் மோதின. இதில் மும்பை அணி வெற்றி பெற்றது. போட்டியில் மும்பை கேப்டன் ரோகித் சர்மா ‛டக்’ அவுட் ஆனதை பஞ்சாப் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் கலாய்க்கும் வகையில் பதிவிட்டது. இதற்கு மும்பை அணி பதிலடி கொடுத்த நிலையில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளும் பஞ்சாப்பை கிண்டல் செய்தன. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு … Read more

தமிழகத்தின் அடுத்த தலைமை செயலாளர் யார்? விரட்டி வேலை வாங்கும் \"இவரை\" ஸ்டாலின் தேர்வு செய்தாரா?

Tamilnadu oi-Vishnupriya R சென்னை: தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற பட்டியலில் ஒருவர் பெயரை முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் தலைமைச் செயலாளராக உள்ள இறையன்பு ஐஏஎஸ் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்பது தொடர்பாக பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்த பதவிக்கான ரேஸில் சில ஐஏஎஸ் அதிகாரிகளும் உள்ளனர். அவர்களில் முருகானந்தம், சிவதாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, … Read more

வந்தே பாரத் ரயிலில் ஏறிய எடப்பாடி பழனிசாமி.. அசந்து பார்த்த சேலம்.. இதில் இப்படி ஒரு காரணமா?

Tamilnadu oi-Velmurugan P சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வந்தே பாரத் ரயிலில் வந்த புகைப்படத்தை பலரும் வெளியிட்டிருக்கிறார்கள். எடப்பாடிக்கு மட்டுமல்ல, சேலத்தில் உள்ளவர்கள் எல்லாருக்கே சென்னைக்கு செல்ல விமானத்தை நாடுவதை விட வந்தே பாரத் ரயிலில் வருவது தான் சிறந்தது. அப்படி என்ன காரணம் என்பதை கொஞ்சம் கூட்டி கழிச்சு பார்த்தால் உங்களுக்கே தெரிந்துவிடும். சென்னையில் இருந்து கோவை அதிவேகத்தில் செல்லும் ஆம்னி பேருந்துகளில் கூட 8 மணி நேரம் ஆகும். நீங்கள் கோயம்பேட்டில் … Read more

வடகிழக்கில் தமிழர் சாம்ராஜ்ஜியம்.. ஒரே நகரில் 3000 பேர்! மணிப்பூரில் இப்படி ஒரு ஊரா? வலியான வரலாறு

India oi-Noorul Ahamed Jahaber Ali இம்பால்: மணிப்பூரில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் வாழும் மோரே நகரில் ஏற்பட்ட வன்முறையில் ஏராளமான தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வந்துகொண்டு இருக்கின்றன. மணிப்பூருக்கு இவ்வளவு தமிழர்கள் சென்றது ஏன்? எப்போது? எப்படி? விரிவாக பார்ப்போம். பொதுவாக தமிழர்கள் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவிலும், மும்பையின் தாராவி பகுதியிலும் அதிகளவில் வசித்து வருகிறார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால், இந்தியாவின் வடகிழக்கு மூளையில் அமைந்து உள்ள … Read more

வந்தே பாரத் ரயிலில் சட்டென பார்த்தால்.. யார் எடப்படியா? கையில் என்ன அது? அடடா ஏன் இவ்வளவு சீரியஸ்!

Tamilnadu oi-Shyamsundar I சென்னை: சேலத்தில் இருந்து சென்னை நோக்கி இன்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்தார். சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி சமீபத்தில் திறந்து.வைத்தார் சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை – கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவில் … Read more

மணிப்பூரில் வெடித்த வன்முறை.. பற்றி எரியும் மாநிலம்.. 5 நாள் இண்டர்நெட் சேவை ரத்து-ஊரடங்கு..பதற்றம்!

India oi-Nantha Kumar R இம்பால்: மணிப்பூரில் பழங்குடியினரின் போராட்டத்தில் பயங்கரமான வன்முறை வெடித்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் 5 நாட்களுக்கு இண்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதோடு 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறையின் பின்னணி என்ன? என்பது பற்றிய முழுதகவல் வருமாறு: இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக மணிப்பூர் உள்ளது. மிகவும் சிறிய மாநிலம் தான் இது. இங்கு பழங்குடியினத்தை சேர்ந்த மக்கள் தான் அதிகம் வசிக்கின்றனர். பழங்குடியினத்தில் வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்த மக்கள் … Read more

ஜல்லிக்கட்டில் காயமடைந்த கருப்புக் கொம்பன் காளை உயிரிழப்பு.. தொடரும் சோகம்..விஜயபாஸ்கர் அதிர்ச்சி

Tamilnadu oi-Jeyalakshmi C புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டு போட்டியின் போது வாடி வாசல் கட்டையில் மோதி பலத்த காயமடைந்த கருப்புக் கொம்பன் காளை உயிரிழந்தது. பல ஆண்டுகாலமாக குழந்தை போல வளர்த்த காளைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதால் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அதிர்ச்சியடைந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிப்பட்டியில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் கருப்புக் கொம்பன் காளையும் களமிறங்கியது. வாடிவாசலில் இருந்து விஜயபாஸ்கரின் காளை அவிழ்த்துவிடப்பட்ட போது சீறிப்பாய்ந்த கருப்புக் கொம்பன், யாரும் எதிர்பார்க்காத … Read more

மணிப்பூரில் தமிழர்கள் வாழும் மோரோ பகுதியில் மோதல்..பதற்றம் அதிகரிப்பு..இணைய சேவை முடக்கம்

India oi-Mani Singh S இம்பால்: மணிப்பூர் மாநிலம் மியான்மர் எல்லையில் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் வாழும் மோரே நகரில் இரு இனக்குழுக்களிடையேயான மோதல் ஏற்பட்டது. இதையடுத்து மணிப்பூரில் நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலம் மோரே நகரில் பல்வேறு இனக் குழுக்கள் வசிக்கின்றனர். ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு தமிழர்களும் மோரேவில் வசித்து வருகின்றனர். மோரே நகரில் ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள், சேவை நிறுவனங்களை தமிழர்கள் நடத்தி வருகின்றனர். ஏராளமான வர்த்தக நிறுவனங்களையும் தமிழர்கள் நடத்தி … Read more

மணிப்பூர்:தமிழர்கள் வாழும் மோரேவில் பெரும் இன மோதல்-வீடுகள் தீக்கிரை- பாதுகாப்பு படை துப்பாக்கி சூடு!

India oi-Mathivanan Maran மோரே: மணிப்பூர் மாநிலம் மியான்மர் எல்லையில் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் வாழும் மோரே நகரில் இரு இனக்குழுக்களிடையேயான மோதலில் பல வீடுகள் எரிந்து தீக்கிரையாகின. இதனால் பெரும் பதற்றம் நிலவுகிறது. மோரே நகரில் பல்வேறு இனக் குழுக்கள் வசிக்கின்றனர். ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு தமிழர்களும் மோரேவில் வசித்து வருகின்றனர். மோரே நகரில் ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள், சேவை நிறுவனங்களை தமிழர்கள் நடத்தி வருகின்றனர். ஏராளமான வர்த்தக நிறுவனங்களையும் தமிழர்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மணிப்பூரில் குக்கி … Read more