பாதிரியார்களை சந்தித்து பேசிய மோடி! ''சம்பிரதாய சந்திப்பு; சந்தர்ப்பவாத அரசியல்''! இனிகோ விமர்சனம்!

Tamilnadu oi-Arsath Kan சென்னை: பிரதமர் மோடி கிறித்தவப் பாதிரிமார்களை சந்தித்து பேசியுள்ள நிலையில், அது வெறும் சம்பிரதாய சந்திப்பு என்றும் பிரதமரின் சந்தர்ப்பவாத அரசியல் எனவும் விமர்சித்துள்ளார் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. பாஜக தலைவர்கள் பாதிரியார்களை சடங்கிற்காக சந்தித்து, சிரித்து, படமெடுத்து அதனை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள் எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக இனிகோ இருதயராஜ் கூறியிருப்பதாவது; ”நாடு முழுவதும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறை ,வெறியாட்டங்கள், வெறுப்புப் பேச்சுக்கள் கட்டவிழ்த்து … Read more

10 நிமிடங்கள் மீட்டிங்.. டெல்லியில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Tamilnadu oi-Vignesh Selvaraj டெல்லி : டெல்லி சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை திரும்புவதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த நிலையில் அங்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கிண்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார். டெல்லி சென்ற முதல்வர் : சென்னை … Read more

ஷாக்! உணவு வைக்க சென்ற பாகன்.. திடீரென யானை தாக்கியதால் பரிதாபமாக பலி! மசினி யானையால் இரண்டாவது பலி

Tamilnadu oi-Vigneshkumar நீலகிரி: முதுமலை யானைகள் முகாமில் வளர்ப்பு யானை ஒன்று தாக்கியதில் பாகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலையில் தொப்பக்காடு யானை முகாம் இருக்கிறது. இங்கே பல யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவணப்படமும் இங்கே தான் எடுக்கப்பட்டது. இங்கு ஏகப்பட்ட யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. யானைகளின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்க வனவிலங்கு மருத்துவர்களும் உடன் இருப்பார்கள். யானை ஆரோக்கியத்தைப் பொறுத்தே அதற்கான உணவும் … Read more

அந்த பார்முலாவே காலி.. ஒரே கல்லில்.. சசி +டிடிவி +ஓபிஎஸ்ஸை ஒன்றாக வீழ்த்திய எடப்பாடி! முடிஞ்சிடுச்சே

Tamilnadu oi-Shyamsundar I சென்னை: அமித் ஷா – எடப்பாடி – அண்ணாமலை மீட்டிங் காரணமாக, டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆகியோருக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்து உள்ளது. நேற்று முதல் நாள் டெல்லியில் அண்ணாமலை – அமித் ஷா – எடப்பாடி பழனிசாமி இடையில் டெல்லியில் நடந்த மீட்டிங் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது. தமிழ்நாடு அரசியலில் மீண்டும் பாஜக – அதிமுக கூட்டணி அமைவதற்கான சூழ்நிலையை … Read more

அவமானம்..பாதியில் நிறுத்தப்பட்ட தமிழ்தாய் வாழ்த்து.. இதயம் நொறுங்கியது..வைரமுத்து வேதனை

Tamilnadu oi-Jeyalakshmi C சென்னை: கர்நாடகா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதுகண்டு இடிவிழுந்த மண்குடமாய் இதயம் நொறுங்கியது என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாடலை ஒலிபரப்பாமல் இருந்திருக்கலாம்; பாதியில் நிறுத்தியது ஆதிமொழிக்கு அவமானம் என்றும் வைரமுத்து வேதனை தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு … Read more

இடியோடு கொட்டிய கோடை மழை..மேற்கு வங்காளத்தில் மின்னல் தாக்கி 14 விவசாயிகள் பலியான சோகம்

India oi-Jeyalakshmi C கொல்கத்தா: இடிமின்னலுடன் கொட்டி தீர்த்த கோடை மழையால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். விவசாயிகள் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி கூறியுள்ளார். அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. நாடு முழுவதும் வெப்ப அலை வீசக்கூடும் என கடந்த சில வாரங்களாகவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. வெப்ப அலையில் இருந்து தப்பிக்க … Read more

14 பேர்.. “வெல்டன்” – பரிசளித்த முதல்வர் ஸ்டாலின்! விழுப்புரம், கடலூர் மக்களுக்கு உதவிய சேவகர்களாம்

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali விழுப்புரம்: ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின்கீழ் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறந்த சமூக சேவை மற்றும் அரசுப் பணிகளை ஆற்றிய 14 நபர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டினார். கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று முந்தினம் (26.4.2023) விழுப்புரத்திற்கு வருகை தந்த … Read more

“இஸ்லாமிய உறவுகள்”.. உள்ளம் குளிர்ந்த இந்துக்கள்! வடநாட்டுக்கு மதநல்லிணக்க பாடம் எடுக்கும் தமிழ்நாடு

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali நாகப்பட்டினம்: கோடியக்கரை கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு வருகை தரும் இந்து மத பக்தர்களை வரவேற்று இஸ்லாமியர்கள் வைத்து உள்ள பேனர் அப்பகுதியில் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்து இருக்கிறது. இந்தியாவில் சாதி, மத அடிப்படையிலான வெறுப்பு பேச்சுக்களும் மத அடிப்படையிலான மோதல்களும் வன்முறைகளும் சிறுபான்மையின மக்கள் மீதான தாக்குதல்களும் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக மாட்டுக்காக மனிதர்களை அடித்துக் கொல்லும் குற்றங்கள், கும்பல் தாக்குதல்கள் போன்றவை அதிகரித்துள்ளன. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் … Read more

39 – 13.. திடீர்னு எடப்பாடியின் தோளை தொட்டு, அமித்ஷா சொன்ன வார்த்தை.. பழனிசாமிக்கு சிரிப்பு.. பார்ரா

Tamilnadu oi-Hemavandhana சென்னை: இன்று டெல்லியில், பாஜக தலைவர்களிடம் எடப்பாடி பழனிசாமி என்ன பேசினார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.. அத்துடன் சீட் ஷேரிங், தொகுதிகள் குறித்தும் மேலிட தலைவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. நடக்க போகும் எம்பி தேர்தலில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க போகிறதா? இல்லையா? என்பதில் பெருத்த சந்தேகம் எழுந்தபடியே வந்தது. ஆனால், மெகா கூட்டணி என்பதில் மட்டும் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்தார்.. எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது குறித்து அதிமுக … Read more

யாரு சாமி நீ.. ஆனந்த் சீனிவாசன் பார்த்தா உன்னத்தான் கொண்டாடுவாரு.. தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்

Tamilnadu oi-Velmurugan P சென்னை: சிக்கனத்தை வலியுறுத்தி வரும் பொருளதாதார நிபுணரான ஆனந்த் சீனிவாசனை வைத்து பல்வேறு மீம்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த மீம்ஸ் கொஞ்சம் வித்தியாசமானது, ஒருவர் வாழை மரத்தின் இலையை வெட்டாமல் அதில் அப்படியே சாப்பாடு போட்டு சாப்பிடுவார். அதை பின்னர் கழுவி விடுவார். இதை பார்த்த நெட்டிசன்கள் ஆனந்த் சீனிவாசனை குறிப்பிட்டு அவரை விமர்சித்து வருகிறார்கள். இன்றைய 90ஸ் கிட்ஸ்கள் பலர் ஆன்ந்த் சீனிவாசன் கூறிய அட்வைஸ்க்கு அப்புறம் பணம் சேமிப்பில் அதிக … Read more