ஆருத்ரா மோசடி: சிக்கியுள்ள \"பெரிய\" தலைகள்.. நானும் பணம் கொடுத்தேன்.. போட்டு உடைத்த கிருஷ்ண பிரபு!

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : “ஆருத்ரா மோசடியில் ஈடுபட்டவருக்கு கட்சியில் மாநில பொறுப்பு வழங்க மிகப்பெரிய அளவில் ஆதாயம் பெற்றிருக்கிறார்கள். அதனால் தான் அவரை கட்சியை விட்டு நீக்க முடியவில்லை. பொருளாதார பிரிவு மாநில செயலாளர் பொறுப்பில் தொடர்வதற்கு நானும் ரூ. 2 லட்சம் கொடுத்துள்ளேன்” என பாஜகவில் இருந்து அண்மையில் விலகிய கிருஷ்ண பிரபு பகீர் தகவல்களைக் கூறியுள்ளார். பாஜக மாநில ஐடி விங் தலைவராக நிர்மல் குமார் உள்ளிட்ட முக்கிய பாஜக பிரமுகர்கள் … Read more

திமுக இப்தார் விழாவில் பங்கேற்க துபாயிலிருந்து 1 நாள் விசிட் அடித்த நிர்வாகி! என்ன பின்னணி?

Tamilnadu oi-Arsath Kan சென்னை: திமுக இப்தார் விழாவில் பங்கேற்பதற்காக துபாயிலிருந்து சென்னைக்கு 1 நாள் விசிட் அடித்து கட்சித் தலைமையின் கவனம் ஈர்த்திருக்கிறார் அமீரக திமுக நிர்வாகி ஒருவர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த எஸ்.எஸ்.மீரான் அமீரக திமுக பொறுப்பாளராக உள்ளார். அதுமட்டுமின்றி தமிழக அரசின் புலம்பெயர் தமிழர் நல வாரிய உறுப்பினராகவும் உள்ளார். இந்நிலையில் திமுக சார்பில் அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இப்தார் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. … Read more

கிருஷ்ணகிரி பயங்கரம்! \"ஆணவ கொலைக்கு தனி சட்டம்னு சொன்னீங்களே.. என்னாச்சு?\" டிடிவி தினகரன் கேள்வி

Tamilnadu oi-Vigneshkumar சென்னை: கிருஷ்ணகிரி ஆணவக் கொலை சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், அமமுக தலைவர் டிடிவி தினகரன் இந்த விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருணபதி கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவர் திருப்பூரில் இருக்கும் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் சுபாஷ் என்பவர் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த அனுஷா என்பவரைக் காதலித்து வந்துள்ள நிலையில், இருவரும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் தனது மகனின் … Read more

தமிழகத்தில் படுவேகமாக உயரும் கொரோனா.. 500 தாண்டிய தினசரி பாதிப்பு.. திருப்பூரில் ஒருவர் பலி! ஷாக்

Tamilnadu oi-Vigneshkumar சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தினசரி வைரஸ் பாதிப்பு பல வாரங்களுக்குப் பின் மீண்டும் 500ஐ தாண்டியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பில் இதுவரை 3 அலைகள் ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டாவது அலையில் தான் வைரஸ் பாதிப்பு மிக மோசமாக இருந்தது. அப்போது கொரோனா பெட்கள் கூட போதியளவில் இல்லாமல் இருந்தது. அதன் பின்னர் கொரோனா வேக்சின் உட்பட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது. … Read more

“இல்லீகல்”.. வாயை விட்டு மாட்டிய அண்ணாமலை.. ரபேல் வாட்ச் + ஆருத்ரா! ஆக்‌ஷன் எடுக்க சொல்லும் எஸ்டிபிஐ

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali சென்னை: ரஃபேல் வாட்ச் விவகாரம், நண்பர்கள் மூலம் லட்சக்கணக்கில் ஆதாயம் பெற்றது, ஆருத்ரா கோல்ட் நிதி மோசடியில் தொடர்பு என பல்வேறு விவகாரங்களில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க அண்ணாமலை மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரம் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “பாஜக மாநில … Read more

அடடே! 5 ஆண்டில் வட்டி மட்டும் 2.50 லட்சமா? அஞ்சலக சிறு சேமிப்பில் செம திட்டம்.. யாருக்கெல்லாம் தகுதி?

Tamilnadu oi-Mani Singh S சென்னை: போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் தொகைகளுக்கான வட்டியை 7 சதவீதத்தில் இருந்து 7.5 சதவிகிதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கடந்த 1 ஆம் தேதியில் இருந்து இது அமலுக்கு வந்துள்ளது. சிறு துளி பெருவெள்ளம் என்பது பழமொழி… சிறுக சிறுக நாம் சேமிக்கும் தொகை கண்டிப்பாக ஒருநாள் பயனளிக்கும். இக்கட்டான சூழலில் நமக்கு கை கொடுத்து உதவுவது இந்த சிறு சேமிப்புகளாகத்தான் இருக்கும். சேமிப்பின் … Read more

மொரட்டு சிங்கிளா நீங்க? வந்தாச்சு “பெஸ்டி” AI – ஸ்னாப் சாட்டில் புதிய வசதி! இனி மனம் திறந்து பேசலாம்

International oi-Noorul Ahamed Jahaber Ali துபாய்: ஒட்டுமொத்த தொழில்நுட்ப உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்திருக்கும் சாட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை போல் பல்வேறு ஏஐ தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில் பெஸ்டி ஏஐ தொழில்நுட்பத்தை சாட் ஜிபிடி பங்களிப்போடி அறிமுகம் செய்து உள்ளது பிரபல சமூக வலைதளமான ஸ்னாப் சாட். தொடர்ந்து பல்வேறு முன்னேற்றங்களை கடந்து வரும் தொழில்நுட்பத்தில் கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் பேசப்பட்டு வருவது ஏஐ தொழில்நுட்பம்தான். நாம் நினைத்ததை … Read more

வலைவீசிய லக்னோ.. குஜராத் அணியின் கேப்டனானது எப்படி? நெஹ்ரா மட்டும் இல்லைனா? உருகிய ஹர்திக் பாண்ட்யா

India oi-Nantha Kumar R அகமதாபாத்: ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் சேர அழைப்பு வந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா எப்படி குஜராத் அணியில் இணைந்தார் என்பதும், அந்த அணியின் கேப்டன் வாய்ப்பை அவர் பெற்றது எப்படி? என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதில் ஆசிஷ் நெஹ்ரா தான் 100 சதவீதம் பங்கு வகித்த விபரம் தற்போது ஹர்திக் பாண்ட்யாவால் கசிந்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கடந்த ஆண்டு புதிதாக 2 அணிகள் அறிமுகம் செய்யப்பட்டன. … Read more

ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!

Tamilnadu oi-Arsath Kan சென்னை: ஆணவ கொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு; நாகரீக சமுகமாக வாழும் தமிழ்நாட்டில் இன்றளவும் பல கிராமங்களில், சாதி மறுப்புத் திருமணம் செய்வோர் மீது பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. சாதி மறுப்புத்திருமணம், மாற்று மத திருமணம், ஒரே சாதியில் பெற்றோர்கள் சம்மதமின்றி காதல் திருமணம் செய்வோரை எல்லாம் ஊரை விட்டுத்தள்ளி வைப்பது, அபராதம் விதிப்பது, … Read more

தவறான வதந்தி.. ஷூவை கையில் சுமந்த டவாலி.. நடந்தது என்ன?கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன் குமார் வீடியோ

Tamilnadu oi-Nantha Kumar R கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக ஷ்ரவன் குமார் ஜடாவத் ஷூவை அவரது உதவியாளரான டபேதார் (டவாலி) கையில் எடுத்து சென்ற வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. ஷ்ரவன் குமார் ஜடாவத்துக்கு எதிராக கண்டனங்கள் எழுந்த நிலையில் இதுபற்றி கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத் வீடியோ வெளியிட்டு தன்னை பற்றி தவறான வதந்தி பரப்பப்படுவதாக வருத்தம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பிரபலமான கூவாகம் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் … Read more