யார் கண்ணு பட்டுச்சோ.. பொம்மன் – பெள்ளியிடம் வளர்ந்த யானைக்குட்டி உயிரிழப்பு.. சோகத்தில் முதுமலை

Tamilnadu oi-Halley Karthik முதுமலை: தாயை பிரிந்து தவித்த 5 மாத ஆண் யானை குட்டி ஒன்று ஆஸ்கர் விருது வென்ற ஆவணப்படத்தில் இடம்பெற்றிருந்த பொம்மன்-பெள்ளி தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், யானை குட்டி தற்போது உயிரிழந்துள்ளது. சமீப நாட்களாக தமிழ்நாட்டில் யானைகளின் உயிரிழப்பு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் காட்டு யானை கூட்டம் ஒன்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சுற்றி வந்தது. ஏற்கெனவே இந்த மாவட்டத்தில் கடந்த … Read more

அதிமுக கூட்டணி சரி.. யார் பக்கம்? அமித் ஷா தெளிவா சொல்லணும்ல.. குட்டையைக் குழப்பும் ஓபிஎஸ் ஆதரவாளர்!

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : “அமித்ஷா சொல்கிற அதிமுக கூட்டணி எடப்பாடி பழனிசாமியின் டெண்டர் அதிமுகவா? இல்லை ஓபிஎஸ் தலைமையிலான தொண்டர் அதிமுகவா? என்பதை தெளிவு படுத்தி விட்டால் சிறப்பாக இருக்கும்” என ஓபிஎஸ் அணியின் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக பாஜக – அதிமுக கூட்டணி இடையே சலசலப்புகள் நிலவி வந்த சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடர்கிறது என்று அறிவித்திருக்கிறார். பதிலுக்கு எடப்பாடி … Read more

எஸ்ஐயை அடித்த ராணுவ வீரர் உள்பட 4 பேர்.. தரதரவென இழுத்துச் செல்லப்பட்டதால் தென்காசியில் ஷாக்

Tamilnadu oi-Velmurugan P தென்காசி: சங்கரன்கோவில் அருகே ஆம்லேட் சரியில்லாததால் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட ராணுவ வீர‌ர் உட்பட 4 பேர் எஸ்ஐயை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கூடுதல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு, எஸ்ஐயை தாக்கிய ராணுவ வீரர் உள்பட 4 பேரை போலீசார் சாலையில் தரதரவென இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டல் கடைகளில் சாப்பாடு சரியில்லை என்றால் எவ்வளவு பெரிய சண்டைகள் வரும் என்பதை நாம் கேள்விபட்டிருப்போம். அதுவும் குடி போதையில் யாராவது வந்தால், … Read more

கர்நாடகா: முஸ்லிம், எஸ்சி எஸ்டி இடஒதுக்கீடு விவகாரங்களில் தமக்கு தாமே தலையில் கொள்ளி வைக்கும் பாஜக?

India oi-Mathivanan Maran பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படக் கூடிய நிலையில் இடஒதுக்கீடு விவகாரங்களில் ஆளும் பாஜக அரசு மேற்கொண்டு வரும் ஒவ்வொரு நடவடிக்கையும் பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது; இது தேர்தலில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாகவே தேர்தல் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதை பற்றி கவலைப்படாமல் வேட்பாளர்களை அறிவிப்பது, தொகுதிகளை குறிவைத்து பிரசாரம் செய்வது என கர்நாடகாவின் … Read more

\"புதுசா இருக்கே..\" மக்களுடன் போராட்டத்தில் கைகோர்க்கும் ராணுவம்.? இஸ்ரேலில் என்னதான் நடக்கிறது

International oi-Vigneshkumar ஜெருசலேம் : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அங்கு நீதித்துறையில் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டு வர முயன்றுள்ள நிலையில், அதற்கு எதிராக மக்கள் போராட்டம் உச்சம் தொட்டுள்ளது. அது குறித்து விரிவாகப் பார்க்கலாம். இஸ்ரேல் நாட்டின் அரசியலில் பவுர்புல் அரசியல்வாதியாக பெஞ்சமின் நெதன்யாகு இருந்து வருகிறார். 2009இல் முதல்முறையாக அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற அவர், 2021 வரை பிரதமர் பதவியில் இருந்தார். தேர்தல்களில் அவரது கட்சி உட்பட எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் … Read more

எனது பாட்டி மாரியம்மாள் மூச்சுக்காற்று உலவுகிற மண் இந்த மண்! சொந்த ஊரில் துரை வைகோ உருக்கம்!

Tamilnadu oi-Arsath Kan தென்காசி: கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது சொந்த ஊர் மக்களுக்கு தாம் அளித்த வாக்குறுதி ஒன்றை நிறைவேற்றிய மன நிம்மதியோடு இருக்கிறார் மதிமுக தலைமைக்கழகச் செயலாளர் துரை வைகோ. 20 ஆண்டுகளாக யாரும் செய்ய முடியாத ஒரு நிகழ்வை 20 மாதங்களில் சலிக்காமல் அமைச்சர்களை மீண்டும் மீண்டும் நேரில் சந்தித்து தனது சொந்த ஊர் மக்களின் மனங்களை குளிர்வித்துள்ளார். துரை வைகோவிடம் ஒரு கோரிக்கை வைத்தால் அந்த கோரிக்கை வைத்தவர்களே மறந்தாலும் கூட … Read more

சிங்கம் போல உடை அணிந்து சிங்கங்களிடமே 'பிராங்க்'.. நூலிழையில் உயிர்தப்பிய யூடியூபர்! பரபர சம்பவம்

India oi-Jackson Singh தன்சானியா: ஆப்பிரிக்காவில் சிங்கம் போல முகமூடி அணிந்து சிங்கங்களிடமே சென்று ‘பிராங்க்’ (prank) செய்த யூடியூபர் மயிரிழையில் உயிர் தப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜப்பானை சேர்ந்தவர் ஜைரோ (28). டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த ஜைரோவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்காக பல ஆண்டுகள் கடினமாக முயற்சித்தார். ஆனால் சினிமா வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் யூடியூப் சேனலை ஜைரோ தொடங்கினார். அதில் மக்களை ‘பிராங்க்’ … Read more

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடைக்கு அவசர சட்டம் – 7 தகவல்கள்

India bbc-BBC Tamil இணைய வழி விளையாட்டுகளைக் கட்டுப்படுத்துவதற்கான அவசர சட்டத்துக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திங்கட்கிழமை (செப்டம்பர் 26) நடந்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு, விரைவில் அவசர சட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த விளையாட்டை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமாக இந்தச் சட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான ஏழு தகவல்களை இங்கே வழங்குகிறோம். 1) மொபைல் போன்களில் … Read more

ராஜஸ்தான் காங்கிரஸில் குழப்பம், குடியரசு தலைவர் ஆட்சியை கோரும் பாஜக – என்ன நடக்கிறது?

India bbc-BBC Tamil ராஜஸ்தானில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக கோரியது சச்சின் பைலட்டை முதல் அமைச்சராக்க அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கோரி வருகின்றனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை ஆதரிக்கும் எம்எல்ஏக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக ராஜிநாமா செய்யப் போவதாக எச்சரித்துள்ளனர். உள்கட்சியில் நிலவும் பரபரப்புகளுக்கு மத்தியில் காங்கிரஸ் தலைவர்களின் உயர்நிலை கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை தொடர்ச்சியாக நடைபெற்றன. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தலைவர்களில் அசோக் கெலாட் முன்னணியில் உள்ளார். ஆனால் … Read more

ஜி ஜின்பிங் மாயம்..? ஓ இதுதான் காரணமா.. சீனா பற்றி பரவும் தகவல்களும்! உண்மை காரணங்களும் என்ன

International oi-Vigneshkumar பெய்ஜிங்: சீனா குறித்தும் அந்நாட்டின் அதிபர் ஜி ஜின் பிங்குறித்தும் இணையத்தில் பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், அது குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அண்டை நாடான சீன கடந்த 20, 30 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி என்பது மிகப் பெரியது. வெறும் சில தலைமுறைகளில் உலகிலேயே மிகப் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாகச் சீனா உருவெடுத்து உள்ளது. மேலும், ஏழ்மையில் இருந்தும் பல கோடி பேர் மீட்கப்பட்டதாக அந்நாட்டு அரசு சொல்கிறது. … Read more