காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

ஐதராபாத் காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. வருகிற 30 ஆம் தேதி 119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆளும் கட்சியான பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. இன்று தெலுங்கானா மாநிலத்திற்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: * மகாலட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 நிதி உதவி * ரூ.500க்கு … Read more

நாளை விஜய் மக்கள் இயக்க நூலகம் திறப்பு

சென்னை நாளை விஜய் மக்கள் இயக்கம் அமைத்துள்ள நூலக திறப்பு விழா நடைபெற உள்ளது. இன்று விஜய் மக்கள் இயக்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், :தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், புத்தக வாசிப்புத் திறன் மற்றும் பொது அறிவு சிந்தனையை வளர்க்கும் நோக்கில் தற்போது முதற்கட்டமாக ‘தளபதி விஜய் நூலகம்’ திட்டம் நாளை சனிக்கிழமை (18/11/2023) அன்று காலை 10.35 மணியளவில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி … Read more

விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததை எதிர்த்து பாஜக போராட்டம்

திருவண்ணாமலை விவசாயிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து பாஜக போராட்டம் நடத்த உள்ளது.  தமிழக அரசு திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மா கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள தேத்துரை, குரும்பூர், வீரம்பாக்கம், நெடுங்கள், இளநீர் குன்றம், நர்மாபள்ளம், வட ஆளப்பிறந்தான் மற்றும் அத்தி ஆகிய 9 ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வேளாண் விளை நிலங்களைத் தொழில் முன்னேற்றக் கழகம் (சிப்காட்) சார்பில் புதிதாகத் தொழில் வளாகம் அமைப்பதற்காகக் கையகப்படுத்த முடிவு செய்தது. கடந்த … Read more

குண்டர் சட்டத்தில் விவசாயிகள் கைது : அமைச்சர் விளக்கம்

திருவண்ணாமலை திருவண்ணாமலையில் குண்டர் சட்டத்தில் விவசாயிகள் கைது செய்யப்பட்டது குறித்து அமைச்சர் எ வ வேலு விளக்கம் அளித்துள்ளார்.  தமிழக அரசு திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஒன்றியத்திற்கு  உட்பட்ட மேல்மா கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள தேத்துரை, குரும்பூர், வீரம்பாக்கம், நெடுங்கள், இளநீர் குன்றம், நர்மாபள்ளம், வட ஆளப்பிறந்தான் மற்றும் அத்தி ஆகிய 9 ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வேளாண் விளை நிலங்களைத் தொழில் முன்னேற்றக் கழகம் (சிப்காட்) சார்பில் புதிதாகத் தொழில் வளாகம் அமைப்பதற்காக கையகப்படுத்த முடிவு … Read more

அதானி நிறுவனம் நிலக்கரி இறக்குமதி மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களைத் திரட்ட அனுமதி வழங்கவேண்டும் : நீதிமன்றத்தில் விசாரணை ஆணையம் முறையீடு

அதானி நிறுவனம் நிலக்கரி இறக்குமதி மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களைத் திரட்ட அனுமதி வழங்கவேண்டும் என்று இந்திய வருவாய் புலனாய்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளதை அடுத்து அதானி மீதான விசாரணை மீண்டும் துவங்கவாய்ப்பு. இந்தோனேசிய துறைமுகத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டபோது காட்டப்பட்ட நிலக்கரியின் மதிப்பை இந்திய துறைமுகத்திற்கு வந்து இறங்கும்போது அதன் மதிப்பை பலமடங்கு உயர்த்திக்காட்டி மோசடியில் ஈடுபடுவதாக அதானி நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. துபாய், சிங்கப்பூர், தைப்பே (தைவான்) ஆகிய நாடுகளில் உள்ள பினாமி நிறுவனங்கள் … Read more

திருவண்ணாமலை விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் மானாம்பதி கூட்ரோட் முதல் மேல்மா கூட்ரோட் இடையே 3174 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தப்பட கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று அவர்களின் … Read more

விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்வது குறித்து முதல்வரிடம் கோரிக்கை : அமைச்சர் எ.வ. வேலு தகவல்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் புதிதாக ஒரு சிப்கோட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து விவசாயிகள் கடந்த ஜூலை 2 ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் 7 பேரை திடீரென கைது செய்த போலீசார் அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். போலீசாரின் வாகன கண்ணாடியை உடைத்ததாகவும் அதிகாரிகளை மிரட்டியதாகவும் கூறி இவர்கள் மீது காவல்துறை குற்றம்சாட்டி உள்ளது. இதனைத்தொடர்ந்து தங்கள் விவசாய நிலங்களை … Read more

எலான் மஸ்க் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது

வாஷிங்டன் பிரபல தொழிலதிபரும் உலக செல்வந்தர்களில் ஒருவருமான எலான் மஸ்க் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளது. . டெஸ்லோ, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட நிறுவனங்களின் உரிமையாளரும் உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றி அதனை ‘எக்ஸ்’ என பெயர் மாற்றம் செய்திருந்தார். அதில் பல முக்கிய அதிகாரிகளை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அந்த செயலியில் அவர் செய்த மாற்றங்கள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. எலன் மாஸ்க் தென்னாப்பிரிக்காவில் சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து எப்படி உலக பணக்காரர் ஆனார் என்பதை பிரபல அமெரிக்க … Read more

வரப்போகும் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுக்குக் கட்டண உயர்வு பொருந்தாது : அமைச்சர் அறிவிப்பு 

விழுப்புரம் அண்ணா  பலகலைக்கழகத்தில் அடுத்து வர உள்ள செமஸ்டர் தேர்வுக்கு மட்டும் வழக்கமான கட்டணம் செலுத்தலாம் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இன்று அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் 50% அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது இளநிலை பொறியியல் படிப்பு தேர்வு கட்டணமாக ஒரு தாளுக்கு ரூ.150 பெறப்பட்டு வந்த நிலையில், தேர்வுக்கட்டணம் 50% உயர்த்தப்பட்டு ரூ.225 ஆக மாற்றம் செய்யப்பட்டு இளநிலை செய்முறை சமர்ப்பிப்பு ரூ.450 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பொறியியல் இறுதியாண்டு மாணவர்கள் பிராஜெக்ட் செய்ய … Read more

எது வதந்தி? திருச்செந்தூர் கோவிலில் கட்டண கொள்ளை – ஆதாரத்தை வெளியிட்டார் பாஜக எம்எல்ஏ வானதி

சென்னை:  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசன கட்டணங்களை பல மடக்கு அறநிலையத்துறை திடீரென உயர்த்தி விவகாரம் சர்சையை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் சேகர்பாபு இது வதந்தி என கூறினார். ஆனால், அங்கு கட்டண கொள்ளை நடைபெற்று வருகிறது என பக்தர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், அதற்கான ஆவணங்களை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் அமைச்சர் சேகர்பாபு கூறிய பொய் அம்பலமாகி உள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய … Read more