இன்று  ராஜஸ்தான் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் : முதல்வர் கெலாட் இரங்கல்

டில்லி இன்று காலை மரணடந்த ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனருக்கு முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கரன்பூர் தொகுதியில் 1998, 2008 மற்றும் 2018 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தல்களில் குர்மீத் சிங் கூனர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். நடைபெற உள்ள ராஜஸ்தான் சட்டசபை தேர்தலிலும் கரன்பூர் தொகுதி காங்கிரஸ் சார்பில் குர்மீத் சிங் கூனர்(75) வேட்பாளர் ஆவார் டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் குர்மீத் சிங் … Read more

.அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழை பெய்யலாம்

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.  நேற்று தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது விசாகப்பட்டினத்திற்குக் கிழக்கே சுமார் 410 கி.மீ தொலைவில் தற்போது நிலை கொண்டுள்ளது. விரைவில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக … Read more

இங்கிலாந்தில் கழிவு நீரை எரிபொருளாக மாற்றும் சாதனம் கண்டுபிடிப்பு

லண்டன் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கழிவு நீரை எரிபொருளாக மாற்றும் சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அசுத்தமான நீர் அல்லது கடல்நீரைச் சுத்தமான ஹைட்ரஜன் எரிபொருளாகவும், சுத்திகரிக்கப்பட்ட நீராகவும் மாற்றக்கூடிய புதிய சாதனத்தை உருவாக்கியுள்ளனர். இந்த சாதனம் சூரிய சக்தியால் இயங்குகிறது.  இது மிதக்கும் செயற்கை இலை என அழைக்கப்படுகிறது. இந்த சாதனத்தை தாவரங்கள் சூரிய ஒளியை உணவாக மாற்றும் ஒளிச்சேர்க்கையின் அடிப்படையில் உருவாக்கி உள்ளனர், அடிப்படை வளங்கள் இல்லாத பகுதிகள் … Read more

13 கிமீ வேகத்தில் ஆந்திராவை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

டில்லி நேற்று வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவை நோக்கி 13 கிமீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது. நேற்று காலை வங்க கடலின் தென் கிழக்கு பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வந்தது. இதனால் தமிழகத்தின் வடமாவட்டங்களில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்தது. இதில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று … Read more

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது இந்தியா… செமி பைனலில் இருந்து பைனலுக்கு இட்டுச் சென்ற ஷமி…

நியூஸிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. ஷமி 9.5 ஓவரில் 57 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டம் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இந்திய அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன் … Read more

36 பேரைப் பலி வாங்கிய ஜம்மு காஷ்மீர் பேருந்து விபத்து

ஜம்மு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த பேருந்து விபத்தில் 36 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம், கிஷத்வார் என்ற பகுதியில் இருந்து ஜம்முவிற்கு ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. தோடா என்ற பகுதியில் இந்த பேருந்து சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 36 பேர் உயிரிழந்து 19 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தோருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்க் மீட்புப்பணி … Read more

விராட் கோலி சாதனை… முத்தங்களை பறக்க விட்ட கோலி – அனுஷ்கா ஜோடி… வாழ்த்திய சச்சின்…

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது 50வது சதத்தை அடித்து ஒருநாள் சர்வதேச போட்டியில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டம் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இந்திய அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன் … Read more

மோடியைக் கடுமையாகத் தாக்கி பேசிய ராகுல் காந்தி

பலோடா பஜார், சத்தீஸ்கர் சத்தீஸ்கரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றி உள்ளார்.   கடந்த 7 ஆம் தேதி அன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு முதற்கட்டத் தேர்தல் நடைபெற்ற நிலையில் மீதியுள்ள 70 தொகுதிகளுக்கு வருகிற 17ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.  இன்று மாலையுடன் சத்தீஸ்கரில் தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றது இன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பலோடா பஜார் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துக் கொண்டுள்ளார்,  … Read more

இன்று ரூ.150.05 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்

சென்னை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ரூ. 150.05 கோடி மதிப்புள்ள பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.   சென்னைப் பெருநகரப் பகுதியின் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதற்கு விரிவான திட்டமிடல் தேவை என்பதை உணர்ந்து 1972-ல் மெட்ராஸ் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் என்ற பெயரில் தற்காலிக அமைப்பாக இருந்து, பின்னர் 1975-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம், 1971-ன் கீழ் சட்டப்பூர்வ குழுமமாக மாற்றப்பட்டது. சென்னைப் பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்கால தேவைகளைக் கருதி … Read more

தமிழ்நாட்டின் 2வது கல்லூரி: புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: புதுக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  புதுக்கோட்டையில் கட்டப்பட்டுள்ள  அரசு பல் மருத்துவக் கல்லூரியை காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஏற்கனவே சென்னையில் மட்டும் பல் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட மாநிலத்தின் 2-வது பல் மருத்துவக் கல்லூரி புதுக்கோட்டையில் இன்று திறக்கப்பட்டுள்ளது.