ஆவின் பொருட்கள் விற்பனை 20 சதவீதம் அதிகரிப்பு! அமைச்சர் தகவல்…

நெல்லை: தமிழ்நாடு முழுவதும் ஆவின் பொருட்கள் விற்பனை  20 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறிய அமைச்சர் மனோ தங்கராஜ், புதிதாக பால் கூட்டுறவு சங்கங்கள் தொடங்க  நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும் கூறினார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் ஆய்வு கூட்டம்  நடைபெற்றது. இந்த நிகழ்வில் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் சிறப்பு விருந்தினராக  கலந்துகொண்டு சிறப்பாக … Read more

ஐஸ்லாந்தில் அதிர்ச்சி: 14மணி நேரத்தல் 800 முறை நிலநடுக்கம்!

ஐஸ்லாந்து நாட்டில்,  14 மணி நேரத்தில் 800 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், ஐஸ்லாந்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. ஐஸ்லாந்துதான் மனிதனால் மிக சமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நாடாகும். சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்னர் வைகிங் என்ற கடல் கொள்ளைக்காரர்கள் ஏதேச்சையாக கண்டறிந்தனர். மிக சமீபத்தில் மனிதர்கள் குடியேறிய நாடும் அதுவே. கடந்த சில ஆண்டுகளில் இது ஒரு சுற்றுலா நாடாக மாறியுள்ளது. உலகின் மிகப் பழைய குடியரசு நாடுகளில் ஐஸ்லாந்தும் ஒன்று. உலகின் மிகவும் … Read more

தீபாவளி பண்டிகை: முன்னாள் முதலமைச்சர் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து…

சென்னை:  தீபாவளி பண்டிகையையொட்டி,  முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்,  முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். புதுச்சேரி கவர்னர் தமிழிசை இது தொடர்பாக புதுச்சேரி கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், “பிரதமரின் ‘சுய சார்பு … Read more

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கோபுரம் அருகே கடைகள் கட்ட தடை!

சென்னை: திருவண்ணாமலை கோயில் ராஜகோபுரத்தை மறைத்து தமிழ்நாடு அரசு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டி வந்த நிலையில்,  கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கிழக்கு பகுதியில் உள்ள ராஜகோபுரத்திற்கு எதிரில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருந்த கடைகளை அகற்றி விட்டு, 6,500 சதுர அடியில், 151 கடைகளுடன், 40 அடி வரையிலான … Read more

நாளை தீபாவளி: கங்கா ஸ்நானம் செய்யும் முறை, நேரம் விவரம்…

சென்னை: நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அதிகாலையில், கங்கா ஸ்நானம் செய்யும் முறை, மற்றும் நேரம் வெளியாகி உள்ளது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை (12ந்தேதி – ஞாயிற்றுக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே குடும்பத்தில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நாள். தீபாவளிக்கு அனைவரும் புத்தாண்டை அணிந்து, வெடிவெடித்து பலவகையான பலகாரங்கள் செய்து, அதை இறைவனுக்கு படைத்து விட்டு உண்டு மகிழ்வர். சிவபெருமானுக்கு … Read more

வைகையில் வெள்ளம் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது தொடர் மழை காரணமாக, 71 அடி உயரம் கொண்ட வைகை அணை, நேற்று அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் உபரிநீராக வெளியேற்றப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்படுவதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும், வைகை ஆற்றில் யாரும் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யானைக்கல் தரைப்பாலம் … Read more

பஞ்சாப் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

டில்லி பஞ்சாப் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து தமிழகம், பஞ்சாப் , கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஆளுநருக்கும் அந்த மாநில அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. அந்த மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல், அதை கிடப்பில் போடுவதாக மேற்கூறிய மாநில அரசுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. ஆளுநரின் இத்தகைய செயல்பாடுகளுக்கு எதிராகத் தமிழகம், பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளன. … Read more

மின் கட்டணம் குறைப்பு : வீடுகள் கணக்கெடுப்பு தொடங்கியது

சென்னை தமிழகத்தில் பொது மின் கட்டணம் குறைப்பால் வீடுகளில் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது தெரிந்ததே.  இதனால் பல குடியிருப்புகளில் பொது மின் கட்டணமும் மிகவும் உயர்ந்தது.  இதையொட்டி மின் பயனர்கள் கட்டணக் குறைப்பு கோரி தமிழக மின் வாரியத்துக்குக் கோரிக்கை விடுத்தது. எனவே தமிழகத்தில், அதிகபட்சமாக 10 வீடுகள் அல்லது அதற்கும் குறைவாகவும், 3 மாடிகள் அல்லது அதற்கும் குறைவாகவும் உள்ள லிப்ட் இல்லாத அடுக்குமாடி குடியிருப்புக்கான மின் கட்டணம் ரூ.8.15-ல் … Read more

சென்னை உயர்நீதிமன்றம் பாஜக நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது 

சென்னை சென்னை உயர்நீதிமன்றம்  பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது. சென்னை அருகே உள்ள பனையூரில் பாஜக கொடிக்கம்பத்தை அகற்றும்போது மாநகராட்சியின் ஜே.சி.பி. இயந்திரத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டி தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே அமர்  … Read more

டி டி பொதிகை தொலைக்காட்சி பெயர் மாற்றம்

சென்னை விரைவில் டி டி பொதிகை தொலைக்காட்சியின் பெயர் மாற்றப்பட உள்ளதாக மத்திய அமைசர் எல் முருகன் தெரிவித்துள்ளார். இன்று சென்னை சேப்பாக்கத்தில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர், தமிழகத்தில் மத்திய தகவல் தொடர்புத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார். அமைச்சர் செய்தியாளர்களிடம், அனைவரும் முன்பு டிடி பொதிகை தொலைக்காட்சியில் ஒளியும் ஒலியும் பார்த்துக்கொண்டு இருந்தோம். என்வே தற்போது மீண்டும் டிடி பொதிகை தொலைக்காட்சியில் … Read more