டில்லியில் மழை : சற்றே தணிந்த மாசு மற்றும் புகை மூட்டம்

டில்லி நேற்று டில்லியில் மழை பெய்ததால் மாசு மற்றும் புகை மூட்டம் சற்று தணிந்துள்ளது. கடந்த சில வாரங்களாக டில்லியில் காற்று மாசு அதிகரித்து  காற்றுடன் அடர்ந்த பனிமூட்டமும் சேர்ந்ததால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர். இங்கு வாகன பெருக்கத்தால் ஏற்படும் புகை மாசு மட்டுமின்றி, பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற டில்லியைச் சுற்றியுள்ள மாநிலங்களில், அறுவடைக்குப் பின் விவசாய கழிவுகள் எரிக்கப்படும்போது வெளியாகும் புகையும் டில்லிக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே மாசுபட்ட காற்று மற்றும் … Read more

பாஜக கட்சிக்கு புதிய மாநில தலைவர்… முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜேந்திரா கர்நாடக மாநில தலைவராக நியமனம்…

கர்நாடக மாநில பாஜக தலைவராக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பாவின் மகன் பி.ஒய். விஜயேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். சட்டசபை தேர்தல் தோல்விக்கு காரணமான நளீன் குமார் கட்டீல் ராஜினாமா செய்ததையடுத்து, பாஜக மாநில தலைவர் பதவி காலியானது. மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, சி.டி. ரவி உள்ளிட்டோரின் பெயர்கள் மாநில தலைவர் பதவிக்கு அடிபட்ட நிலையில் விஜேந்திராவை மாநில தலைவராக நியமித்துள்ளார் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் லிங்காயத் … Read more

அமெரிக்க மருத்துவர்களின் உலகின் முதல் முழு கண் மாற்று அறுவை சிகிச்சை…

அமெரிக்காவின் நியூயார்க் நகர மருத்துவர்கள் உலகின் முதல் முழு கண் மாற்று அறுவை சிகிச்சையை நிகழ்த்தியுள்ளனர். இதுவரை ஒரு சில வகையான பார்வை இழப்புகளுக்கு மட்டும் பொதுவாக கார்னியா (Cornea) மாற்று அறுவை சிகிச்சை – – கண்ணுக்கு முன்னால் உள்ள தெளிவான திசு – செய்யப்பட்டு வந்தது. ஒரு முழு கண்ணையும் – கண் பார்வை, அதன் இரத்த நாளங்கள் மற்றும் மூளையுடன் இணைக்க வேண்டிய முக்கியமான பார்வை நரம்பு – மாற்றி அறுவை சிகிச்சை … Read more

ராகிங் செய்யும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ராகிங் செய்யும் மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் கோவையில் உள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் ஒருவர் ராகிங் செய்யப்பட்ட சம்பவத்தில் அதே கல்லூரியைச் சேர்ந்த 8 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதையொட்டி மாணவர்கள் ராகிங் போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்ராஜ் செய்தியாளர்களிடம், “கடந்த பல வருடங்களாக அண்ணா பல்கலைக்கழகத்தில் ராகிங் … Read more

அண்ணாமலை பேச்சால் தேர்தலில் பாஜக டெபாசிட் இழக்கும் : கே எஸ் அழகிரி

சென்னை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி மக்களவை தேர்தலில் பாஜக அண்ணாமலையின் பேச்சால் டெபாசிட் இழக்கும் என தெரிவித்துள்ளார். இன்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கட்சியை வளர்ப்பதற்காக பல கட்டங்களாக விட்டுவிட்டு பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். பெரும் பணத்தை செலவு செய்து கட்சியினரை திரட்டி, குறிப்பிட்ட நகர வீதிகளில் அந்த பாதயாத்திரை நடைபெற்று … Read more

2024ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை அறிவிப்பு… ஜனவரியில் 6 நாட்கள் விடுமுறை…

2024ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை அறிவிப்பு… ஜனவரியில் 6 நாட்கள் விடுமுறை… தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுவிடுமுறை நாட்கள் குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி தடை ரத்து எதிர்த்து மேல்முறையீடு! அமைச்சர் ரகுபதி தகவல்

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி பலர் உயிரிழந்த நிலையில்,  தமிழக அரசுஆன்லைன்  சூதாட்ட தடை சட்டத்தை நிறைவேற்றியது. இதை எதிர்த்து ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், திறமை சார்ந்த ரம்மி, போக்கர்போன்ற விளையாட்டுகளை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டு என்று கூறி தடை விதித்து தமிழக … Read more

ஆளுநர் மீதான தமிழக அரசின் வழக்கு: மத்தியஅரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்…

டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் மீது  தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கை விசாரித்த  உச்சநீதிமன்றம் மத்தியஅரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போடக்கூடாது என்றும் கூறியுள்ளது. பல்வேறு மசோதாக்களுக்கு காலதாமதம் செய்த ஆளுநர் நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  இந்த விஷயத்தில் அட்டர்னி ஜெனரல் அல்லது சொலிசிட்டர் ஜெனரலின் உதவியை நாடுவதாக தெரிவித்து உள்ளது. மேலும், தமிழக … Read more

சென்னை பாரிமுனையில் பரபரப்பு! கோயிலில் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள பழமை வாய்ந்த கோயில்மீது மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசினார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஏற்கனேவ கடந்த இரு வாரத்துக்கு முன்பு ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது நினைவிருக்கலாம். சென்னை பாரிமுனை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீவீரபத்ரசாமி கோயில். இந்த கோயிலின்மீது,  மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி பெட்ரோல் குண்டு வீசியவரை கைது செய்த நிலையில், … Read more

அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: 28ந்தேதி முதல் விசாரணை

சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை வரும் 28ந்தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. அன்று முதல் வாதங்கள் தொடங்கும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி விசாரணை நடத்தப்படும் என கூறி, வழக்கை  நவ.28-ம் தேதிக்கு ஒத்தி வைத்ததுடன், அன்று தங்கம் தென்னரசு தரப்பு தங்களது  வாதங்களைத் … Read more