தொடர்ந்து 533 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 533 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி சென்னையில் தொடர்ந்து 533 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் … Read more

டெங்குவால் பாதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்

சென்னை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கமணி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக தமிழகம் எங்கும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது.  தமிழக அரசு இந்த பரவலைத் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நேற்று நள்ளிரவு அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி லேசான காய்ச்சல் காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அவருக்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை … Read more

மலிவு விலையில் வெங்காயம் விற்பனை : மத்திய அரசு முடிவு

டில்லி வெங்காயம் விலை உயர்ந்து வருவதால் மலிவு விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாளுக்கு நாள் வெங்காய விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. எனவே கரீப் பருவப் பயிர் வரத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வெங்காய விலை அதிகரிப்பிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்க மத்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக வெங்காயம், கிலோ ஒன்றுக்கு 25 ரூபாய் என்ற மானிய விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. … Read more

கர்நாடக காங்கிரஸில் பிளவு ஏற்படுத்த முயலும் குமாரசாமி’

பெங்களூரு கர்நாடகாவில் ஆலும் கட்சியான காங்கிரசில் பிளவு ஏற்படுத்த ம ஜ த தலைவர் குமாரசாமி முயல்வதாக தகவல்கள் கூறுகின்றன. காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் சட்டசபைத் தேர்தலில் மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக வருவதில் சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் இடையே போட்டி காணப்பட்டது.  டில்லியில் இரு தலைவர்களும் முகாமிட்டு கட்சியின் உயர்மட்ட தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்தனர். பிறகு கட்சி மேலிட முடிவின்படி, கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவி வகிக்கிறார். துணை முதல்வரால டி.கே. சிவக்குமார் … Read more

வாகனங்களில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு

சபரிமலை சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பாஸ்ட்டேக் மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்படுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைகளுக்காக நடை திறக்கப்பட உள்ளது.  இந்த சீசனில் லட்சக்கணக்கானோர் கோவிலுக்கு வருவது வழக்கமாகும்.   அதில் பெரும்பாலானோர் சொந்த மற்றும் வாடகை வாகனங்கலில் கோவிலுக்கு வருவார்கள் இவ்வாறு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்களது கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை நிலக்கல் பகுதியில் உள்ள பார்க்கிங் மைதானத்தில் நிறுத்துவது வழக்கம். நிலக்கல் … Read more

தீபாவளியையொட்டி இன்று அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும்

சென்னை தீபாவளியையொட்டி இன்று அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஏற்கனவே  இதையொட்டி ஞாயிற்றுக்கிழமையான இன்று ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும் எனத் தமிழக அரசின் உணவுத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. வாரத்தின் அனைத்து நாட்களிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தீபாவளிக்காக முன்கூட்டியே பொருட்கள் வாங்குவார்கள் என்பதால் ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே ஞாயிற்றுக்கிழமையான … Read more

நாளை தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை

சென்னை நாளை தமிழகத்தின்  10 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஒரு சில இடங்களில் மிதமானது முதல் லேசான மழையும் பெய்து வருகிறது. வானிலை மையம் சார்பில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளையும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் 10 … Read more

 அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

மும்பை அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 19 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்யப்போவதாகவும், ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாகவும் தொலைபேசியில் மிரட்டல் வந்து. இது தொடர்பாகப் பீகாரைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்,. இதைப் போல் கடந்த வாரம் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானிக்கு மூன்று மின்னஞ்சல்கள் முறையே ரூ.20 கோடி, ரூ.200 கோடி, … Read more

பாஜக நிர்வாகிக்கு ஜாமீன் மறுப்பு

செங்கல்பட்டு பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த பனையூரில் பாஜக. கொடிக்கம்பத்தை அகற்றும்போது மாநகராட்சியின் ஜே.சி.பி. இயந்திரத்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். நேற்று இந்த மனு … Read more

சூதாட்ட செயலியை தடை செய்யாதது ஏன் ? : மோடிக்கு பூபேஷ் பகல் வினா

ராய்ப்பூர்’ சதீஷ்கர் முதல்வர் பூபேஷ் பகல் சூதாட்ட செயலியை மத்திய அரசு தடை செய்யாதது குறித்து மோடியிடம் வினா எழுப்பி உள்ளார். சதீஷ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பகல் மஹாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களிடம் இருந்து ரூ.508 கோடி பெற்றதாக சமீபத்தில் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது.  இது சதீஷ்கர் மாநிலத்தை மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துர்க் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இந்த விவகாரத்தைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் மோடி, “சூதாட்ட … Read more