உலகக் கோப்பை போட்டியில் இருந்து விலகல்! ஹர்திக் பாண்ட்யா அறிவிப்பு…

டெல்லி: தற்போது நடைபெற்று வரும் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுவதாக பிரபல இந்திய  கிரிக்கெட் வீரர்  ஹர்திக் பாண்ட்யா அறிவித்து உள்ளார். காயம் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில், உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த,  ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா  காயம் காரணமாக தற்போது நடைபெற்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில்,  மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். பாண்ட்யா  விலகியதை சர்வதேச … Read more

சென்னையில் கொட்டும் மழையில் ‘ஹெல்த் வாக்’ திட்டத்தை மேயர் பிரியாவுடன் இணைந்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னை பெசன்ட் நகர் பகுதியில் ‘ஹெல்த் வாக்’ திட்டத்தை மேயர் பிரியா மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியடன் உடன் இணைந்து  கொட்டும் மழையில்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஜப்பானில் இருப்பதைப் போல தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், ‘ஹெல்த் வாக்’ சாலைகள் அமைக்கும் திட்டத்தைச் சென்னை பெசன்ட் நகரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். … Read more

சந்திரபாபு நாயுடு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

அமராவதி வலது கண் புரைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீடு திரும்பி உள்ளார். கடந்த மாதம் ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கும் மேல் ஊழல் நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை மாநில ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவர் நீதிமன்றக் காவலில், ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சந்திரபாபு நாயுடுவுக்கு வலது கண்ணில் புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஜாமீன் கோரி … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெவித்துள்ளது.  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி காரணமாகக் கடந்த சில தினங்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இன்று காலை முதல் சென்னை உட்படத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி வரை கனமழை தொடரும் என்று சென்னை … Read more

காற்று மாசு அடைவதால் சென்னை மக்களுக்குச் சர்க்கரை நோய் எச்சரிக்கை

சென்னை சென்னை மக்களுக்குக் காற்று மாசு காரணமாகச் சர்க்கரை நோய் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட சில நகரங்களிலும் டில்லியைப் போலவே காற்று மாசுபாடு அதிகமாக உள்ளது. அதாவது உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த வரம்பை விட காற்றின் தரம் மோசமாக உள்ளது. இப்படி மாசுபட்ட காற்றைச் சுவாசிப்பதால் “டைப் 2” நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கலாம் என ஆய்வு முடிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது . சென்னை மற்றும் டில்லியில் காற்று மாசுவுக்கும் … Read more

கோவை உயிரியல் பூங்காவில் இருந்து சென்னைக்கு விலங்குகள் இடமாற்றம்.

சென்னை சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கோவை மநகராட்சி வ வு சி உயிரியல் பூங்காவில் இருந்து விலக்குகள் இடமாற்றம் செய்யப்படுகின்றன. இந்தியாவிலேயே மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரே உயிரியல் பூங்காவான கோவை வ.உ.சி பூங்கா கடந்த 1965 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.   இந்த உயிரியல் பூங்காவில் பழைய கட்டமைப்பு வசதிகள் மற்றும் விலங்கினங்களின் பராமரிப்பு விவகாரத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாறுபாடு துறையின் … Read more

தேர்தலில் போட்டியிட மறுக்கும் முதல்வரின் சகோதரி

ஐதராபாத் ஆந்திர முதல்வரின் சகோதரி ஒய் எஸ் சர்மிளா தெலுங்கானா  மாநிலச் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மறுத்துள்ளார். வரும் 30 ஆம் தேதி அன்று தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 30-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.சர்மிளா, தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்த முடிவை வாக்குகள் … Read more

கன்னியாகுமரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி நாளை கன்னியாகுமரியில் கனமழை பெய்யலாம் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.  தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள சூழலில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. வரும் 6 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நாளை தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மழக்கு தேவையான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் செய்வதற்காக … Read more

கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோவை வெளியிட்டார் ரஜினிகாந்த்…

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் இன்ட்ரோ வீடியோவை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். 1996 ஆம் ஆண்டு கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் வெளியான, இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இந்தியன் 2 என்ற பெயரில் உருவாகி உள்ளது. கமல்ஹாசன் உடன் ப்ரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து .தயாரிக்கும் இந்தப்படத்திற்கு … Read more

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க உத்தரவிட்ட மேலாண்மை ஆணையம்

டில்லி தமிழகத்துக்கு கர்நாடக அரசு காவிரி நீர் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற  உத்தரவின் படி காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்து கொள்வதற்காகக் காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இவ்விரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்து உள்ளன. கடந்த 30-ந்தேதி காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 89-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா … Read more