லியோ சக்ஸஸ் மீட் : விஜய் சொன்ன ‘குட்டி ஸ்டோரி’க்கு உரிமை கொண்டாடிய ப்ளூ சட்டை மாறன்

லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி தன்னுடையது எனக் கூறி அதற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வசூலை வாரிக்குவித்த லியோ படத்தின் வெற்றி விழா நவம்பர் 1 ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய் ஒரு குட்டி ஸ்டோரி ஒன்றை தனது ரசிகர்களுக்கு கூறினார் அதில், “காட்டுக்கு வேட்டைக்கு போகும் வேடர்கள் … Read more

நடிகர் விஜய் : தாய்லாந்து பிஸி ஷெட்யூல் இடையிலும் புஸ்ஸி ஆனந்தை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்…

லியோ பட சக்ஸஸ் மீட் முடிந்ததும் தளபதி 68 படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நடிகர் விஜய் இன்று பேங்காக் புறப்பட்டார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ஒரு பாடல் மற்றும் சண்டைக் காட்சி ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற உள்ளதை அடுத்து வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் பேங்காக்கில் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று பேங்காக் செல்ல நடிகர் விஜய் திட்டமிட்டிருந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் … Read more

நீட் விலக்கு கோரி திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டார் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி

சென்னை: நீட் விலக்கு கோரி திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி கையெழுத்திட்டார்.  காங்கிரஸ் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் நிர்வாகிகளிடம் அமைச்சர் உதயநிதி கையெழுத்து பெற்றார். நீட் தேர்வுக்கு விலக்கு கோரி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களைப் பெறும் வகையில் திமுக கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது.  மக்கள் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரி வாயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் முகாம் அமைத்து டிஜிட்டலில் … Read more

திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் மீதா சொத்துக் குவிப்பு வழக்கு: நவம்பர் 27ஆம் தேதி இறுதி விசாரணை!

ஸ்ரீவில்லிபுத்தூர்:  திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நவம்பர் 27ந்திக்கு ஒத்தி வைத்த நீதிமன்றம், அன்றைய தினம்  இறுதி விசாரணை தொடங்கும் என அறிவித்து உள்ளது. 2006 மாநில சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்குப் பிறகு மு. கருணாநிதி ஐந்தாவது முறையாக தமிழக முதல்வராகப் பதவியேற்றார், 1952 தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தில் முதல் சிறுபான்மை அரசாங்கத்தை அமைத்தார். அவரது தலைமையிலான அமைச்சரவையில் கேகேஎஸ்எஸ்ஆரும் இடம்பெற்றிருந்தார். இவர்,  திமுக ஆட்சிக் காலத்தில்,  … Read more

நாளை ஆரஞ்ச் அலர்ட் – இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால்  நாளை (4ந்தேதி) ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இன்று பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு … Read more

தமிழக கோவில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

சென்னை தமிழக அரசு கோவில் பணியாளர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் பெறக்கூடிய திருக்கோவில்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படி 42% ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. அதை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என பணியாளர்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.  தமிழக அரசு அந்த கோரிக்கையை ஏற்று ஜூலை 1-ந்தேதி முதல் கணக்கிட்டு, அகவிலைப்படியை மேலும் 4% உயர்த்தி … Read more

அருள்மிகு காயநிர்மாலேஸ்வரர் திருக்கோயில்,  ஆறகழூர், சேலம் மாவட்டம்.

அருள்மிகு காயநிர்மாலேஸ்வரர் திருக்கோயில்,  ஆறகழூர், சேலம் மாவட்டம். சிவதல யாத்திரை சென்ற வசிஷ்ட முனிவர், வசிஷ்ட நதிக்கரையில் பல இடங்களில் தவம் செய்தார். அவ்விடங்களில் எல்லாம் ஒரு இலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து ஆத்மார்த்தமாக வணங்கி சிவனது அருள் பெற்றார். அவர் இத்தலத்தில் தவம் செய்தபோது, திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தருவது போல சிவதரிசனம் பெறவேண்டும் என விரும்பினார். எனவே, அவர் பிரதிஷ்டை செய்த இலிங்கத்தில் ஜோதி வடிவாக அமர்ந்தார் சிவன். காலப்போக்கில் இந்த இலிங்கம் மண்ணில் … Read more

கெஜ்ரிவாலை கைது செய்ய விரும்பும் பாஜக : ஆம் ஆத்மி அமைச்சர் குற்றச்சாட்டு

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைது செய்ய பாஜக விரும்புவதாக அம்மாநில அமைச்சர் கோபால் ராய் கூறியுள்ளார். அமலாக்கத்துறை டில்லி மதுபான ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகும்படி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியிருந்தது.  ஏற்கனவே இந்த வழக்கில் மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு உள்ளதால் கெஜ்ரிவாலும் அடுத்து கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி அச்சம் தெரிவித்து வருகிறது. இன்று,டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் செய்தியாளர்களிடம், … Read more

வரும் 4 ஆம் தேதி தஞ்சையில் நடக்க இருந்த அதிமுக பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

சென்னை வரும் 4 ஆம் தேதி அன்று தஞ்சையில் நடைபெற இருந்த அதிமுக பொதுக்கூட்டம் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் 4 ஆம் தேதி அன்று தஞ்சையில் அதிமுக நடைபெற இருந்தது. அந்த பொதுக்கூட்டம் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. அதிமுக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 52-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி, 4.11.2023 அன்று … Read more

புதுச்சேரியில் தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி 

புதுச்சேரி புதுச்சேரியில் தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வரும் 12 ஆம் தேதி நாடெங்கும் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. ஆண்டு  தோறும் தீபாவளி பண்டிகை அன்று, பொதுமக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்நிலையில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுவதாக, நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் உச்சநீதிமன்றம் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்தது. அதுவும் பசுமை … Read more