தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவக் கல்வி இடங்களுக்குக் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு 

சென்னை தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவக் கல்வி பட்டப்படிப்புக்கான இடங்களுக்கு கால்ந்தாய்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் வசம் தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்காக மொத்தம் உள்ள காலியிடங்களில் 15 சதவீத இடங்கள் உள்ளன. இதற்கான கலந்தாய்வை மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக நடத்தி வருகின்றன. தற்போது நிரப்பப்படாமல் மீதம் 86 இடங்கள் உள்ளன. தமிழக அரசு இந்த இடங்களை மாநில அரசே நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் 8 மாவடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது. ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்து இருந்தது. தற்போது தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை … Read more

கவுதமி அளித்த நில மோசடி புகார் குறித்து காவல்துறை விசாரணை

காரைக்குடி பிரபல நடிகை கவுதமி அளித்த நில மோசடி புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், காதல் இளவரசன் கமல்ஹாசன் உள்படப் பல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கிய கவுதமி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அக்கறை பகுதியில் வசித்து வருகிறார். கடந்த மாதம் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து இவர் ஒரு புகார் மனுவை அளித்தார் அந்த புகார் மனுவில், ”நான் எனது மகளின் பராமரிப்பு செலவு மற்றும் எனது மருத்துவச் சிகிச்சைக்காக எனக்குச் சொந்தமான இடத்தை … Read more

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜாமீனில் விடுதலை

ராஜமுந்திரி ராஜமுந்திரி சிறையில் இருந்து ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சிக்காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் திறன் மேம்பாட்டுத் திட்ட ஊழல் வழக்கில் கடந்த மாதம் 9-ந்தேதி கைது செய்யப்பட்டார்.  ஆந்திர அரசுக்கு இந்த ஊழலால் ரூ.300 கோடி வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது என குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடுவின் காவலை … Read more

அண்ணாமலை சனாதன விவகாரத்தை அரசியல் ஆக்குகிறார் : உதயநிதி வாதம் 

செனனை சென்னை  உயர்நீதிமன்றத்தில்  பாஜக தலைவர் அண்ணாமலை சனாதன விவகாரத்தை அரசியல் ஆக்குவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பு தெரிவித்துள்ளது. தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது சர்ச்சையானது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர்பாபு மீது இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது, அப்போது உதயநிதி ஸ்டாலின்தரப்பில்; ”பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சனாதன விவகாரத்தை அரசியலாக்குகிறார். மனுதாரர் சனாதன பேச்சு தொடர்பாக ஆதாரங்களை சமர்ப்பிக்காததால் … Read more

மீண்டும் முகேஷ் அம்பானிக்குக் கொலை மிரட்டல்

மும்பை பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு 4 நாட்களில் 3 ஆம் முறையாகக் கொலை மிரட்டல் வந்துள்ளது. உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் மும்பையில் வசித்து வருகிறார்.  கடந்த வெள்ளிக்கிழமை முகேஷ் அம்பானியின் நிறுவனத்துக்கு இ-மெயில் ஒன்று வந்தது. அந்த மெயிலில் ரூ.20 கோடி கேட்டு முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்தப் பணத்தை கொடுக்கவில்லை என்றால் முகேஷ் அம்பானியைக் கொலை செய்து விடுவதாக என … Read more

நவம்பர் 1 முதல் 3 வரை சென்னை பீச் – தாம்பரம் இடையிலான இரவு நேர புறநகர் ரயில்கள் ரத்து… சேலம் சூப்பர் பாஸ்ட் ரயில் வழித்தடம் மாற்றம்…

சென்னை பீச் – தாம்பரம் இடையிலான புறநகர் இரவு நேர ரயில்கள் நாளை முதல் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை வேளச்சேரி மற்றும் செயின்ட் தாமஸ் மவுண்ட் இடையிலான பறக்கும் ரயில் திட்டம் இணைப்பு பணிகள் மற்றும் இதர பணிகள் நடைபெற்று வருவதை அடுத்து மூன்று நாட்களுக்கு இரவு 10:55 முதல் அதிகாலை 2:55 வரை (4 மணி நேரம்) சென்னை பீச் – தாம்பரம் வழித்தடத்தில் இரவு நேர ரயில் … Read more

திருடர்களே செல்போனை ஒட்டுக் கேட்பார்கள் : ராகுல் காந்தி கடும் விமர்சனம்

டில்லி குற்றவாளிகள் மற்றும் திருடர்கள் தான் செல்போனை ஒட்டுக் கேட்பார்கள் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.  இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி டில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்த சந்திப்பில் ராகுல் காந்தி, “ஆப்பிள் நிறுவனம் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. இவ்வாறு செல்போன்களை ஒட்டுக்கேட்பது நேர்மையானவர்கள் செய்யும் செயல் அல்ல.  அது குற்றவாளிகள் மற்றும் திருடர்கள் செய்யும் செயல்.  இளைஞர்கள் ஏகபோக நிறுவனங்களின் இளைஞர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். நாட்டை ஏகபோக முதலாளிகளிடம் … Read more

தமிழக அரசு மாஞ்சா நூலுக்கு தடை விதித்து அரசாணை வெளியீடு

சென்னை தமிழக அரசு மாநிலம் முழுவதும் மாஞ்சா நூலுக்குத் தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. நாடெங்கும் காற்றாடி விட மாஞ்சா நூல் எனப்படும் கெட்டியான நூல் பயன்படுத்தப்படுகிறது.  இந்த நூல் அறுபட்டு கீழே விழும் போது அந்த நூலினால் பலர் காயமடைகின்றனர்.  ஒரு சில வேளைகளில் கழுத்து அறுபட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.  எனவே மாஞ்சா நூலுக்கு அவ்வப்போது தடை விதிக்கப்பட்டு அந்த தடையை அரசு நீட்டித்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தமிழகம் முழுவதும் … Read more

சென்னையில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரட்டிப்பாகியுள்ளது

சென்னையில், பிரிவியூ தியேட்டர்கள், ஜிம்கள், பார்ட்டி மொட்டை மாடிகள், ரூப்-டாப் பார்பிக்யூ, நீச்சல் குளங்கள், தியானம், யோகா செய்வதற்கான இடம் மற்றும் பல வசதிகளுடன் கூடிய ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளின் தேர்வு அதிகரித்து வருகிறது. 2023 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நகரத்தில் ஆடம்பர வீடுகள் விற்பனை அதிகரித்துள்ளதாக அனராக் (ANAROCK) ஆய்வுக்கு குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2022ம் ஆண்டு இதே காலகட்டத்தில் 1370 வீடுகள் மட்டுமே விற்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இதுவரை … Read more