பெங்களூரில் 40க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் எரிந்து நாசம்

பெங்களூரு வீரபத்திர நகரில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 40 தனியார் பேருந்துகள் முழுவதுமாக எரிந்து நாசமானது. பேருந்துகளுக்கு பாடி பில்டிங் தொழிற்கூடம் ஒன்றில் ஏற்பட்ட தீ பரவியதில் அங்கு நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்களுக்கு பரவியதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தீயினால் அங்கு நிறுத்திவைக்கப்பட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களின் வாகனங்கள் வரிசையாக தீப்பிடித்து எரிந்தது. 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்ததாகவும் இவை அனைத்தும் தீயில் கருகி நாசமானதாகவும் கூறப்படுகிறது. தீயை அடுத்து தொழிற்கூடத்தில் இருந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு தீயணைப்பு … Read more

தெலுங்கானா தேர்தல் பிரச்சாரத்தில் பயங்கரம்… பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் எம்.பி. பிரபாகர ரெட்டிக்கு கத்திக்குத்து

தெலுங்கானா மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் எம்.பி. பிரபாகர ரெட்டியை கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சித்திபெட் மாவட்டத்தில் உள்ள டுப்பக்கா சட்டமன்ற தொகுதி வேட்பாளராக உள்ள பிரபாகர ரெட்டி, சூரம்பள்ளி கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பிரபாகர் ரெட்டியை வயிற்றில் கத்தியால் குத்தினார். இதனையடுத்து பிரபாகர் ரெட்டி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கத்தியால் குத்திய நபரை பிடித்த அந்த கிராம மக்கள் மற்றும் … Read more

லியோ வெற்றி விழா நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி…

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தின் வெற்றிவிழா நவம்பர் 1 ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதற்கு அனுமதி கேட்டு காவல்துறையிடம் விண்ணப்பித்த நிலையில் நிபந்தனைகளுடன் அதற்கு அனுமதி அளித்துள்ளனர். தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு படம் வெளியான ஒரேவாரத்தில் ரூ. 416 கோடி வசூல் செய்ததை அடுத்து லியோ படத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கு 200 முதல் 300 கார்களுக்கு மேல் அனுமதிக்க முடியாது … Read more

மதுபான கொள்கை முறைகேடு: மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் மறுப்பு

டெல்லி: மதுபான கொள்கை  முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள டெல்லி மாநில முன்னாள் துணை முதல்வரான ஆத்ஆத்மி கட்சியைச்சேர்ந்த  மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்து உள்ளது. டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ, அமலாக்கத் துறை … Read more

கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் நாளை 53 மின்சார ரயில் சேவைகள் ரத்து!

சென்னை: நாளை (31ந்தேதி) சென்மை கடற்கரை – தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே இயக்கப்பட்டு வரும் ரயில் சேவைகளில்,  53 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்து உள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம் தடத்தில் நாளை (31ந்தேதி – செவ்வாய்கிழமை)  காலை 10:18, 10:24, 10:30, 10:36, 10:46, 11:06, 11:14, 11:22, 11:30, 11.50, மதியம் 12:00, 12:10, 12:30, 12:50, 1:15, 1:30, 2:00, 2:45 மணி மின்சார ரயில்களின் … Read more

கிறிஸ்தவ கூட்டத்தில் குண்டுவெடிப்பு: முதல்வர் பினராயி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்…

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் களமசேரியில் வழிபாட்டு கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து,   இன்று  அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது. இந்த  கூட்டத்திற்கு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் களமச்சேரி என்ற இடத்தில்  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜெபக்கூட்டம் நடைபெற்றிருக்கும்போது  அடுத்தடுத்து மூன்று வெடிகுண்டுகள் வெடித்தன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர்  கூடியிருந்த அந்த  இடத்தில் நடைபெற்ற வெடிகுண்டு வெடிப்புச் சம்பவம் காரணமாக 36 பேர் படுகாயம் … Read more

அடுத்த 3 மணி நேரத்துக்கு 18 தமிழக மாவட்டங்களில் மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்துக்கு 18 தமிழக மாவட்டங்களில் மழை  பெய்யலாம் என அறிவித்துள்ளது. தற்போது இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. ஏற்கனவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. தற்போது தமிழகத்தின் 18 மாவட்டங்களில் … Read more

கேரள குண்டு வெடிப்பு : தமிழக ரயில் நிலையங்களில் தீவிர சோதனை

எர்ணாகுளம் கேரளாவில் உள்ள தேவாலயத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததையொட்டி தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது இன்று கலை கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டு கூட்டரங்கில் திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்து 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவை மட்டுமின்றி நாடெங்கிலும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்நிலையில், கேரள குண்டு வெடிப்பு குறித்து சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை … Read more

அரசு நிதியில் ஆன்மீகப் பயணம் : 300 பேரைத் தேவு செய்ய முடிவு

சென்னை அரசு நிதியில் காசிக்கு ஆன்மீக பயணம் செய்ய 300 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அரசு நிதியில் காசிக்கு ஆன்மீகப் பயணம் செய்ய 200 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.  இந்நிலையில் இன்று தமிழக அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. அதில் அமைச்சர், ”2022-2023-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில், ‘ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு இவ்வாண்டில் 200 நபர்கள் … Read more

கேரள குண்டு வெடிப்புக்கு ராகுல் காந்தி கண்டனம்

டில்லி கேரள மாநிலத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கு ராகுல்  காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று காலை கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மதவழிபாட்டு கூட்டரங்கில் திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தை இச்சம்பவம் உலுக்கியுள்ளது. இந்நிலையில் திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கொடக்கரா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், மார்ட்டின் என்பவர் மதவழிபாட்டு கூட்டரங்கில் வெடிகுண்டு வைத்தது நான் தான் … Read more