நாடு முழுவதும் சோதனை சாவடிகளை அகற்ற வேண்டும்! அண்ணாமலையிடம் லாரி உரிமையாளர்கள் சங்கம் மனு

சங்ககிரி: ஒரே நாடு ஒரே வரி திட்டத்தை நடைமுறைப்படுத்தி  நாடு முழுவதும் உள்ள அனைத்து சோதனை சாவடிகளையும் அகற்ற வேண்டும் நாடு முழுவதும் சோதனை சாவடிகளை அகற்ற வேண்டும் என  மாநில பாஜக தலைவர்  அண்ணாமலையிடம் லாரி உரிமையாளர்கள் சங்கம் மனு கொடுத்துள்ளது. தமிழ்நாடு மாநில பா.ஜ.க.  தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும்  பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். தென்மாவட்டங்களில் பாத யாத்திரையை முடித்த நிலையில், தற்போது சங்ககிரி, கிருஷ்ணகிரி … Read more

2025-ம் ஆண்டில் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும்! இஸ்ரோ முன்னாள் தலைவர் பேட்டி

நாகர்கோவில்: ககன்யான் திட்டம் 2025-ம் ஆண்டில் வெற்றிகரமாக செயற்படுத்த அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள் மேற் கொள்ள வேண்டி உள்ளது இஸ்ரோ முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் தனது திட்டத்திற்கு ககன்யான் எனப் பெயரிட்டுள்ளது. . ககன்யான் திட்டத்தின் மூலம் வரும் 2025ஆம் ஆண்டில், மூன்று இந்திய விண்வெளி ஆய்வாளர்கள் விண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்பட உள்ளனர். இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ள   இந்திய … Read more

தமிழக அரசை கலைத்து பாருங்களேன்! மத்தியஅரசுக்கு அமைச்சர் உதயநிதி சவால்…

நெல்லை: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு அரசை கலைக்கும் யோசனை இல்லை என்று கூறிய நிலையில்,  கலைப்பத குறித்து “யோசித்துத்தான் பார்க்கட்டுமே” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்   சவால் விடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கிண்டி ராஜ்பவன்மீது, சென்னை  சேர்ந்த ரவுடியான கருக்கா வினோத், பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி  வீசிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை வீடியோவுடன் … Read more

சென்னையில் மாடு முட்டியதால் காயமடைந்த முதியவர் மரணம்

சென்னை சென்னையில் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்த முதியவர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களாகச் சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரியும் மாடுகள் பொதுமக்களைத் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அண்மையில் ஆவடியை அடுத்த பட்டாபிராம் சோராஞ்சேரி பகுதியில் வீட்டு வாசாலில் நின்று குழந்தைக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்த பெண்ணை பசுமாடு முட்டியது. அதிர்ச்சியடைந்த அப்பெண் தன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மற்றொரு வீட்டிற்குள் ஓடி தப்பியது தொடர்பான வீடியோ … Read more

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில்,, ராமேஸ்வரம்.

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில்,, ராமேஸ்வரம். விபீஷணன் தன் சகோதரன் இராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், அவளை இராமரிடமே ஒப்படைக்கும்படியும் புத்திமதி கூறினான். இராவணன் அவனது கருத்தை ஏற்க மறுத்ததோடு, காலால் எட்டி உதைக்கச் சென்றான். எனவே, விபீஷணன் இராவணனைப் பிரிந்து இராமபிரானிடம் வந்தான். இராமபிரான் இராமேஸ்வரத்தில் தங்கியிருந்ததை அறிந்த அவன் அவரைச் சந்தித்து ஆசிபெற்றான். அவனது நற்குணத்தை அறிந்த ராமன், அவனைத் தனது சகோதரனாக ஏற்றுக்கொண்டார். மேலும், இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவே முறைப்படி … Read more

அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று தெரிவித்து இருந்தது. தற்போது தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் … Read more

வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தமிழக தேர்தல் அதிகாரி

சென்னை இன்று தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இந்தியத் தேர்தல் ஆணைய உத்தரவின்படி செப்டம்பர் அல்லது அக்டோபரில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறும். து, ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அவ்வகையில் இன்று, இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்குகிறது. அதன்படி இன்று காலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.  அதன்படி தமிழகத்தில் … Read more

எனக்கு சிறையிலும் என் குடும்பத்தினருக்கு வெளியிலும் உயிர் ஆபத்து : சந்திரபாபு நாயுடு

ராஜமுந்திரி ப்ன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தமக்குச் சிறையிலும் தமது குடும்பத்தாருக்கு வெளியிலும் உயிர் ஆபத்து உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ஊழல் செய்ததாகக் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.  சிறையில் இருந்து சந்திரபாபு நாயுடு விஜயவாடா ஊழல் ஒழிப்பு நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், … Read more

இன்று சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

சென்னை இன்று சென்னையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடப்பதால் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.   இன்று 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்கத்தில் நடக்கும் 26-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. இதையொட்டி சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இன்று பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. … Read more

ஆளுநர் தனது வேலையை மட்டும் பார்த்தால் பிரச்சினை இல்லை : சீமான்

சிவகங்கை ஆளுநர் தனது வேலையை மட்டும் பார்த்தல் பிரச்சினைகள் இருக்காது எனச் சீமான் கூறி உள்ளார். இன்று சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடைபெற்ற மருது பாண்டியரின் 222வது குருபூஜை விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் சீமான், “ஆளுநர் அரசியல் பேசியதாலும், தினமும் அவதூறு குண்டை வீசியதாலும் வெறுப்பாகி போனவர்கள் குண்டை வீசி இருக்கலாம். ஆளுநர் தனது வேலையை மட்டும் பார்த்தால் இதுபோன்ற பிரச்சனை இருக்காது.  மத்திய அரசு ஆர்.எஸ்.எஸ்-ன் கோட்பாடுகளை மத்திய அரசு அப்படியே செயல்படுத்தி … Read more