உலகக் கோப்பை கிரிக்கெட் : இன்று சென்னையில்  பாகிஸ்தான் தென் ஆப்ரிக்கா மோதல்

சென்னை இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சென்னையில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்ரிக்கா மோதுகின்றன. இன்று 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்கத்தில் நடக்கும் 26-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. பாகிஸ்தான் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் நெதர்லாந்து, இலங்கையை தோற்கடித்த பிறகு இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளிடம் வரிசையாகத் தோற்று சிக்கலில் தவிக்கிறது. எனவே எஞ்சிய 4 லீக்கிலும் வெற்றி பெற்றால் … Read more

வரும் 31 ஆம் தேதி முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை வரும் 31ஆம் தேதி அன்று முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.   வரும் 31 ஆம் தேதி அன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டம் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் 31 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் கொள்கை ரீதியிலான சில முடிவுகளை எடுப்பது குறித்தும் … Read more

அனுமதி இல்லாத கடைகளை அகற்றிய கடலூர் மாநகராட்சி அதிகாரி வாகனம் முற்றுகை

கடலூர் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 123 கடைகளை அகற்றிய மாநகராட்சி அதிகாரி வாகனம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்துள்ளது. கடலூரில் உள்ள கடற்கரைச் சாலை, பழைய ஆட்சியர் அலுவலக சாலை மற்றும் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் சாலையோரமாக நூற்றுக்கணக்கான கடைகள் இருந்து வருகின்றன. மாநகராட்சியில் உரிய அனுமதி பெற்று சில கடைகள் இயங்கி வருகின்றன. ஆனால் பல கடைகள் அனுமதி இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்து இயங்கி வருகின்றன. எனவே கடலூர் மாநகராட்சி சார்பில் சாலையோரமாக … Read more

தொலைக்காட்சி விவாதத்தின் போது பாஜக வேட்பாளரின் கழுத்தை நெரித்த எம் எல் ஏ

ஐதராபாத் தொலைக்காட்சி விவாதத்தின் பொது தெலுங்கானா பாஜக வேட்பாளரின் கழுத்தை பி ஆர் எஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் நெரித்துள்ளார். அடுத்த மாதம் 30 ஆம் தேதி தெலுங்கானாவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஒரு சில தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரசாரம் தொடங்கிவிட்டது. தேர்தல் தொடர்பாக ஐதராபாத்தில் தெலுங்கு செய்தி தொலைக்காட்சி சார்பில் விவாதம் நடத்தப்பட்டு லைவாக ஒளிபரப்பப்பட்டது. இதில் ஆளுங்கட்சியான பாரத ராஷ்டிர சமிதி … Read more

திருப்பதி கோவிலில் சந்திர கிரகணத்தன்று 8 மணி நேரம் நடை அடைப்பு

திருப்பதி திருப்பதி கோவிலில் சந்திர கிரகணத்தன்று 8 மணி நேரம் நடை அடைக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.     இன்று திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பில், ”வரும் 29 ஆம் தேதி அன்று சந்திர கிரகணம் என்பதால், நாளை மறுநாள் இரவு 7.05 மணி முதல் 29-ஆம் தேதி அதிகாலை 3.15 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட உள்ளது. பிறகு கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, ஏகாந்தத்தில் சுத்தி, சுப்ரபாத சேவை … Read more

ராஜ் பவன் வாசலில் பெட்ரோல் பாட்டில் வீசிய நபரை ஜாமீனில் எடுத்தவர் பாஜக வழக்கறிஞர்… அதிர்ச்சி பின்னணி…

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாசல் முன்பு பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசிய நபரை அங்கு பந்தோபஸ்த்தில் இருந்த தமிழக காவல்துறையினர் நேற்று மடக்கிப் பிடித்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கையால் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. இதனை அடுத்து பிடிபட்ட நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவனது பெயர் கருக்கா வினோத் என்பதும் ஏற்கனவே தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. பாஜக … Read more

ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரின் எண்ணிக்கையை ஒன்றுக்கு இரண்டாக குறிப்பிட்டுள்ள ஆளுநர் மாளிகையின் புகார் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது : டி.ஜி.பி.

ஆளுநர் மாளிகை மீது இரண்டு நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் அது ஆளுநர் மாளிகை சென்ட்ரியைத் தாண்டி உள்ளே வந்து விழுந்ததாகவும் ஆளுநரின் தனிச் செயலர் அளித்துள்ள புகார் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் கூறியுள்ளார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாசலில் நேற்று நடைபெற்ற பெட்ரோல் பாட்டில் வீச்சில் தொடர்புடைய கருக்கா வினோத் என்ற தொடர் குற்றவாளி சம்பவ இடத்திலேயே தமிழக காவல்துறையினரால் மடக்கிப்பிடித்து கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர … Read more

2024 ஐபிஎல் சீசனுக்கான ஏலம் இந்தமுறை இந்தியாவுக்கு வெளியில் நடக்க வாய்ப்பு…

ஐபிஎல் லீக் போட்டிகளுக்கான ஏல நடைமுறையை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது. இந்த நிலையில் வரும் டிசம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் ஏலம் நடைபெறவுள்ளதாகவும் இம்முறை துபாயில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்போ அல்லது அணியின் உரிமையாளர்களுக்கு சுற்றறிக்கையோ இதுவரை வரவில்லை என்ற நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் இதுகுறித்து உறுதியாக … Read more

சூர்யாவும், சுதா கொங்கராவும் மீண்டும் கைகோர்க்கும் ‘புறநானூறு’…

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் 2021ம் ஆண்டு ஓடிடி-யில் வெளியானது. இந்தப் படத்தில் நடித்த சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது உட்பட மொத்தம் 6 விருதுகள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இணைந்துள்ள இந்த கூட்டணி தனது அடுத்த படத்தின் பெயரை இன்று அறிவித்துள்ளது. சூர்யாவின் 43வது படமான இந்த படத்திற்குப் புறநானூறு என்று பெயரிடப்பட்டுள்ளது. Dear all we are excited! Joining hands with @Sudha_Kongara again … Read more

கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்ஹ்டை முன்னிட்டு வரும் 28. 29 தேதிகளில் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தில் உள்ள முக்கிய ஆன்மிக தலங்களில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் ஒன்றாகும். தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி இந்த கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அப்படி வரும் பக்தர்கள் இங்குள்ள மகாதீபமலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம். வருகிற சனிக்கிழமை ஐப்பசி மாத பவுர்ணமி … Read more