இந்த ஆண்டு ஏப்ரல் – செப்டம்பரில் 2000 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

டில்லி இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை சுங்கத்துறை 2000 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்துள்ளது. உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக தங்கம் பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் இந்தியா 2 ஆவது இடத்தில் உள்ளது. இதனால் இந்தியாவில் அதிக அளவில் தங்க இறக்குமதி நடைபெறுகிறது என்றாலும் ஆண்டுதோறும் நாட்டில் பறிமுதல் செய்யப்படும் கடத்தல் தங்கத்தின் அளவும் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலங்களில், சுங்க துறை சார்பில் 2 … Read more

ஆளுநர் மாளிகையில் குண்டு வீச்சு  : கூடுதல் காவல் ஆணையர் விளக்கம்

சென்னை ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்துக் கூடுதல் காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.  கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் பெட்ரோல் குண்டு வீசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் மாளிகையில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினர் பெட்ரோல் குண்டு வீசிய நபரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த வினோத் என்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் இருந்து மேலும் 2 பெட்ரோல் குண்டுகள் … Read more

சென்னைக்கு வந்த விமான கழிவறையில் ரூ.1.5 கோடி தங்கம் கண்டுபிடிப்பு

சென்னை சென்னைக்கு அபுதாபியில் இருந்து வந்த விமான கழிவறையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  ஐக்கிய அரபு நாடுகளின் தலைநகரான அபுதாபியில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்தது. இது மீண்டும் சென்னையில் இருந்து உள்நாட்டு விமானமாக ஐதராபாத் புறப்பட்டு செல்ல வேண்டும். இந்த விமானத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்க இலாகா அதிகாரிகளுடன் இணைந்து சோதனை செய்தனர். சோதனையில் விமானத்தின்  கழிவறை தண்ணீர் தொட்டியில் … Read more

2222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜனவரி 7ந்தேதி தேர்வு! டிஆர்பி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 2,222 பணியிடங்களை தேர்வு செய்ய 2024ம் ஆண்டு ஜனவரி 7ந்தேதி தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியான டிஆர்பி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பு, பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு வைக்கப்பட்டு 2,222 பேர் நேரடி நியமனம் செய்யப்படுவர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. … Read more

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு!

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி,  அகவிலைப்படி 42% இருந்து 46% ஆக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த 18ந்தேதி (October 18,2023) மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவிகிதம் அகவிலைப்படி  வழங்கப்பட்டு வந்தது. இது தற்போது 4 சதவீதம் உயர்த்தப்பட்டு  46 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டதன் மூலம் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் … Read more

கேள்வி கேட்க லஞ்சம்: மஹுவா மொய்த்ரா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டெரிப்  ஓ பிரைன் தகவல்…

டெல்லி: நாடாளுமன்றத்தில்,  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி. மஹுவா மொய்த்ரா, தொழிலதிபர் ஒருவரிடம் பணம் பெற்றுக் கொண்டு, மோடி அரசு மற்றும் அதானி குறித்து தேவையற்ற குற்றச்சாட்டு கூறியதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, அவர்மீதான குற்றச்சாட்டு குறித்து கட்சி முடிவெடுக்கும்  திரிணமூல் கட்சி தெரிவித்து உள்ளது. நாடாளுமன்றத்தில்,  அதானிக்கு எதிராகவும், மோடி அரசுக்கு எதிராகவும்  கேள்வி எழுப்ப புதுதிரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.மஹுவா மொய்த்ரா தொழிலதிபர் ஒருவரிடம் லஞ்சம் பெற்றுள்ளார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், … Read more

காலணி உற்பத்தி மற்றும் சரக்கு மேலாண்மை: இரு தொழிற்கல்வி படிப்புகளை அறிமுகம் செய்தது அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: தமிழ்நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகம் நடப்பாண்டு, காலணி உற்பத்தி (Footware Manufacturing) மற்றும் சரக்கு மேலாண்மை (Logistics Management)  ஆகிய இரு  தொழிற்கல்வி படிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. ‘நான் முதல்வன் திட்டத்தின்கீழ் இளநிலை தொழிற்கல்வி (Bachelor of Vocational Degree) எனும் 3 ஆண்டு படிப்புகள் நடப்பாண்டு அறிமுகம் செய்யப்பட்டன.  அதன்படி,  பி.வோக் சரக்கு மேலாண்மை, பி.வோக் காலணி உற்பத்தி ஆகிய தொழிற்கல்வி படிப்புகளில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தொடங்கப்பட்டு உள்ளது. … Read more

#நாடாளுமன்றத்தில்_கேள்விஎழுப்ப_மஹுவா_மொய்த்ரா_எம்பி_லஞ்சம்! கே. எஸ். இராதா கிருஷ்ணன்

நெட்டிசன் கட்டுரையாளர்:  கே.எஸ்.ராதாகிருஷ்ணன் #நாடாளுமன்றத்தில்_கேள்விஎழுப்ப_மஹுவா_மொய்த்ரா_எம்பி_லஞ்சம் அதானிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திருணாமுல் காங்கிரஸ் எம்பி ஆன மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கினார் என்ற குற்றச்சாட்டு பரபரப்பாகி இருக்கிறது. பாஜக எம்.பி.நிஷிகாந்த் துபே சில தினங்களுக்கு முன்பு இந்த குற்றசாட்டு முன்வைத்தார். மஹுவா மொய்த்ரா மக்களவையில் இதுவரை கேட்டுள்ள 61 கேள்விகளில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை என்றும் அதானி குழுமத்தை குறிவைத்து கேள்வி எழுப்ப அவர் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றுள்ளார் என்றும் … Read more

மீரட்டில் நோயாளிகளின் உறவினர்களைத் தாக்கிய மருத்துவர்கள் இடைநீக்கம்

மீரட் பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகர அரசு மருத்துவமனையில் நோயாளியின் உறவினர்களைத் தாக்கிய மருத்துவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் கமால்பூர் கிராமத்தைச் சேர்ந்த தீபக் என்பவரின் மகன் 5 வயது சிறுவன் குணால் விளையாடும் போது அவனது கட்டைவிரல் துண்டானது. உறவினர்கள் சிறுவனை உடனடியாக அழைத்துக்கொண்டு மீரட் அரசு மருத்துவமனைக்குச் சென்று உள்ளனர். அந்த சிறுவன் வலியால் துடித்தபோதும் அங்கு இருந்த பயிற்சி மம்ருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் காலம் கடத்தி உள்ளனர்.  இதையொட்டி குணாலின் உறவினர்களுக்கும், மருத்துவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு … Read more

ஆவடியில் தடம் புரண்ட மின்சார ரயில் : ரயில்கள் 2 மணி நேரம் தாமதம்

அரக்கோணம் ஆவடி அருகே மின்சார ரயில் தடம் புரண்டதால் ரயில்கள் 2 மணி நேரம் தாமதமாகி உள்ளது. நேற்று சென்னை சென்டிரல் – அரக்கோணம் ரயில் மார்கத்தில் உள்ள ஆவடி ரயில் நிலையத்திற்கு அண்ணனூர் பணிமனையில் இருந்து வந்த புறநகர் மின்சார ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.  அப்போது ரயிலில் பயணிகள் இல்லாததால் யாருக்கும் இந்த விபத்தில் காயம் உண்டாகவில்லை. ஆயினு, சென்னையில் இருந்து மைசூர் மற்றும் விஜயவாடா செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் … Read more