டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனத்தை ரிலையன்ஸ் குழுமம் வாங்கப்போவது உறுதியாகி இருக்கிறது…

அமெரிக்க பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட் டிஸ்னி அண்ட் கோ தனது தொலைகாட்சி நிறுவனங்களான ஸ்டார் டிவி மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இந்திய ஒளிபரப்பு உரிமையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்க உள்ளது இறுதி செய்யப்பட்டுள்ளது. 83,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிறுவனத்தை வாங்க சன் நெட்ஒர்க் மற்றும் அதானி குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில் வியாகாம் மற்றும் ஜியோ சினிமா ஆகிய சேனல்களை நடத்திவரும் ரிலையன்ஸ் குழுமம் டிஸ்னி ஹாட்ஸ்டாரை வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகி … Read more

பாரா ஆசிய போட்டி: வெள்ளி பதக்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு – முதலமைச்சர் வாழ்த்து…

ஹாங்கோ: சீனாவில் நடைபெற்று பாரா ஆசிய போட்டிகளில், உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்துகொண்ட தமிழக வீரர் சேலம் மாரியப்பன் தங்கவேலு, வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களையும் இந்தியா வென்றுள்ளது.  அதுபோல மகளிருக்கான படகு போட்டியில்  இந்திய வீராங்கனை பிரச்சி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றார். வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் ஏற்கனவே ஆசிய போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், … Read more

சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் 31ந்தேதி வரை 144 தடை உத்தரவு அமல்.

சிவகங்கை: தேவர் குருபூஜை,  மருது சகோதரர்களின் குருபூஜையையொட்டி, சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல்  வரும் 31ந்தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. சிவகங்கையில் 27-ம் தேதி மருது சகோதரர்களின் குருபூஜை, 30-ம் தேதி முத்துராமலிங்க தேவரின் குருபூஜை நடைபெறும் நிலையில்,  சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் சிவகங்கையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த  தடை உத்தரவு வரும் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு … Read more

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி மரணம்…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி இன்று காலமானார், அவருக்கு வயது 77. 1967 – முதல் 1979 வரை இந்திய கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளராக தனது அசாத்திய சுழற்பந்து வீசும் திறனை வெளிப்படுத்தியவர் பேடி என்பது குறிப்பிடத்தக்கது. இடதுகை சுழற்பந்து வீச்சாளராக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 266 விக்கெட்டுகளை வீழ்த்திய இவரது சராசரி 28.71. 1976 ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட இவர் கிரிக்கெட்டில் … Read more

#AsianParaGames2022 வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் தங்கவேலு மாரியப்பனுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி வாழ்த்து

சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய போட்டியில் உயரம் தாண்டுதல் T63 பிரிவில் தமிழக வீரர் தங்கவேலு மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இந்தப் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட அனைத்து பதக்கங்களையும் இந்திய வீரர்களே பெற்றுள்ளனர். இந்திய வீரர் சைலேஷ் குமார் 1.82 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கதையும், மாரியப்பன் தங்கவேலு 1.80 மீட்டர் தாண்டி வெள்ளி பதக்கத்தையும், கோவிந்த்பாய் ராம்சிங்பாய் பதியார் 1.78 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். வெள்ளி வென்ற … Read more

தெரு நாய் தாக்கியதில் ‘வாஹ் பக்ரி டீ’ நிறுவன நிர்வாக இயக்குனர் பராக் தேசாய் காலமானார்

தெரு நாய் தாக்கியதில் ‘வாஹ் பக்ரி டீ’ நிறுவன நிர்வாக இயக்குனர் பராக் தேசாய் காலமானார் இந்தியாவில் சமீப ஆண்டுகளாக தெரு நாய் தாக்குதல் மற்றும் தெருவில் சுற்றித்திரியும் மாடுகள் தாக்குவது அதிகரித்து வருகிறது. இதற்கு வயதானவர்கள், சிறுவர்கள் என்று பலரும் இரையாகி வரும் நிலையில் கட்டுப்பாடின்றி தெருவில் அவிழ்த்துவிடப்படும் பிராணி உரிமையாளர்கள் மீது அபராதம் தவிர வேறு எந்த ஒரு முக்கிய நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ‘வாஹ் பக்ரி டீ’ … Read more

கட்டப் பஞ்சாயத்து செய்வது பாஜகவின் வேலை இல்லை! நடிகை கவுதமிக்கு தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் இராம.சீனிவாசன் பதிலடி

சென்னை: கட்ட பஞ்சாயத்து செய்வது எங்க வேலை இல்லை  என நடிகை கவுதமிக்கு தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் இராம. சீனிவாசன் பதில் தெரிவித்து உள்ளார். பாஜக நிர்வாகியான பில்டர் அழகப்பன் தனது சொத்தை ஏமாற்றி பறித்துக்கொண்டதாகவும், அவர்மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். இந்த பிரச்சினை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, கவுதமி ஏற்கனவே கொடுத்த நிலஅபகரிப்பு மற்றும் மிரட்டல் புகாரின் பேரில், பில்டர் … Read more

கவுதமி பாஜகவில் இருந்து விலகல் எதிரொலி: பில்டர் அழகப்பன் மீது காவல்துறை வழக்கு பதிவு…

சென்னை: நடிகை கௌதமி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், அவர் சில மாதங்களுக்கு முன்பு கொடுத்த  சொத்து அபகரிக்கப்பட்ட புகாரில் இன்று  சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பாஜக நிர்வாகியும், பில்டருமான அழகப்பன்மீது 6 பிரிவுகளில்  வழக்குப்பதிவு செய்துள்ளனர். கமல் உள்பட பல நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்து புகழ் பெற்றவர்  நடிகை கவுதமி. இவர் திருமணமாகி விவகாரத்து பெற்றவர். ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் பல ஆண்டுகளாக நடிகர் கமல்ஹாசனின் தாலி கட்டாத … Read more

வங்கக்கடலில் இறக்கப்பட்ட ‘ககன்யான் கேப்சூல்’ இஸ்ரோ அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

சென்னை: ககன்யான் விண்கலத்தில் சோதனை ஓட்டத்தின்போது, அதிலிருந்து கேப்சூல் பாராசூட் மூலம் வங்கக்கடலில் இறக்கப்பட்ட நிலையில், அதை  இந்திய கடற்படையினர் மீட்டனர். இதை ஆய்வு செய்த இஸ்ரோ, அதில் உள்ள டேட்டாக்கள் சரியாக இருப்பதாக தெரிவித்து உள்ளது. விண்வெளி ஆய்வில் உலக நாடுகளுக்காக இணையாக  பல்வேறு சாதனைகளை படைத்துள்ள இந்தியா மனிதர்களை ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் ஆர்வம் காட்சி வருகிறது.. எனவே மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) … Read more

ஆயுத பூஜை – விஜயதசமி: முன்னாள் முதல்வர்கள் – அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: ஆயுத பூஜை – விஜயதசமியை முன்னிட்டு முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். தமிழக மக்கள் வெற்றிமேல் வெற்றி பெற்று அனைத்து நலன்களும், வளங்களும் பெறுங்கள் என வாழ்த்தி உள்ளனர். முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான  எடப்பாடி பழனிசாமி: விஜயதசமி அன்று தொடங்கும் அனைத்து தொழில்களும், செயல்களும் தெய்வ சக்தியின் அருளால் வெற்றியடையும் என்பது நமது நம்பிக்கை. `செய்யும் தொழிலே தெய்வம்’ என்பதையும்; `உழைப்பின் … Read more