பாஜக கொடிக்கம்பம் அகற்றியது குறித்து தாம்பரம் காவல்துறை விளக்கம்

சென்னை சென்னை தாம்பரத்தில் பாஜக கொடிக் கம்பம் அகற்றப்பட்டது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இல்லம் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பனையூர் பகுதியில் உள்ளது. இந்த இல்லத்துக்கு அருகில் சுமார் 45 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தை பா.ஜ.க.வினர் நட்டு வைத்தனர்.  அந்த பகுதி மக்கள் இந்த கொடி கம்பம் ஆபத்தான நிலையில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளதாகப் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் நெடுஞ்சாலைத் துறையினர் அந்த கொடிக்கம்பத்தை … Read more

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இன்னும் இரு நாட்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றே தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ,இதுதொடர்பாக  செய்தியாளர்களிடம் பேசிய  சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாகவும், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது என்றும் தெரிவித்தார். இதனால் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார். வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மற்றும் அரபிக்கடலில் … Read more

நவம்பர் 1-ம் தேதி கிராமசபை கூட்டம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: நவம்பர் மாதம்  1ம் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 22ந்தேதி சட்டப்பேரவையில் சட்டப்பேரவையில் 110விதியின் கீழ் பேசிய பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இனி ஆண்டு தோறும் நவம்பர் 1-ந் தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும் என அறிவித்தார். மேலும், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி,  இதுவரை ஆண்டுக்கு நான்கு முறை நடத்தப்பட்டு வந்த கிராம … Read more

கடலில் விழுந்த ககன்யான் மாதிரி விண்கலத்தின் ‘கேப்சூல்’ மீட்பு! இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் தொடர்பான விண்கல பரிசோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. கடலில் விழுந்த ககன்யான் மாதிரி விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கடலில் இறக்கப்பட்ட கேப்சூல், இந்திய கப்பற்படையால் மீட்கப்பட்டது. இஸ்ரோவின் மனிதனை விண்வெளிக்கும் அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டம் 2025ம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது.  இந்த திட்டத்திற்கான பணிகள், தற்போது அதிவேகமாக நடைபெற்று வருகிறது. அதற்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற்று வருகின்றனர். அதன் மிக முக்கிய நிலையாக … Read more

கழிவுநீர் அகற்றும் பணியின்போது உயிரிழந்தால் ரூ.30 லட்சம் இழப்பீடு.! உச்சநீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி: கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேர்ந்தால், பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் முறை தொடர்ந்த வருகிறது. இதனால் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதை தடுக்க நவீன முறைகளை கையாள வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.  இந்த நடைமுறைக்கு கடந்த 2013ம் ஆண்டே தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும்   மனித கழிவுகளை மனிதனே … Read more

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினையும் நடத்த வேண்டும்! பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்…

சென்னை: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும்” என வலியுறுத்தி  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இதுதொடர்பாக  தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  “இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டி, வளர்ச்சியின் பலன்களை மிகவும் பாதிக்கப் படக்கூடிய பிரிவினருக்குக் கொண்டு செல்வதற்கும், வலிமையான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கும் ஏதுவாக, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன், விரிவானதொரு சாதிவாரிக் கணக்கெடுப்பை இணைத்து நடத்துவதற்கான ஏற்பாடுகளை … Read more

சாலையோர டிபன் கடையில் ‘சுடச்சுட மொறு மொறு தோசை’ சுட்ட ராகுல்காந்தி… வைரல் வீடியோ…

ஐதராபாத்: காங்கிரஸின் விஜயபேரி யாத்திரையின் ஒரு பகுதியாக ஜகித்யாலுக்குச் செல்லும் ராகுல்காந்தி,  தனது பயணத்தின் நடுவே தெலுங்கானா மாநிலத்தில் உள்ள  என்ஏசி பேருந்து நிறுத்தத்தில் உள்ள சாலையோர கடையில், சுடச்சுட மொறு மொறு என தோசை சுட்டு அசத்தினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 2024ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு முன்பாக நடப்பாண்டு 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு  இறுதியில் சத்தீஷ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், … Read more

சென்னை கொளத்தூரில் 33 பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்

சென்னை சென்னை கொளத்தூர் பகுதியில் 33 திட்ட பணிகளுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டி உள்ளார், நேற்று சென்னையில் கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் திரு.வி.க. நகர், பல்லவன் சாலையில் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் பார்வையாளர் மாடம், நடைபாதை, இறகுப்பந்து கூடம், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள செயற்கை புல் தரையுடன் கூடிய கால்பந்து … Read more

செல்போனுக்கு வந்த அபாய அறிவிப்பு சோதனை செய்தி : மக்கள் பரபரப்பு

சென்னை இன்று செல்போன் மூலம் பேரிடர் மற்றும் அவசர நிலை குறித்த அறிவ்பூ குறும் செய்தி சோதனை நடந்துள்ளது. பொதுமக்களுக்குப் பேரிடர் காலங்களில் அவசரகால எச்சரிக்கை தகவலை அனுப்பும் ‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ திட்டத்தின் சோதனை ஓட்டம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடங்கி  உள்ளது. இந்த ”செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” முறை என்பது ஒரு அதிநவீன தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பத்தில் ஒரு செல்போன் கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து செல்போன்களுக்கும், இயற்கை இடர்பாடு குறித்த எச்சரிக்கைகள் … Read more

அரசு மரியாதையுடன் பங்காரு அடிகள் உடலுக்கு இறுதிச் சடங்கு

மேல் மருவத்தூர் மேல் மருவத்தூரில் மறைந்த பங்காரு அடிகள் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடந்தது. நேற்று மாலை மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் காலமானார். சுமார் 82 வயதாகும் பங்காரு அடிகளாரைப் பின்பற்றுபவர்களும் ஆதிபராசக்தி கோவிலின் பக்தர்களும் அவரை ‘அம்மா’ என்று அழைத்துவந்தனர். அவர் உடல்நலக் குறைவு காரணமாகக் கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்தபடியே மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை 5 … Read more