நாவலூர் சுங்கச்சாவடி கட்டணம் ரத்து – பொது குடியிருப்பு மின் இணைப்புக்கான கட்டணம் யூனிட் ரூ.5.50ஆக குறைப்பு! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: பொது குடியிருப்பு மின் இணைப்புக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8 லிருந்து ரூ.5.50ஆக குறைக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதுபோல நாவலூர் சுங்கச்சாவடியில் நாளை முதல் கட்டணம் கிடையாது என்றும் அறிவித்து உள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் கூட்டரங்கில் #களஆய்வில்_முதலமைச்சர் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர் … Read more

‘லியோ’ திரைப்படத்தை 1,246 இணையதளங்களில் வெளியிட தடை! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி,  1,246 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள  லியோ படம் பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே, பல்வேறு சர்ச்சைகளை   இன்று வெளியானது.  நடிகர் விஜய் நடித்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ  இன்று திரைக்கு வந்துள்ளது.  இருந்தாலும், படங்களை திரையிடுவதில் கடும் சிக்கல்கள் ஏற்பட்டன. சிறப்பு காட்சிகளுக்கு … Read more

அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது… தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை: அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் தமிழ்நாடு புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது,  அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது. 21ம் தேதியில் மத்திய அரபிக் … Read more

மாநகராட்சி ஆணையர்கள் உள்பட 11ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த இரு ஆண்டுகளில் ஏராளமான ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வரும் நிலையில், தற்போது 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் பல மாநகராட்சி அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் நிர்வாண காரணங்களுக்காக அவ்வவ்போது ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். மேலும் முதலமைச்சரின் கள ஆய்வின்போது முறையான பதில் தெரிவிக்காத அதிகாரிகளும் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தற்போது,  பல்வேறு முக்கிய துறைகளில் … Read more

யாருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதை முடிவு எடுக்கும் சுதந்திரம் அனைவருக்குமானது… ஒரே பாலின திருமணம் குறித்த தீர்ப்பில் தலைமை நீதிபதி கருத்து…

யாருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதை முடிவு எடுக்கும் சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது. ஒருவரின் உரிமை என்பது அவர்களின் பாலினம் சார்ந்து மறுக்கப்படக் கூடாது. ஒரே பாலின ஜோடிகளால் குழந்தைகளை சரியான முறையில் வளர்க்க முடியாது என்பதற்கான ஆதாரப்பூர்வ தரவுகள் இல்லை என்று ஒரே பாலின திருமணம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இயற்கைக்கு மாறாக ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்வது அதிகரித்து வரும் நிலையில் LGBTQ எனும் ஓரினச் சேர்க்கையாளர்கள் … Read more

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேல் வருகை… போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அதை தணிக்க முயற்சி

இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையிலான போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் இது மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பரவும் சிக்கலைத் தவிர்க்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேல் செல்லவுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு-வை இன்று இரவு சந்தித்த அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் பளிங்கென் அமெரிக்க அதிபரின் வருகை குறித்து அறிவித்தார். பதற்றமான சூழலில் ஜோ பைடன் வருவதை அடுத்து அவரது பாதுகாப்பு குறித்து அனைத்து ஏற்பாடுகளும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல் வரும் பைடன் டெல் அவிவ் … Read more

காசாவில் எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை… இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்த தீர்மானத்திற்கு ஐநா-வில் ஆதரவு இல்லை… UAE அறிக்கை…

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் திடீரென மேற்கொண்ட சரமாரி குண்டு வீச்சு காரணமாக பாலஸ்தீனுக்கு சொந்தமான காசா பகுதியை இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்திவருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடந்துவரும் இந்த போரில் 5000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். உலகில் மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில் மூன்றாவது இடமாக உள்ள காசா மீது நடத்தப்படும் இந்த தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து வருகிறார்கள். இதனை பெரிதும் கண்டிக்காத அமெரிக்கா, காசா-வில் … Read more

காசா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் ஈரான் களமிறங்கும்… இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை…

காசா மீதான மனிதாபிமானமற்ற தாக்குதலை தொடர்ந்தால் இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்க ஈரான் தயங்காது என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்துள்ளார். ஈரான் தொலைகாட்சி மூலம் பேசிய ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை எந்த ஒரு நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இன்று காசாவை பாதுகாக்க முன்வராவிட்டால் நாளை ஈரானில் இதுபோன்ற தாக்குதல் நடக்கக்கூடும் தங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி என்று கூறிக்கொண்டு தங்கள் தாக்குதல் எல்லையை விரிவுபடுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. … Read more

தன்பாலின திருமணத்தை அனுமதிக்க முடியாது! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

டெல்லி: தன்பாலின திருமணம்  அல்லது, ஒரே பாலின திருமணத்தை அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்க மறுத்து உள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஒவ்வொருவரும் மாற்றுக்கருத்தை தெரிவித்து உள்ளனர். சிறுபான்மையினரின் கருத்துப்படி, தற்போதுள்ள சட்டங்களின்படி திருமணம் செய்து கொள்ள உரிமை இல்லை என்றாலும், வினோதமான தம்பதிகளுக்கு சிவில் யூனியனில் நுழைய உரிமை உண்டு என்றும் தெரிவித்து உள்ளது. சிறப்பு திருமணச் சட்டம் வினோத ஜோடிகளுக்கு பாரபட்சமானது என்று நீதிபதி … Read more

சேலம் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான போக்குவரத்து துவங்கியது… தமிழக அமைச்சர்கள் கொடியசைத்து துவக்கிவைத்தனர்…

சேலம் விமான நிலையத்தில் மீண்டும் விமான போக்குவரத்தை தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு மற்றும் சக்கரபாணி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். பெங்களூரு – சேலம் – கொச்சி வழித்தடத்தில் அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தனது சேவையை துவங்கியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கமலாபுரத்தில் இருந்து சென்னைக்கு ஏற்கனவே ப்ளூ ஜெட் விமானம் தனது சேவையை வழங்கிவந்தது. கொரோனா கட்டுப்பாடுகளை அடுத்து இந்த சேவை நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது இரண்டரை ஆண்டுகள் கழித்து … Read more