காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவு : மறு பரிசீலனைக்குக் கர்நாடகா கோரிக்கை

டில்லி தமிழகத்துக்கு 3000 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதை மறு பரிசீலனை செய்யக் கர்நாடகா கோரிக்கை விடுத்துள்ளது. இன்று பிற்பகல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டில்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.  இக்கூட்டத்தில், தமிழகம் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் கர்நாடகா தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஆணையத்தின் தலைவர் கேட்டறிந்தார். பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவில் , வருகிற … Read more

வரும் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்ப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ் வரும் 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டியான ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டைச் சேர்க்க வேண்டும் என கோரிக்கை உள்ளது. ஏற்கனவே 1900-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் மட்டும் மட்டைப்பந்து இடம் பிடித்தது. வரும் 2028-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடக்க உள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டைச் சேர்க்கப் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. வரும் 2028ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் சேர்க்கப்பட உள்ளதாகத் தகவல் … Read more

லியோ படத்திற்கு விதிமுறைகளுடன் கூடுதலாக ஒரு சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி…

லியோ படத்திற்கு 19ம் தேதி முதல் 24 ம் தேதி வரை 6 நாட்கள் 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு கூடுதல் காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. துணிவு, வாரிசு ஆகிய படங்களுக்குப் பிறகு ரிலீசான எந்த ஒரு படத்திற்கும் இந்த சிறப்பு அனுமதி வழங்கப்படாத நிலையில் தற்போது லியோ படத்திற்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜை முன்னிட்டு தொடர் விடுமுறை … Read more

நாளை முதல் திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனங்கள் ரத்து

திருப்பதி நாளை முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட உள்ளன.   வரும் 15 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரமோற்சவ விழா நடைபெற உள்ளது.  இந்த பிரமோற்சவ விழாவையொட்டி நாளை அங்குரார்ப்பணமும் நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் பிரமோற்சவ விழாவும் கோலாகலமாகத் தொடங்குகின்றன. நாளை முதல் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு அதிக அளவு சாதாரண பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. … Read more

வார ராசிபலன்: 13.10.2023 முதல் 19.10.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் பெண்களுக்கு பணத்தேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீங்க. சக மாணவர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியை தரும். அரசியல்துறையினருக்கு பணநெருக்கடி குறையும். கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவங்களுக்கு எதிர்பார்த்த மாற்றங்கள் எளிதில் வந்து சேரும். வீடு, வாகனம் வாங்க கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தால் அதுவும் கைகூடும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீங்க. குடும்பத்தில் சுபச்செலவு அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக … Read more

தமிழகத்துக்கு 3000 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

டில்லி கர்நாடக அரசு தமிழகத்துக்கு விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் எனக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நேற்று முன்தினம் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்ற போது 16 ஆம் தேதி காலை 8 மணி முதல் 31 ஆம் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீரைக் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்குத் திறந்து விட வேண்டும் என கர்நாடகாவை ஒழுங்காற்றுக்குழு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இவ்வாறு ஒழுங்காற்றுக்குழு … Read more

நாளை நாகை – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடக்கம்

நாகப்பட்டினம் நாளை நாகப்பட்டினம் – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க  உள்ளது. கடந்த 10 ஆம் தேதிமுதல் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்குப் பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி கேரள மாநிலம் கொச்சினில் உருவாக்கப்பட்ட செரியபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல், நாகை துறைமுகத்திற்கு கடந்த 7ம் தேதி வந்தது. கடந்த 8 ஆம் தேதி அன்று கப்பல் சோதனை ஓட்டம் நடந்தது. இந்த கப்பல் இலங்கை காங்கேசன் … Read more

அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிவிப்பு

டில்லி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி துப்பாக்கி ஏந்திய டெல்லி காவலர் குழு, பாதுகாப்பு அளித்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சகம் இனி அவருக்கு அதைவிட உயர் பாதுகாப்பான ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு அளிக்க ஒப்புதல் அளித்து ஜெய்சங்கரின் பாதுகாப்பு பொறுப்பை மத்திய ரிசர்வ் போலீஸ் படையிடம் (சி.ஆர்.பி.எப்.) ஒப்படைத்துள்ளது. இதனால் நாட்டின் எந்த பகுதிக்கு ஜெய்சங்கர் சென்றாலும், துப்பாக்கி ஏந்திய 14 … Read more

மீட்பு விமானம் மூலம் இஸ்ரேலில் இருந்து டில்லி வந்த 212 இந்தியர்கள்

டில்லி போர் சூழ்ந்த இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட 212 இந்தியர்கள் விமானம் மூலம் டில்லிக்கு வந்துள்ளனர்.’ இன்று 7 ஆம் நாளாக இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரால் பல இந்தியர்கள் இஸ்ரேலில் சிக்கிக்கொண்டதால் அவர்களை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தது. இஸ்ரேலில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கி அதன்படி, டில்லியில் இருந்து நேற்று இஸ்ரேலுக்கு முதல் மீட்பு விமானம் அனுப்பப்பட்டது.  … Read more

டில்லி வந்த இஸ்ரேல் தமிழர்களைத் தமிழகம் அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு

டில்லி இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்டு டில்லி வந்த தமிழர்களை தமிழகத்துக்கு அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடுகள் செய்துள்ளது. இன்று 7 ஆம் நாளாக இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலில் பல இந்தியர்கள் சிக்கிக்கொண்டனர். மத்திய அரசு அவர்களை மீட்க தீவிர முயற்சி எடுத்து வந்தது.  எனவே இஸ்ரேலில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. நேற்று டில்லியில் இருந்து நேற்று இஸ்ரேலுக்கு முதல் … Read more