ஆப்கான் நில நடுக்க பலி எண்ணிக்கை 2000 ஆக உயர்வு

காபூல் ஆப்கானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 2000 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கே ஹெராத் மாகாணத்திற்கு வடமேற்கே கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம்  இது 40 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவித்து உள்ளது. அடுத்தடுத்து 8 முறை  ரிக்டரில் 4.3 மற்றும் 6.3-க்கு இடைப்பட்ட அளவுகளில் நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன. இவ்வாறு தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நகரின் பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்துள்ளன. உயர்ந்த கட்டிடங்களிலிருந்து பலர் அலறியடித்தபடி … Read more

நீர் வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு

சென்னை நீர் வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியைத் தாண்டியதால் 100 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. சென்னை அருகே காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டாரத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவுடையது. இதன் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடி மற்றும் முழுக் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி ஆகும். ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் நீர் மட்டம் தற்போது  22 அடியைத் தாண்டி உள்ளது. … Read more

பாலிவுட் நடிகை இஸ்ரேலில் இருந்து பத்திரமாக நாடு திரும்பினார்

டில்லி இஸ்ரேல் நாட்டில் சிக்கி இருந்த பாலிவுட் நடிகை பத்திரமாக நாடு திரும்பி உள்ளார். இஸ்ரேலில் 39-வது ‘ஹய்பா’ சர்வதேச திரைப்பட விழா கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கி கடந்த 7-ந் தேதி வரை நடைபெற்றது.  விழாவில் கலந்து கொள்வதற்காகப் பாலிவுட் நடிகை நுஷ்ரத் பரூச்சா இஸ்ரேல் சென்று இருந்தார். நேற்று காசா பகுதியில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்தி இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இதனால் திரைப்பட விழாவுக்கு சென்ற … Read more

இஸ்ரேலில் குடும்பத்துடன் சிக்கித் தவிக்கும் மேகாலயா எம் பி

டெல் அவிவ் இஸ்ரேலில் மேகாலயா மாநில தேசிய மக்கல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தனது குடும்பத்துடன் சிக்கி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏவுகணை தாக்குதலில் 300 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. சுமார் 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி … Read more

505 ஆம்  நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 505 ஆம் நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி சென்னையில் தொடர்ந்து 505 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், … Read more

இலங்கை – நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் இன்றும் நாளையும் சோதனை ஓட்டம்

நாகப்பட்டினம் நாகப்பட்டினம் – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம் இன்றும் நாளையும் நடக்க உள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்குப் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்காக  இந்தியக் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பயணிகள் கப்பல் கட்டும் பணி  நடந்து வந்தது. இந்த கப்பல் கொச்சியில் இருந்து புறப்பட்டு இலங்கை வழியாக நேற்று மாலை 5 மணிக்கு நாகப்பட்டினத்துக்கு வந்தது. நாகப்பட்டினம் துறைமுகத்தை … Read more

இன்று தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை\

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (08.10.2023) மற்றும் நாளை (09.10.2023) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், … Read more

இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் பாலிவுட் நடிகை

டெல் அவிவ் தற்போது தாக்குதல் நடந்து வரும் இஸ்ரேலில் பாலிவுட் நடிகைநஸ்ரத் பரூச்சா சிக்கி உள்ளார். காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏவுகணை தாக்குதலில் 300 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. சுமார் 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரதமர் மோடி … Read more

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால்  120 பேர் உயிரிழப்பு

காபூல் அடுத்தடுத்து 8 முறை ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் 120 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கே ஹெராத் மாகாணத்திற்கு வடமேற்கே நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. 40 கி.மீ. ஆழத்தில் இது மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தொடர்ச்சியாக 8 முறை  ரிக்டரில் 4.3 மற்றும் 6.3-க்கு இடைப்பட்ட அளவுகளில் நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டு உள்ளன. ஹெராத் மாகாண பேரிடர் நிவாரண அதிகாரி மூசா ஆஷாரி நிலநடுக்கத்திற்கு … Read more

இன்று முதல் பழனியில் மீண்டும் ரோக் கார் சேவை தொடக்கம்

பழனி பழனிமலை முருகன் கோவிலில் சுமார் 2 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த ரோப் கார் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது. பழனிமலை முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாகும். இந்த பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.  பக்தர்கள் தரிசனத்திற்காக அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது. தவிர பக்தர்கள் மலைக்கோவிலுக்குச் சென்று வர ரோப் கார், மின் இழுவை ரயில் ஆகிய சேவைகளும் உள்ளன. இவற்றில் விரைவாகவும், … Read more