எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 தமிழக மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்…

சென்னை: நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது தமிழ்நாடு மீனவர் களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்காள விரிகுடா கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், அடித்து விரட்டுவதும், கைது செய்வதும், தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடித்து செல்வதும் தொடர்கதையாகி இருக்கிறது. இதுதொடர்பாக பல முறை மீனவர்களும், தமிழ்நாடு அரசும் மத்தியஅரசை வலியுறுத்தி வருகிறது.  ஆனால், மீனவர்கள் … Read more

அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அலற விட்ட பெண் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…

கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரியின் அந்தரங்க புகைப்படங்களை பெண் ஐபிஎஸ் அதிகாரி இணையதளத்தில் பதிவிட்ட விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த இரண்டு அதிகாரிகளும் இலாக்கா இல்லாத அதிகாரிகளாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநில அறநிலையத்துறை இயக்குனராக இருப்பவர் ரோகிணி சிந்தூரி ஐ.ஏ.எஸ். இவர் மீது தனிப்பட்ட மற்றும் பணி தொடர்பான பல்வேறு புகார்களை அம்மாநில கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குனராக உள்ள ரூபா டி முட்கில் ஐ.பி.எஸ். … Read more

மறைந்த முன்னாள் அமைச்சர் உபயதுல்லா குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்

தஞ்சை: மறைந்த முன்னாள் அமைச்சர் உபயதுல்லா குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்ததுடன், அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று திருவாரூர் மாவட்டம் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுடன், திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவிலும் பங்கேற்கிறார். அதற்காக இன்று காலை விமானம் மூலம் திருச்சி சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் சென்றார். அவருக்கு வழிநெடுகிலும் திமுகவினர் உற்சாக வரவேற்பு … Read more

ஈரோடு கிழக்கில் விதிமீறல் தொடர்பாக 455 புகார்கள்! தேர்தல் அலுவலர் சிவகுமார் தகவல்

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை 455 புகார்கள் வந்துள்ளதாகவும், 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறிய தேர்தல் அலுவலர் சிவகுமார், வரும் 25ம் தேதியுடன் பிரச்சாரம் நிறைவுபெறுகிறது என்றார். ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து அங்க அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. ஆளும் கட்சியான திமுகவுக்கு இந்த இடைத்தேர்தல் வெற்றி முக்கியமானது என்பதால், அமைச்சர்கள், எம்.பி.க்கள் களமிறக்கி … Read more

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி: உச்சநீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு…

டெல்லி: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு  அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளன்று தமிழகத்தில் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிருந்த நிலையில், அதற்கு காவல் துறை அனுமதி மறுத்து இருந்தது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட 6 இடங்கள் தவிர காவல்துறை அனுமதி வழங்கிய 3 … Read more

கள ஆய்வில் முதலமைச்சர்: மார்ச் 5, 6ந்தேதிகளில் மதுரை உள்பட 5 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம்..

சென்னை: கள ஆய்வில் முதலமைச்சர்  திட்டத்தின் அடுத்த நடவடிக்கையாக, மார்ச் 5,6 தேதிகளில் மதுரை உள்பட 5 மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. “மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு! அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும்” என ஏற்கெனவே தெரிவித்திருந்தார்கள். மேலும், கள … Read more

இன்னும் 5 மாதங்களில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000..! ஈரோடு பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் தகவல்..

ஈரோடு: திமுகவின் தேர்தல் அறிக்கையின் முக்கியமான அறிவிப்பான குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் 5 மாத காலத்திற்குள் செயல்படுத்தப்படும் என ஈரோடு கிழக்கு தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு வேட்டை யாடிய  அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற போது திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை, பால் விலை … Read more

இரண்டு நாள் பயணமாக திருவாரூர் புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: இரண்டு பயணமாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை  திருவாரூர் புறப்பட்டார். இன்றும், நாளையும் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் முதல்வர், அப்போது ஏராளமான நலத்திட்ட உதவிகளையும், நலத்திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் திருச்சி, திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு செல்கிறார். திருச்சிக்கு செல்லும் முதலமைச்சர் அரசு சார்பில் நடக்கும் நிகச்சியில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.  திருச்சிக்கு … Read more

தாய்மொழியாம் தமிழைக் காப்போம்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: உலக தாய்மொழி தினத்தையட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  காலத்துக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் நம் தாய்மொழியாம் தமிழைக் காப்போம் என தெரிவித்து உள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ ) பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக கடைப்பிடிக்கிறது. தாய் மொழிக்காக போராடி உயிரிழந்தவர்கள், அதற்கான இயக்கத்தை நினைவுகூறி, அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், பிப்ரவரி 21ம் தேதியை சர்வதேச தாய்மொழி … Read more

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்…

சென்னை:  தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு எழுதிய கடிதத்தில், நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்திலிருந்து 6 மீனவர்கள், நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். 15-2-2023 அன்று தோப்புத்துறைக்குக் கிழக்கே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 3 படகுகளில் வந்த சுமார் 10 இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள், தமிழக … Read more