4 பேருந்துகளை சேதப்படுத்திய பண்ருட்டி அரசு பேருந்து பணிமனை தீ விபத்து

பண்ருட்டி பண்ருட்டி அரசு பேருந்து பணிமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு 4 பேருந்துகள் எரிந்து  சேதமாகி உள்ளன. பண்ருட்டியில் ஒரு அரசு பேருந்து பணிமனை அமைந்துள்ளது. இங்கு 15 காலாவதியான பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை ஏலம் விடப்பட்டது. ஏலம் விடப்பட்ட பேருந்துகளை உடைத்து அகற்றும் பணி நடைபெற்று வந்தது. இந்தப் பணி பகல் நேரங்களில் நடைபெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை பேருந்தில் திடீரென தீப்பற்றியது.. இந்த விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத் … Read more

அதிமுக எம் எல் ஏ மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் நில அபகரிப்பு வாக்கில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.  தமிழக அரசு கோவை மாவட்டம் விளாங்குறிச்சி கிராமத்தில் கோவிந்தசாமி என்பவருக்குச் சொந்தமான 45 ஏக்கர் 82 சென்ட் நிலத்தை நில சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் உபரி நிலங்களாக அறிவித்து கையகப்படுத்தியதை எதிர்த்து கோவிந்தசாமியின் மனைவி தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கோவிந்தசாமியின் மனைவி இந்த நிலத்துக்குப் பட்டா வழங்க வேண்டும் என்று அளித்த … Read more

புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்த அதிமுக

சென்னை புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்து அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சிப் பணிகளை மேற்கொள்வதற்குச் சட்டமன்றத் தொகுதிகளைப் பிரித்து, புதிய அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி கன்னியாகுமரி அ.தி.மு.க. மாவட்டச் செயலாளராக தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பெரம்பலூர் மாவட்ட செயலாளராக இளம்பை தமிழ்ச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை, தஞ்சாவூர், தேனி, திருவண்ணாமலை, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கும் புதிய அ.தி.மு.க. … Read more

ஹரே கிருஷ்ணா (இஸ்கான்) இயக்கத்தின் மீது மேனகா காந்தி குற்றச்சாட்டு

டில்லி ஹரே கிருஷ்ணா இயக்கமான இஸ்கான் மீது மேனகா காந்தி கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பி உளார். சமீபத்தில் விலங்குகள் நலன் தொடர்பான பிரச்சினைகள் குறித்து சமூக ஊடகங்களில் குரல் கொடுத்து வரும் மேனகா காந்தி, வெளியிட்ட ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மேனகா காந்தி, ”ஹரே கிருஷ்ணா இயக்கமான இஸ்கான் நாட்டின் மிகப்பெரிய மோசடி நிறுவனம். இந்நிருஅனம் கோசாலைகளைப் பராமரித்து பெரிய அளவிலான நிலங்கள் உட்பட அரசாங்கத்தின் பல்வேறு பலன்களைப் பெறுகிறது.  இஸ்கான் நிறுவனத்தின் ஆந்திராவில் உள்ள ஆனந்தபூர் கோசாலைக்குச் சென்ற … Read more

சார்ஜ் போட்டுக் கொண்டே மொபைலில் பேசிய பெண் போன் வெடித்து ம்ர்ணம்

தஞ்சை மொபைலில் சார்ஜ் போட்டுக் கொண்டு ஒரு பெண் பேசிய போது போன் வெடித்து மரணம் அடைந்துள்ளார் . தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே வசித்து வந்தவர் கோகிலா தனது கணவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தனது மகனுடன் வசித்து வந்தார். இவர் கபிஸ்தலத்தில் வாட்ச் கடை நடத்தி வந்தார். இன்று அவர் கடையில், மொபைலில் சார்ஜ் போட்டுக்கொண்டே போன் பேசிக் கொண்டிருந்தார். மொபைல் அப்போது திடீரென வெடித்து சிதறியதால் கடை முழுவதும் தீப்பற்றி எறிந்தது. கோகிலா பலத்த … Read more

மத்திய அரசுக்கு நீட் தேர்வு குறித்து டில்லி உயர்நீதிமன்றம் நோட்டிஸ்

டில்லி டில்லி உயர்நீதிமன்றம் நீட் முதுகலைத் தேர்வு தகுதி மதிப்பெண் குறைப்பு பற்றி மத்திய அரசு பதில் அளிக்க நோட்டிஸ் அனுப்பி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு தேசிய தேர்வு முகமை ‘நீட்’ நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. இந்தியா முழுவதும் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர். அண்மையில் நீட் முதுநிலை … Read more

உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

டில்லி தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது சனாதன விவகாரம் தொடர்பாக புதிய வழக்குப் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் மருத்துள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய கருத்து சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா எம்.பி. ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய டில்லி காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் வினித் ஜிண்டால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். நீதிபதி அனிருத்தா போஸ், பேலா எம்.திரிவேதி … Read more

எல் முருகன் மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

டில்லி மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பஞ்சமி நிலம்  குறித்துப் பேசியதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீது முரசொலி அறக்கட்டளை தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. எல் முருகன் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரித் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன்  அவதூறு வழக்கை 3 மாதங்களில் விசாரித்து முடிக்கச் சிறப்பு நீதிமன்றத்திற்குச் சென்னை … Read more

கார் குண்டு வெடிப்பு விவகாரம்: கோவையில்இன்று மீண்டும் என்ஐஏ சோதனை – 13வது நபர் கைது!

கோவை: கோவையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இன்று என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் கோவையில் அதிரடியாக சோதனை நடத்தினர். கோவை கார் சிலிண்டர் குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  தற்போது  13வது நபர் கைது செய்யப்பட்டு உள்ளார். கோவை  உக்கடம் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஈஸ்வரன் கோவில் வீதியில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி கார் குண்டு … Read more