டில்லி தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது சனாதன விவகாரம் தொடர்பாக புதிய வழக்குப் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் மருத்துள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய கருத்து சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா எம்.பி. ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய டில்லி காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் வினித் ஜிண்டால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். நீதிபதி அனிருத்தா போஸ், பேலா எம்.திரிவேதி […]