சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 இன்று ஏவப்படுவதை அடுத்து திருப்பதி சென்று சாமிதரிசனம் செய்த விஞ்ஞானிகள்…

சூரியனை ஆய்வு செய்யும் நோக்கில் ஆதித்யா எல்1 இன்று விண்ணில் ஏவப்பட்ட உள்ள நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் நேற்று பிரார்த்தனை செய்தனர். ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஆதித்யா எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் இன்று காலை 11:50 க்கு விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தூரத்தில் சூரியன் மற்றும் பூமி இரண்டுக்கும் இடையிலான ஈர்ப்பு விசைக்கு மைய்யமான எல்1 லாக்ரேஞ்ச் புள்ளியில் ஆதித்யா எல்1 நிலை நிறுத்தப்பட … Read more

சிங்கப்பூரின் 9வது அதிபராக தமிழரான தர்மன் சண்முகரத்தினம் அமோக வெற்றி…

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்தினம் என்ற தமிழர் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதிபர் ஹலிமா யாகூப்பின் பதவிக்காலம் செப்டம்பர் 13 ஆம் தேதியுடன் முடிவடைவதை அடுத்து அடுத்த அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்தினம், இங் கொக் சொங் மற்றும் டான் கின் லியான் என மூன்று பேர் போட்டியிட்டனர். இதில் தர்மன் சண்முகரத்தினம் வெற்றிபெற வாய்ப்பிருப்பதாக கருத்துக்கணிப்புகள் மூலம் தெரியவந்தது. இந்த … Read more

தமிழகத்துக்கு காவிரி நீரை கூடுதலாக திறந்து விட்டுள்ளோம் : டி கே சிவகுமார்

பெங்களூரு கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார் தமிழகத்துக்கு காவிரி நீரை கூடுதலாக திறந்து விட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். டில்லியில் காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடைபெற்ற போது தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடகத்திற்கு உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவின்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீரை கர்நாடகாவில் இருந்து தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.   இதற்கு கர்நாடகா மாநிலத்தில் கடும் எதிர்ப்பு … Read more

டில்லி முன்னாள் அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு

டில்லி டில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு செப்டம்பர் 12 வரை இடைக்கால ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தலைநகர் டில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். டில்லி அமைச்சரவையில் சத்யேநிதிர ஜெயின் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து வந்தார். கடந்த அண்டு மே மாதம் இவர் சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கில்  அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட இவர் அப்போது இருந்து டில்லி திகார் … Read more

பாஜக தேசியத் தலைவர்  – முன்னாள் குடியரசுத் தலைவர் சந்திப்பு

டில்லி இன்று பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டா மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவ ராம்நாத் கோவிந்த் ஆகியோர் சந்தித்துள்ளனர். மத்திய அரசு நாட்டில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக்குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த குழு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவுள்ளது. இன்று பாஜக … Read more

93 சதவிகித ரூ. 2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டில்லி புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுக்களில் 93% திரும்ப பெறப்ப்ட்டுள்ளதாக ரிசர் வங்கி அறிவித்துள்ளது. கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி நாட்டில் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. மேலும் 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படுவதாகவும் 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நோட்டுக்களை ரிசர்வ் வங்கியின் … Read more

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு அதிமுக ஆதரவு

சென்னை மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு அதிமுக ஆதரவு அள்க்கும் என அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நாட்டில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக மத்திய அரசு சிறப்புக்குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த சிறப்புக் குழு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை … Read more

இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 24 மாவட்டங்களில் மழை

சென்னை இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 24 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என முன்னதாக தெரிவித்து இருந்தது. தற்போது தமிழகத்தின் 24 மாவட்டங்களில் … Read more

140 கோடி மக்களின் கூட்டணியே இந்தியா கூட்டணி : அரவிந்த் கெஜ்ரிவால்

மும்பை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா கூட்டணி 140 கோடி மக்களின் கூட்டணி என தெரிவித்துள்ளார்.. இன்று மும்பையில் இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் இரண்டாவது நாளாக நடைபெற்றது. இந்த் கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முக்கிய வியூகம் வகுக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கூட்டத்திற்கு பிறகு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம், ”இந்தியா கூட்டண் என்பது வெறும் … Read more

மும்பையில் தொடங்கியது ‘இந்தியா’ கூட்டணியின் 2வது நாள் கூட்டம் …. 63 தலைவர்கள் பங்கேற்பு… வீடியோ

மும்பை: எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டத்தின் 2வது நாள் கூட்டம் மும்பையில் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய கூட்டத்தில் 63 தலைவர்கள் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். இரண்டு நாள் நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் நேற்று இரவு தொடங்கியது. அதைத்தொடர்ந்து 2வது நாள் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில்,  28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் … Read more