தமிழகத்தில் கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா விற்பனை அமோகம்; இதுதான் திமுக சாதனை! எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: தமிழகத்தில் கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது இதுதான் திமுக சாதனை என்றும், ஊழல் செய்வதிலும், லஞ்சம் பெறுவதிலும் கூட திமுக அரசு முதன்மை தான் என்று கூறியதுடன், ஆன்லைன் ரம்மியை தடை செய்ய நடவடிக்கை இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். மாநிலங்களவை இடத்துக்கான தேர்தலில், அதிமுக வேட்பாளர்களான  முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம், தர்மர் ஆகியோர் இன்று தலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் முன்னிலையில் வேட்பு … Read more

திருச்சி செல்வேந்திரன் உடல்நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின், மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு…

திருச்சி: திருச்சியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்த துடன், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள மூத்த திமுக பிரமுகர் திருச்சி செல்வேந்திரனை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில்  இன்றுகாலை தனிவிமானம் மூலம் திருச்சி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், காவிரியில் தூர்வாரும் பணிகளை பார்வையிடுகிறார். சம்பா, குறுவை சாகுபடிக்கு,  மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வரின் 2நாள் சுற்றுப்பயணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. … Read more

புதுச்சேரியில் ஜூன் 23ந்தேதி பள்ளிகள் திறப்பு! அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

புதுச்சேரி: கோடை விடுமுறைக்கு பின்பு புதுச்சேரியில் ஜூன் 23ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 13ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டிலும், புதுச்சேரி யிலும் ஒரே வகையிலான பாடத்திட்டம் செயலில் உள்ளதால், புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு எப்போது என்று கேள்வி எழுப்பப்பட்ட வந்தது. இந்த நிலையில், இன்று  செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி  கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்  பள்ளிகள் திறப்பு தேதிகளை  அறிவித்தார்.  அதன்படி, … Read more

கல்வி உரிமை தான் பெண்களின் உரிமை! எஸ்ஐஇடி கல்லூரி விழாவில் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: கல்வி உரிமை தான் பெண்களின் உரிமை எனவும், பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்பதற்காக தான் மகளிர் சுய உதவிக்குழுக்கள் துவங்கப்பட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தேனாப்பேட்டையில் உள்ள நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி (SIET)   A++ தரச்சான்று பெற்றுள்ளது. அக்கல்லூரிக்கு தேசிய தர நிர்ணயக் குழுவால் வழங்கப்பட்ட NAAC-A++ சான்றிதழை அக்கல்லூரியின் தலைவர் மூஸா ரஸாவிடம் முதலமைச்சர்  வழங்கினார், தொடர்ந்து பேராசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து  சிறந்த … Read more

ராமேஸ்வரத்தில் 50அடி உள்வாங்கிய கடல்…! அமாவாசைக்கு நீராட வந்த பக்தர்கள் அதிர்ச்சி…

ராமேஸ்வரம்: பருவநிலை மாற்றங்களைத் தொடர்ந்து, ராமேஸ்வரத்தில் உள்ள கடல் சுமார் 50 அடி வரை உள்வாங்கி உள்ளது. இதனால், இன்று வைகாசி அமாவாசையையொட்டி கடலில் நீராட வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுவரை இல்லாத அளவுக்கு கடல் நீர் பக்தர்கள் நீராட முடியாதவாறு உள்வாங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வைகாசி அமாவாசை நாளில் ராமேஸ்வரத்திற்கு புனித நீராட சென்ற பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் குவிந்துள்ளனர். ஆனால், அங்குள்ள கடல் வெகுதூரம் உள்வாங்கி இருப்பது, அங்கு … Read more

ராஜ்யசபா சீட் மறுப்பு: ‘நான் தகுதி குறைந்தவளா’ என காங்கிரஸ் தலைமைக்கு எதிராக நடிகை நக்மா கொந்தளிப்பு 

டெல்லி: ராஜ்யசபா சீட் மறுப்பு: ‘நான் தகுதி குறைந்தவளா’ என காங்கிரஸ் தலைமைக்கு எதிராக மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளரான நடிகை நக்மா கொந்தளித்துள்ளார். கடந்த 18 ஆண்டுகளாக கட்சியில் பணியாற்றி வருகிறேன் தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று அதிருப்தி தெரிவித்து உள்ளார். மாநிலங்களவையில் காலியாக உள்ள உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், அதில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி அகில இந்திய காங்கிரஸ் தலைமை  தமிழ்நாட்டில் ப.சிதம்பரம் உள்பட 16 … Read more

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூன் 7, 8ந்தேதிகளில் இந்து சமய அறநிலையத் துறை குழு ஆய்வு…

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூன் 7, 8ந்தேதிகளில் இந்து சமய அறநிலையத் துறை குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது,  சிதம்பரம் நடராஜர் கோயில் சட்டவிதிகளின்படி தீட்சிதர்களால் நிர்வகிக்கப்படுகிறதா என்பது குறித்தும், கோவிலுக்கு சொந்தமான சொந்தமான நகைகள், சொத்துக்கள், வரவு, செலவு கணக்குகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை குறித்து ஆய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் தற்போது தீட்சிதர்களைக்கொண்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலை அரசு கையகப்படுத்த … Read more

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பி.எம்.கேர்ஸ் திட்டதின்மூலம் கல்வி உதவித்தொகை! பிரதமர் மோடி வழங்குகிறார்…

டெல்லி: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பி.எம்.கேர்ஸ் திட்டதின்மூலம் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில்,  கொரோனா பெருந்தொற் றால் பாதிக்கப்பட்டு பெற்றோர்கள் இருவரையோ, பெற்றோரில் ஒருவரையோ அல்லது பாதுகாவலரையோ அல்லது தத்தெடுத்த பெற்றோர்களையோ இழந்த குழந்தைகளுக்கு அரசு ஆதரவளிப்பதற்காக குழந்தைகளுக்கான பி.எம்.கேர்ஸ் திட்டத்தில் இருந்து உதவித்தொகை வழங்கும் திட்டம் இன்று பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்படுகிறது. … Read more

சென்னையில் இதுவரை ரூ. 220.64 கோடி சொத்துவரி வசூல்!  மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல்

சென்னை: நடப்பு ஆண்டில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்  இதுவரை ரூ.220.64 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன் தீப் சிங் பேடி  தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் சொத்து பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. குறைந்தது 25சதவிகிதம் முதல் அதிகபட்சமாக 150 சதவிகிதம் வரை சொத்துவரி உயர்த்தப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சென்னை மாநகர முனிசிபல் சட்டம், 1915ன்படி சொத்து உரிமையாளர்களுக்கு அவர்களுடைய சொத்தின் மீது சொத்துவரி விதிக்கப்படுகிறது. அதன்படி,  … Read more

மதுரை மாநகராட்சி ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

மதுரை: மதுரை மாநகராட்சி ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன, இதில் பணியாற்றும் 4,500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் 1,500-க்கும் மேற்பட்ட பொறியியல் பிரிவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தற்போது தூய்மை பணி மற்றும் குடிநீர் விநியோகப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர். ஒப்பந்த பணியாளர்களுக்கு தின ஊதியம் 625 ரூபாய் வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்கள் 4 … Read more