இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவுக்கும் வரகூடிய அபாயம் – ப.சிதம்பரம் எச்சரிக்கை

புதுடெல்லி: இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவுக்கும் வரகூடிய அபாயம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘தவறான பொருளதாரக் கொள்கைகளை இந்திய அரசு தொடர்ந்து பின்பற்றினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை நமக்கு வரக்கூடிய அபாயம் இருக்கிறது என்று எச்சரிக்கிறேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவுக்கு  வந்து விட்டது என்று கூறவில்லை. ஆனால் வரக்கூடிய அபாயம் இருக்கிறது … Read more

அங்காடிமங்கலம் அய்யனார் கோயில்

அங்காடிமங்கலம் அய்யனார் கோயில், நாகப்பட்டினம் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் இடம் பெற்றுள்ளது. திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற தேவாரத் திருத்தலம். இச்சிவாலயத்தின் மூலவர் அக்கினீசுவரர். இவர் தீயாடியப்பர் என்றும் அறியப்படுகிறார். அம்பாள் சௌந்தரநாயகி என்றும் அழகமர்மங்கை என்றும் அழைக்கப்படுகிறார். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஒன்பதாவது சிவத்தலமாகும். இத்தலத்தில் முற்கால சோழர் காலத்திய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சுந்தர பாண்டியன், கோனேரின்மை கொண்டான் காலத்து கல்வெட்டுக்கள் உள்ளன. … Read more

வாசகர்களுக்கு பத்திரிகை.காம்-ன் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

வாசகர்கள், விளம்பரதாரர்கள் உள்பட அனைவருக்கும்  மனமார்ந்த  சுபகிருது  தமிழ் புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்… இன்று பிறக்கும் சித்திரைத் திருநாள், நம் அனைவரது  வாழ்விலும் சுபத்தையும்,  மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும் ….   உலகெங்கும் அமைதி பரவட்டும்… – ஆசிரியர்  

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அமைகிறது கடல்பாசி பூங்கா!

சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் மத்திய அரசுடன் இணைந்து கடல்பாசி பூங்கா அமைய இருப்பதாக தமிழகஅரசு சட்டமன்றத்தில் தெரிவித்து உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மீன்வளத்துறை சார்பில் கொள்ளை விளக்க குறிப்பேடு வெளியிடப்பட்டது. அதில்,  தமிழகத்தில் கடல்பாசி பூங்காவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கடல்பாசி வளர்ப்பை மீனவர்களுக்கான மாற்று வாழ்வாதார நடவடிக்கையாக ஊக்குவிக்க மீன்வளத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய … Read more

13/4/2022: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. எந்தவித உயிரிழப்பு இன்றி 27 பேர் குணமடைந்துள்ளனர். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று ஒரே நாளில், 19,714 சோதனை செய்துள்ளது. இதுவரை 6,58,72,549 சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று நடத்தப்பட்ட சோதனையில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 34,53,163 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24மணி நேரத்தில் எந்தவொரு கொரோனா … Read more

ஆளுநர் விருந்தில் விசிக பங்கேற்காது! கம்யூனிஸ்டு கட்சியைத் தொடர்ந்து திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, நாளை இரவு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய நபர்களுக்கு ஆளுநர் விருந்தளிப்பது வழக்கமான நடைமுறை. அதன்படி நாளை ஆளுநர் தரும் விருந்தில் விசிக பங்கேற்காது என அக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ளும்படி முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி பெயரில் அழைப்பு விடுக்கப்பட்டது. … Read more

ஐபிஎல் 2022: பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெறும் மும்பை – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்களை குவித்துள்ளது. மும்பை அணி தரப்பில் பசில் தம்பி அதிகபட்சமாக … Read more

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கவேண்டும்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கவேண்டும், மக்களோடு மக்களாக இருந்து பொறுப்புடன் செயல்படுங்கள் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற மாண்புமிகு மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக் கான நிர்வாகப் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் உரையாற்றினார். சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு விழா  இன்று நடைபெற்றது. இதில் … Read more

சென்னையில் உள்ள 5 அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டுகள் முற்றிலும் காலி…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்த நிலையில், சென்னையில் உள்ள 5 அரசு மருத்துவமனைகளில் முற்றிலுமாக கொரோனா தொற்று ஒழிக்கப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா வார்டுகள் காலியாக உள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த இரு ஆண்டுகளாக பரவி வந்த கொரோனா தொற்று, கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆனால், மத்திய, மாநில அரசுகள் எடுத்த  நடவடிக்கை மற்றும் கொரோனா தடுப்பூசி காரணமாக தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இன்று 29 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகி … Read more

மத்தியஅரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான எம்.பி.க்கள் கோட்டா ரத்து!

சென்னை: மத்தியஅரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான எம்.பி.க்களின் கோட்டாவை  நிறுத்தி வைக்க மத்தியஅரசு பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு உள்ளது. மத்தியஅரசின் கேந்திர வித்யாலாயா பள்ளிகள்  நாடு முழுவதும் செயல்படுகின்றன. ராணுவத்தினர், மத்திய, மாநில அரசின் அலுவலர், ஊழியர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனத்தினர் ஆகியோரின் பிள்ளைகளுக்கு, முன்னுரிமை அளித்து, மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. மேலும்,  ஒவ்வொரு எம்.பி.க் களுக்கும் முதலில் 6 சீட்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. பின்னர் கடந்த 2016ம் ஆண்டு 10 ஆக … Read more