பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி-யுடன் திடீர் சந்திப்பு… உக்ரைன் தலைநகரில் ஆய்வு…

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் நாட்டுக்கு இங்கிலாந்தின் ஆதரவை உறுதிப்படுத்தும் விதமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று திடீரென உக்ரைன் தலைநகர் கிவ் சென்றார். இங்கிலாந்தில் உள்ள உக்ரேனிய தூதரகம், அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் போரிஸ் ஜான்சன் ஆகியோரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்களில் இந்த தகவல் பகிரப்பட்டுள்ளது. பிப்ரவரி 24 ரஷ்யப் படையெடுப்புக்குப் பின் காக்கி உடைக்கு மாறிய ஜெலன்ஸ்கி-யுடன் போரிஸ் ஜான்சன் சந்திப்பதையும், பேச்சுவார்த்தை நடத்தும் படங்களையும் அதில் பதிவிட்டுள்ளது. பிரிட்டன் பிரதமரின் இந்த … Read more

“சிலிண்டர் விலை உயர்வு குறித்து யாரும் கவலைப்படவில்லை” : நீட்டா டிசோசா எழுப்பிய கேள்விக்கு ஸ்ம்ரிதி இரானி அசத்தல் பதில்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியிடம் மகிளா காங்கிரஸ் கட்சி தலைவர் நீட்டா டிசோசா கேள்வி எழுப்பினார். டெல்லியில் இருந்து குவாஹாத்திக்கு சென்ற விமானத்தில் பயணம் செய்த நீட்டா டிசோசா தன்னுடன் அதே விமானத்தில் பயணம் செய்த மத்திய அமைச்சரிடம் விலைவாசி உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார். விமானத்தில் இருந்து இறங்க முயன்ற மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியை பின்னால் இருந்து அழைத்த நீட்டா டிசோசா, … Read more

கடலூர் மருத்துவ மாணவர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம்

சென்னை: கடலூர் மருத்துவ மாணவர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்பாட்டம் நடத்தினர். 300-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

சென்னை: வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தென் தமிழகக் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. நாளை தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது .

நாடு முழுவதும் உள்ள பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புதுடெல்லி: ராமநவமியையொட்டி நாடு முழுவதும் உள்ள பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ராமநவமியையொட்டி அயோத்தியில் உள்ள ராம் லாலா கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ராமபிரானின் பிறந்த நாளை ராமநவமியாக நாடு முழுவதும் இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர். சித்திரை மாதத்தில் வரும் நவமி தினமே ஆண்டுதோறும் ராமநவமியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராம் லாலா கோயிலில் அதிகாலையில் ராமபிரானுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. … Read more

நரிக்குறவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளது- எம்.பி கனிமொழி

தூத்துக்குடி: நரிக்குறவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளது என்று எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர்கள் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் பாராளுமன்ற திமுக குழுத் துணைத் தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி அமைச்சர் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினார்கள். இதைத் தொடர்ந்து பேசிய கனிமொழி எம்பி, “தமிழக அரசு எடுத்த உரிய நடவடிக்கை காரணமாக, நரிக்குறவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளது. அவர்களின் ஜனநாயக கடமையான … Read more

இணையத்தில் தமிழ் மொழியை மேம்படுத்த மென்பொருள் – தமிழ் இணைய கல்விக் கழகம் முடிவு

சென்னை: இணையத்தில் தமிழ் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், அதை மேலும் மேம்படுத்த பல்வேறு மென்பொருள் கருவிகளை உருவாக்க தமிழ் இணைய கல்விக் கழகம் முடிவெடுத்துள்ளது. தமிழ் மென்பொருள் கருவிகளை உருவாக்க முடிவு செய்து பிரபல மென்பொருள் நிறுவனங்களிடம் தமிழ் இணைய கல்வி கழகம் விருப்பம் கோரியுள்ளது. தமிழ் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் அதை மேலும் வலுப்படுத்த மென்பொருள் கருவிகள் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் தமிழ் புகைப்படங்கள் மற்றும் பேச்சு அங்கீகாரத்திற்கான பிரத்தியேக மென்பொருள் … Read more

பொருளாதார நெருக்கடி – இலங்கையிலிருந்து மேலும் 19 பேர் தமிழகம் வருகை

ராமேஸ்வரம்: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, குழந்தைகள் உட்பட மேலும் 19 பேர் இலங்கையிலிருந்து தமிழகம் வந்துள்ளனர். இலங்கையிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிக்கு வந்த 19 நபர்களிடம், கியு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது இலங்கையில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்திற்கு வந்ததாகத் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர், மரைன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கவுள்ளனர். ஏற்கனவே இலங்கையிலிருந்து வந்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 20பேர், மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள்

கொழும்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உதவுவது குறித்து தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில், ஸ்டாலினுக்கு இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்திருக்கும் வேண்டுகோளில், நாடு ஒன்றுபட்டிருக்கும் வேளையில், தமிழ் மக்களுக்கு மட்டும் உதவுவது, நாட்டுக்குள் பிளவை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துனிசியாவில் அகதிகள் படகு மூழ்கி விபத்து – 13 பேர் உயிரிழப்பு

துனிசியா: துனிசியாவில் அகதிகள் படகு மூழ்கி விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். இதுமட்டுமின்றி 10 புலம்பெயர்ந்தோர் Sfax கடற்கரையில் காணாமல் போயுள்ளனர் மற்றும் 19 பேர் மீட்கப்பட்டதாக அதிகாரி மேலும் கூறினார். மீட்கப்பட்ட உடல்களில் நான்கு பெண்களும், நான்கு குழந்தைகளும் இடம் பெற்றுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சமீபத்திய மாதங்களில், துனிசியா மற்றும் லிபியாவிலிருந்து இத்தாலியை நோக்கி ஐரோப்பாவிற்கு கடக்கும் முயற்சிகள் அதிகரித்து, துனிசிய கடற்கரையில் டஜன் கணக்கான மக்கள் நீரில் மூழ்கியுள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் … Read more