தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் தற்போது உயர வாய்ப்பில்லை! அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர்

சென்னை: டீசல் விலை உயர்வால் தமிழ்நாட்டில்  பேருந்து கட்டணம் தற்போது உயர வாய்ப்பில்லை என்று அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் கூறினார். நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை செஞ்சுரியை தாண்டி உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். விலைவாசிகளும் தாறுமாறாக உயரத்தெடங்கி உளளதல், சாமனிய மக்கள் அவஸ்தபட்டு வருகின்றனர். இதற்கிடையில் தமிழகஅரசு சொத்துவரியை பல மடங்கு உயர்த்தி உள்ளது. மேலும், காலநிலைக்கு தகுந்தவாறு மின்கட்டணம், பேருந்து கட்டணங்கள் உயர்வது வாடிக்கையானது என அமைச்சர் நேரு … Read more

என்எஸ்சி போஸ் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: சென்னை என்எஸ்சி போஸ் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்கனவே சென்னை  உயர் நீதிமன்றம் உத்தரவின்படி, இதுவரை  எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பாரிமுனை அருகே உள்ள பூக்கடை என்எஸ்சி போஸ் சாலை, நடைபாதை வியாபாரிகளால் முழுமையாக ஆக்கிமிக்கப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதையடுத்து,  மறைந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை … Read more

மானிய கோரிக்கைகள்: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது….

சென்னை: தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் சொத்து வரி உயர்வு, தங்க நகை கடன் தள்ளுபடி போன்ற விவாதங்கள் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் (மார்ச்) 18-ந்தேதி தொடங்கி 24ந்தேதி முடிவடைந்தது. 6 நாட்கள் மட்டுமே நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, 18, 19தேதிகள் நிதி மற்றும் வேளாண்  பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  பின்னர் 21ந்தேதி முதல்  24-ந்தேதி வரை விவாதம் நடந்தது. … Read more

காவல்நிலையங்களில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை! சென்னை காவல் ஆணையர்

சென்னை: சென்னை பெருமநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காவல்நிலையங்களில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து காவல்நிலையங்களுக்கும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்குகிறது. இதையொட்டி,  காவல்நிலையத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் காவல்நிலையங்களுக்கு அனுப்பியுள்ள  … Read more

தமிழகத்தின் புதிய கல்விக்கொள்கை வடிவமைக்க முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைப்பு!

சென்னை: தமிழகத்தின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் சூர்யா குடும்பத்தினரின் அகரம் அறக்கட்டளையும் இடம்பெற்றுள்ளது. மத்தியஅரசு தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தி உள்ளது. இதற்கு தமிழகஅரசு எதிர்ப்பு தெரிவித்து, அதை அமல்படுத்த மறுத்து வரும் நிலையில், புதிதாக கல்விக்கொள்கையை உருவாக்க முன்வந்துள்ளது. கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட (21-22) இடைக்கால பட்ஜெட்டில், தமிழகத்துக்கென மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை உருவாக்க, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு … Read more

மின்னணு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஏற்ற இடம் சென்னை… எப்.டி.ஐ. ஆய்வில் தகவல்…

மின்னணு துறையில் வெளிநாட்டு நேரடி முதலீடு செய்ய சிறந்த இடங்கள் குறித்து எப்.டி.ஐ. பென்ச்மார்க் நிறுவனம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் முதல் 20 இடங்களில் துருக்கியின் இஸ்தான்புல் தவிர மற்ற அனைத்து இடங்களும் ஆசியாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தென் கொரியாவின் சியோல், ஜப்பானின் டோக்கியோ, சீனாவின் ஷென்ஜென், குவாங்ஹு, ஆகிய இடங்கள் இடம்பெற்றுள்ளது. 50 பேர் கொண்ட எலக்ட்ரானிக்ஸ் ஆர் & டி மையத்தை நிர்வகிக்க உலகின் 100 நகரங்களில் ஆகும் செலவினங்கள் குறித்த ஆய்வின் … Read more

விஜயின் பீஸ்ட் ரிலீசுக்கு தடை…

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பீஸ்ட் திரைப்படம் இந்த மாதம் 13 ம் தேதி உலகமெங்கும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ரிலீசுக்கு இன்னும் ஒருவாரமே இருக்கும் நிலையில், இந்தப் படத்தில் அதிகப்படியான வன்முறை காட்சிகள் இருப்பதாக கூறி திரையிட தடை விதித்திருக்கிறது.   இஸ்லாமிய தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருப்பதால் குவைத் நாட்டில் இந்தப் படத்தை திரையிடக் கூடாது என்று அந்நாட்டு அரசு தடை விதித்திருக்கிறது. ஏற்கனவே துல்கர் சல்மான் நடித்த குரூப் மற்றும் … Read more

இந்த ஆட்சியில் நிம்மதியாக இருக்கிறோம் என்று மக்கள் கூறுகிறார்கள்! விழுப்புரம் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…

விழுப்புரம்: இந்த ஆட்சியில் நிம்மதியாக இருக்கிறோம் என்று மக்கள் கூறினார்கள் என விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நலதிட்டங்கள் வழங்கும்  நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். பெரியார் கண்ட கனவுப்படி தமிழகம் எங்கும் சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கொமுவாரி பகுதியில் ரூ.2கோடியே 88 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 100 பெரியார் நினைவு சமத்துவ புர வீடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் நேரில் சென்று திறந்து வைத்தார். … Read more

பாரத_கவுரவ_ரெயில் திட்டம்: கோவை-ஷீரடி இடையே முதல் தனியார் ரெயிலுக்கு மத்தியஅரசு அனுமதி…

கோவை: பாரத_கவுரவ_ரெயில் திட்டத்தின்படி,  கோவை-ஷீரடி இடையே முதல் தனியார் ரெயிலுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஐஆர்சிடிசி ராமாயாணா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கி வரும் நிலையில், தற்போது தெற்கு ரயில்வேயில் இருந்து, முதல் ரயிலாக கோவை ஷீரடி ரயில் சேவை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் முதல் பாரத் கவுரவ் ரயில், தெற்கு ரயில்வேயின் கோயம்புத்தூர் – ஷீரடி பிரிவில் இயக்கப்படுகிறது. இந்த  கோயம்புத்தூர்-ஷீரடி ரயில் சேவை பிரிவு மே … Read more

2ஆண்டுகளுக்கு பிறகு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது – வீடியோ…

மதுரை: 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று காலை தொடங்கியது. சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. உலகப்புகழ்பெற்றது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இங்கு நடைபெறும் 12நாட்கள் சித்திரைப்பெருவிழா பிரசித்தி பெற்றது. இந்த விழாவைக் காண இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிவார்கள். கொரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பக்தர்களுக்கு அனுமதியின்றி, கோவில் வளாகத்திற்குள்ளேயே எளிமையா நடைபெற்று வந்த நிலையில், … Read more