கடந்த நிதி ஆண்டில் ஏற்றுமதி வருவாய் 41,800 கோடி டாலரை எட்டியுள்ளது! பியூஷ் கோயல்

டெல்லி: கடந்த நிதி ஆண்டில் (2021-22) இந்தியாவின் ஏற்றுமதி 41,800 கோடி டாலரை (ரூ.31.76 லட்சம் கோடி) எட்டியுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். கடந்த ஆண்டின் ஏற்றுமதி குறித்து மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த நிதி (2021-22) ஆண்டில் ஏற்றுமதி வருவாய் 41,800 கோடி டாலரை எட்டி இருப்பதாகவும், இது  முந்தைய நிதியாண்டை விட 40 சதவீதம் அதிகம் என்றவர்,  கொரோனா … Read more

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு: திமுக உறுப்பினர்கள் 2 பேர் உள்பட 4 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்…

விருதுநகர்: 22வயது பட்டியலின இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி ஏமாற்றி, அதை வீடியோ எடுத்து மிரட்டி பல மாதங்களாக வன்புணர்வு செய்து வந்த திமுக நிர்வாகிகள் 2 பேர், 4 சிறுவர்கள்  உள்பட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்,  திமுக நிர்வாகி உள்பட  4 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக்காவல் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகரில் தனியார் ஆடை  தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த  22 வயது  இளம் பெண் ஒருவரை,  திமுக நிர்வாகி ஹரிஹரன் என்பவர் காதலிப்பதாக கூறி … Read more

நரிக்குறவர், இருளர் உள்பட விளிம்பு நிலை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா! ஸ்டாலின் வழங்கினார்

சென்னை:  விளிம்பு நிலையில் உள்ள 57,978 நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கும், 2,35,890 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் 41,573 பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கும் இணையவழி இலவச பட்டாக்களை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் பட்டாக்களை வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (4.4.2022) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், விளிம்பு நிலையில் உள்ள 57,978 … Read more

கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்க 5 உறுப்பினர்களை கொண்ட ஆலோசனைக் குழு அமைப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில், கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்கும் பொருட்டு வருவாய் மற்றும் வரி விதிப்பு (சரக்கு மற்றும் சேவை வரி உட்பட) தொடர்புடைய புகழ்பெற்ற சட்ட, பொருளாதார வல்லுநர்கள் கொண்ட 5 பேரைக் கொண்ட ஆலோசனைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள் செய்திக்குறிப்பில் , “தமிழக அரசின் 2021-22 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்கும்பொருட்டு வருவாய் மற்றும் வரி விதிப்பு (சரக்கு மற்றும் சேவை வரி … Read more

பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து தலைமைச்செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஏற்கனவே கடந்த மாதம் நடைபெற்று முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற மீண்டும் 2வது அமர்வு ஏப்ரல் 6ந்தேதி முதல் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை … Read more

இலங்கையில் வாழும் பூர்விக மற்றும் மலையக தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை! மத்தியஅரசு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை: இலங்கையின் வாழும் பூர்விக மற்றும் மலையக தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க மத்தியஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், ஏராளமானோர் அங்கிருந்து வெளிநாடுகளுக்கு அகதிகளாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அங்கு பொதுமக்களின் போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன. இதையடுத்து, இலங்கையின் வேண்டு கோளுக்கு இணங்க இந்தியா ஏராளமான உதவிகளை செய்து வருகிறது. இந்த நிலையில், பொருளாதாரப் பேரழிவில் சிக்கியுள்ள இலங்கையை … Read more

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்கள் 8,37,317 பேர்! தேர்வுத்துறை தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்கள் 8,37,317 பேர் என்றும், 10, 11, 12ம் வகுப்பு ஆகிய 3 வகுப்புகளையும் சேர்த்து, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மொத்த எண்ணிக்கை 26.76 லட்சம் என கூறியுள்ளது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொதுத் தேர்வு முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித் துறை ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், … Read more

97.05% பேருக்கு நகைக்கடன் தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளது! அமைச்சர் பெரியசாமி தகவல்…

சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்டுள்ள நகைக்கடன்களில்  97.05%  பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் பெரியசாமி கூறினார். திமுக ஆட்சிக்கு வந்தால், கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது.  அதைத்தொடர்ந்தே ஏராளமானோர் நகைக்கடன் பெற்றுள்ளது தெரிய வந்தது. .  தொடர்ந்து, ஆட்சிக்கு வந்ததும், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூறியதுடன், பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இது ஏழை மக்களிடையே சலசலப்பை … Read more

இந்து சமய அறநிலையத்துறை புதிய வாகனங்கள் – அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை புதிய வாகனங்கள் மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியை, முதலவர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற விழாவில்,  இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கு ரூ 5.08 கோடி செலவில் 69 புதிய வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து,  அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில் ரூ.8.74 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு புதிய கட்டடங்கள் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற விழாவில், சென்னை,ராஜா அண்ணாமலைபுரம், அண்ணா … Read more

திமுக பிரமுகர் சவுந்தராஜன் கொலை வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் சரண்…

சென்னை: சென்னை பாரிமுனையில் திமுக பிரமுகர் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். தண்ணீர் பந்தல் அமைப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ளது. சென்னை பாரிமுனையில் திமுக பிரமுகர் சௌந்தரராஜன் வெட்டி கொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் நடைபெற்ற சம்பவவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை செய்யப்பட்ட சவுந்தரராஜன் சென்னை வியாசர்பாடியில் 59-வது வட்ட கழக செயலாளராக இருந்தவர் என்பது தெரிய வந்தது. இவர்  பிராட்வே பேருந்து … Read more