ஏப்ரல் 25 முதல் மே 2 வரை: தமிழ்நாட்டில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் பிளஸ் 2 வகுப்பினருக்கான செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 25 முதல் மே 2 வரை பிளஸ் 2 செய்முறைத் தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், முதல்கட்டமாக 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரி … Read more

புதுவீடு கட்டும் வீட்டு உரிமையாளரை மிரட்டும் திமுக கவுன்சிலர் – வைரல் வீடியோ

சென்னை: தமிழ்நாட்டில், திமுக ஆட்சி வந்த நிலையில், வணிகர்களை மிரட்டும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், தற்போது கவுன்சிலர்கள் பதவி ஏற்றதும், ஏரியா வாரியாக மாமூல் வசூலிக்கும் பணிகளும் அதிகரித்து வருகிறது. இது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மீது மக்களிடையே அதிருப்தியை உருவாக்கி உள்ளது. நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கிட்டத்தட்ட 80 சதவிகிதத்துக்கும் மேலான இடங்களை தி.மு.க கூட்டணி பிடித்துள்ளது. ஆனால், தலைவர் பதவிகளுக்கு நடைபெற்ற மறைமுக தேர்தலின்போது திமுகவினர் நடத்திய அராஜகத்தை, … Read more

தனுஷுக்கு ஜோடியாக சுவிஸ் நடிகையை களமிறக்கினார் இயக்குனர் செல்வராகவன்…

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களின் மூலம் இளசுகளின் மனதை கொள்ளையடித்த தனுஷ் – செல்வராகவன் கூட்டணி புதிதாக இணைந்திருக்கும் படம் ‘நானே வருவேன்’. 11 ஆண்டுகளுக்குப் பிறகு ‘நானே வருவேன்’ படத்திற்காக மீண்டும் இணைந்திருக்கிறது இந்த கூட்டணி. தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் இந்துஜா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. தற்போது, மற்றொரு கதாநாயகியாக எல்லி அவுர் ரம் என்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நடிகை … Read more

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்த்து வந்த முதலமைச்சர் ஸ்டாலின் – ஆடியோ

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க 4 நாள் துபாய் சுற்றுப்பயணம் செய்த முதலமைச்சர் அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு, ஏராளமான முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார். இதை வரவேற்கும் வகையில் வகையில் கார்ட்டூன் அமைந்துள்ளது.

பூசாண்டி வரான்: திரை விமர்சனம்

ஹாரர், க்ரைம், வரலாற்று படம். ஆனால் குழப்பமின்றி, சிறப்பான திரைக்கதையுடன் நம்மை கட்டிப்போடுகிறது, பூசாண்டி வரான் திரைப்படம். முதல் விசயம்.. படக்குழுவினர் அனைவருக்கும் இரட்டைப் பாராட்டு. சிறப்பான படம் என்பதோடு, படக்குழுவில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் மலேசிய கலைஞர்கள். தொல் பொருட்களை வாங்கி விற்கும் நபர், அவருக்கு உதவியாளர்களா இருவர். மூவரும் பெரிய பங்களாவில் தங்கி இருக்கின்றனர். விளையாட்டாய் அவர்கள் பேயை அழைக்க, அந்த நேரம் அவர்களிடம் பழங்கால நாணயம் ஒன்று வந்து சேர அதன் … Read more

முகநூல் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா? நிர்வாகம் விளக்கம்

டில்லி பாஜகவுக்கு ஆதரவாக அரசியல் விளம்பரம் வெளியிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு முகநூல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. முகநூல் அரசியல் விளம்பரங்கள் பாஜகவுக்கு ஆதரவாக வெளியிடுவதாக ஒரு குற்றசாட்டு எழுந்தது.  மேலும்  குடிமக்களின் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் சமூக வலைத்தளங்களில் தனிநபர் விபரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.  எனவே இது குறித்து தகவல் தொழில் நுட்ப துறைக்கான நாடளுமன்ற நிலை குழு முகநூல் நிறுவன பிரதிநிதிகளைச் சந்தித்து விளக்கம் கேட்டது. முகநூல் நிர்வாக பிரதிநிதிகள், ”நாங்கள் விளம்பரங்களை … Read more

கணிதம் அவசியம் இல்லாத பொறியியல் படிப்புக்கள் எவை? : அரசு அறிவிப்பு

டில்லி ஒரு சில பொறியியல் படிப்புக்களுக்குக் கணிதம், வேதியியல் அவசியம் இல்லை என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புக்களில் சேர தற்போது கணிதம், இயற்பியல், உள்ளிட்ட பாடங்கள்  அவசியமாக இருந்தன.   ஆனால் ஒரு சில பொறியியல் படிப்புக்களுக்கு கணிதம் உள்ளிட்டவை அவசியம் இல்லை என இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு எழுந்தது.  இதையொட்டி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “கணிதம் பொறியியல் பிரிவில் உள்ள 3ல் … Read more

வேளச்சேரி : ரூ.5.84 கோடி மழைநீர் வடிகால் பணிகள் – முதல்வர் ஆய்வு

சென்னை வேளச்சேரியில் ரூ.5.84 கோடி செலவில் நடக்கும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்துள்ளார் தமிழக அர்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையின்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினார்.  இந்நிலையில், வரும் மழைக் காலங்களில் மழை, வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில், அதிக அளவில் தண்ணீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளுமாறும் முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி `சிங்காரச் சென்னை 2.0′ … Read more

கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு

சென்னை சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையைத் தினசரி மாற்றி அமைக்கின்றன.   ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 8 நாட்களாகவே பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டு … Read more

இலங்கையில் மருந்துகள் தட்டுப்பாடு : அறுவை சிகிசசை ரத்து – இந்தியா உதவி

கொழும்பு போதிய மருந்துகள் இல்லாததால் இலங்கையில் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. குறிப்பாக கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இலங்கை நிதி நெருக்கடியை சமாளிக்கச் சீனாவிடம் கடன் வாங்கி அந்த கடனை கட்ட முடியாமல் சிக்கித் தவித்தது. இதனால் இலங்கை ரூபாயின் மதிப்பு சர்வதேசச் சந்தையில் பெரும் சரிவை சந்தித்தது. இலங்கை வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் தவித்து வருகிறது. … Read more