நாகப்பட்டினத்தில் கடல் சீற்றம் : 40 வீடுகளில் கடல் நீர் புகுந்து சேதம்

நாகப்பட்டினம் நாகப்பட்டினத்தில் பட்டினச்சேரி பகுதியில் இன்று கடல் சீற்றம் ஏற்பட்டு 40 வீடுகளில் கடல்நீர் புகுந்து சேதம் அடைந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த பகுthi காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.   இது தமிழக கடற்கரையை நோக்கி ந்கர்வதால் தமிழக, புதுவை, காரைக்காலில் கடும் மழை பெய்யும் எனவும் டெல்டா மாவடடங்களிலும் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதையொட்டி இந்த பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் 3 ஆம் எண் … Read more

தமிழகத்தில் இன்று 196 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  04/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 196 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,51,013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 50,298 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,47,11,231 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 196 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இதில் ஒருவர் வெளி மாநிலத்தில் இருந்து வந்துள்ளார்.  இதுவரை 34,51,013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 3 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 38,015 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 554 பேர் குணம் அடைந்துள்ளனர். … Read more

உலக சாம்பியன்ஷிப், ஆசிய கோப்பை போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை – மேரி கோம்

புதுடெல்லி: உலக சாம்பியன்ஷிப், ஆசிய கோப்பை போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்று இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார். சர்வதேச அரங்கில் பல வெற்றிகளை ருசித்துள்ள நிலையில், ஆறு முறை உலக சாம்பியனான எம்சி மேரி கோம், நாளை தொடங்க உள்ள வரவிருக்கும் ஐபிஏ எலைட் மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் மற்றும் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான சோதனைகளில் பங்கேற்பதற்குப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளார். மேரி கோமின் நோக்கம் வரவிருக்கும் குத்துச்சண்டை வீரர்களுக்கு … Read more

மெரினா, பட்டினபாக்கம் கடற்கரைகளில் கடல் சீற்றம்

சென்னை: மெரினா, பட்டினபாக்கம் கடற்கரைகளில் கடல் சீற்றம் காணப்பட்டது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வட தமிழக கடலோர பகுதியில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும், இதனால், கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் … Read more

திமுக வாளும், கேடயமுமாக தமிழ் நிலத்தை என்றும் காக்கும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய வழியில் தி.மு.கழகம் வாளும் கேடயமுமாகத் தமிழ் நிலத்தை என்றும் காக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்,  “தமிழர் தலைமுறை தழைக்கத் தமிழ்த்தாய் பெற்றெடுத்த பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலில் ஆட்சியமைத்த நாள் இன்று,எத்தனை சோதனைகள் – அடக்குமுறைகள் – அவதூறுகள், அத்தனையும் கடந்து தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு எத்தனை எத்தனை சாதனைகள். … Read more

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து தமிழ்நாட்டை நோக்கி நகர்வதால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று குறிப்ப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், சென்னையில் அடுத்த 12 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் … Read more

பாலோ ஆன் : ரவீந்திர ஜடேஜா-வின் டிக்ளர் முடிவால் இலங்கை அணியை 174 ரன்களில் சுருட்டியது இந்தியா

இலங்கைக்கு எதிராக மொஹாலியில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 174 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை அணி நேற்று இரண்டாவது நாள் ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. இன்று காலை ஆட்டம் மீண்டும் துவங்கியதும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இலங்கை 66 ரன்கள் மட்டுமே சேர்த்து … Read more

தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப்  பகுதி : மழை எச்சரிக்கை

சென்னை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகத்தை நோக்கி நகர்வதால்  கடலோர மாவட்டங்களில் 3 நாட்கள் மழை பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று மாலை தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடதமிழக கடலோரப் பகுதியில் இருந்து சுமார் 300 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது  அடுத்த 36 மணி நேரத்தில் தமிழக கடற்கரையை நோக்கி இது … Read more

பொதுமக்கள் தெருநாய்களுக்கு உணவளிக்க உச்சநீதிமன்றம் தடை

டில்லி பொதுமக்கள் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவளிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. நாடெங்கும் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களால் மக்களுக்கு ஆபத்து ஏற்படுவது அதிகரித்து வருகிறது.    தற்போது விலங்கியல் ஆர்வலர்களின் வலியுறுத்தல் காரணமாக இவற்றை உள்ளாட்சி அமைப்புக்கள் பிடித்துச் செல்வது அடியோடு நின்றுள்ளதாகவும் இதனால் மக்களுக்கு ஆபத்து அதிகரித்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதையொட்டி டில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது   வழக்கு விசாரணையின் போது பொது மக்கள் தெருநாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பதால் அவை … Read more

பொறியியல் மாணவர்களுக்கு நேரடி செமஸ்டர் தேர்வு! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு…

சென்னை: பொறியியல் மாணவர்களுக்கு  நேரடி செமஸ்டர் தேர்வு தேதிகள் மற்றும் அடுத்த கல்வியாண்டுக்கான கல்லூரி திறப்பு குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட கல்லூரிகள் பின்னர் ஆன்லைன் மூலம் பாடங்களையும் செமஸ்டர் தேர்வுகளையும் நடத்தி வருகிறது. பின்னர் தொற்று குறைந்தவுடன் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஆனால், பொறியியல், பாலிடெக்னிக்  மற்றும் கலை, அறிவியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் வழியாகவே நடைபெற்று வருகின்றன. பின்னர் மார்ச் 7-ம் … Read more