சாலையோர வியாபாரத்தை ஒழுங்கு முறைப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை முழுவதும் சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மொத்தம் 905 விற்பனை மண்டலங்களை ஒதுக்கியுள்ளது. 4700 பகுதிகள் சாலையோர வியாபாரம் அல்லாத பகுதிகளாக அடையாளப்படுத்தி உள்ளது. புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள 905 விற்பனை மண்டலங்களில் வியாபாரம் செய்ய விரைவில் இ-டெண்டர்கள் வெளியிடப்படும் என்று சென்னை மாநகராட்சி இன்று அறிவித்துள்ளது. மாநகராட்சியின் அனுமதி சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே விற்பனை மண்டலங்களில் கடைகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள். புதிய கடைகள் மற்றும் … Read more

உச்ச நீதிமன்ற தீர்ப்பு சாதகமானதே! வன்னியர் இடஒதுக்கீடு ரத்து குறித்து ராமதாஸ் பரபரப்பு அறிக்கை…

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு ரத்து சரியானதே என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு குறித்து அமைச்சர்கள், கட்சியினர் என பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், வன்னியர் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்திய பாமக தலைவர் ராமதாஸ் உச்ச நீதிமன்ற தீர்ப்பு சாதகமானதே என தெரிவித்துள்ளார். வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு செல்லாது  என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கூறிய பல காரணங்களை உச்சநீதி மன்றம் ஏற்றுக் கொள்ள மறுத்து நிராகரித்து … Read more

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு…

டெல்லி: டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிதின்கட்ரி மற்றும் சோனியா காந்தியை சந்தித்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசினார். தமிழக முதல்வராக பதவி ஏற்றபிறகு, பல முறை டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், இன்றுதான் முதன்முறையாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். டெல்லியில் ஏப்ரல் 2ந்தேதி திமுக அலுவலகமான அறிவாலயம் திறந்து விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக 4 நாட்கள் பயணமாக தலைநகர் டெல்லிக்கு நேற்று … Read more

அண்டைய நாடுகளை விட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம்! ராகுல்காந்தி டிவிட்…

டெல்லி: நாடு முழுவதும் எரிபொருட்கள் விலை உயர்வுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அண்டைய நாடுகளை விட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம் ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். அதில் பல நாடுகளில் பெட்ரோல் விற்பனை செய்யப்படும் விலையை பகிர்ந்துள்ளார். தமிழ்நாட்டில், பெட்ரோல் விலை இன்று  லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.107.45-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.97.52-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் 9 வது முறையாக … Read more

பான் கார்டுடன் ஆதார் இணைக்க மேலும் ஒரு வருடம் கால அவகாசம்! ஆனால்….?

டெல்லி: பான் கார்டுடன் ஆதாருடன் இணைக்க மேலும் ஒரு வருடம் கால அவகாசம் வழங்கியுள்ள மத்தியஅரசு அத்துடன் சில கண்டிஷன்களையும் போட்டுள்ளது. பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைக்க இன்றே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. அதற்குள் இணைக்காதவர்கள் பின்னர் இணைக்க முயற்சித்தால், ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்தநிலையில் இன்று ஆதார் கார்டு இணைக்க மேலும் ஒரு வருடம் அவகாசம் சில நிபந்தனைகளுடன் மத்திய அரசு அறிவித்து உள்ளது. அதன்படி,   நாளை முதல் (ஏப்ரல் 1ந்தேதி  … Read more

சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு…

சென்னை: 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து பேசினார். டெல்லி திமுக அலுவலகம் திறப்பு விழா ஏப்ரல் 2ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று பிரதமர் மோடியை, நாடாளுமன்ற பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தார். அதைத் தொடர்ந்து மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் … Read more

நீட் தேர்வு விலக்கு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நாளை சந்திக்கிறார் அமைச்சர் மா.சு..

சென்னை: நாடு முழுவதும் நீட் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீட் தேர்வு விலக்கு கோரி  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனை நாளை தமிழ்நாடு சுகாதாரத்துறை மா.சுப்பிரமணியன் சந்திக்கிறார். சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ள நடமாடும் மருத்துவ வாகனத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து நடை பெற்ற நிகழ்ச்சியில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த மருத்துவ பணியாளர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியாக … Read more

30 நிமிடம் சந்திப்பு: பிரதமரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடம் நீடித்தது. அப்போது தமிழகத்தின் பல்வேறு தேவைகள் குறித்து பேசிய முதல்வர், டெல்லி திமுக அலுவலகம் திறப்பு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின்போது, பிரதரிடம்  ‘நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற்றுத்தர வேண்டும்; உக்ரைனில் இருந்து மருத்துவப் படிப்பை பாதியில் விட்டுவந்துள்ள மாணவர்கள் படிப்பை … Read more

தமிழ் நாட்டில் உள்ள ஈர நிலங்களின் மதிப்பு ரூ. 17000 கோடி… சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன ஆய்வில் தகவல்…

ஈரநில பாதுகாப்பு மற்றும் மேலாண்மையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம் தமிழகத்தில் உள்ள 42000 க்கும் மேற்பட்ட ஈரநிலங்களை பாதுகாத்து வருகிறது. இதில், முதல்கட்டமாக 141 ஈரநிலங்களை மேம்படுத்த தேவையான நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து வருகிறது. இது குறித்து ஆய்வு மேற்கொண்ட சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த மூன்றாண்டுகளில் 80 ஈரநிலங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ரூ. 4,386.6 கோடி ரூபாய் ஆண்டு மதிப்புள்ள இந்த 80 … Read more

மாமல்லபுரத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட்! அமைச்சர் அறிவிப்பு..!

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு புகழ்மிக்க உலக செஸ் போட்டியான, செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அதற்கான தேதிகள் வெளியிடப்பட்டு உள்ளது. சென்னை அருகே உள்ள கடற்கரை நகரமான மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட்  போட்டிகள் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறும் என அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார். 2ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் ‘செஸ் ஒலிம்பியாட்’  போட்டி நடப்பாண்டில் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. அதற்கான ஒப்பந்தத்தை தமிழகஅரசு பெற்றுள்ளது. உலக அளவில் … Read more