இந்து சமய அறநிலையத் துறைக்கு உயர் நீதின்றம் பாராட்டு

சென்னை: கோயில் நிலங்களில் இருந்து வர வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயில் நிலங்களில் இருந்து வர வேண்டிய ரூ. 2,390 கோடி வாடகை பாக்கியை வசூலிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக ஆண்டு வாடகை ரூ. … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது திட்டமிட்டபடி விசாரணை நடத்தப்படும்- உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது திட்டமிட்டபடி விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின்போது உள்ஒதுக்கீடு அரசியல் அமைப்பிற்கு எதிரானது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு … Read more

சேலம் சிவராஜ் குழும இயக்குனர் சிவராஜ் சஞ்சய் காலமானார்

சேலம்: சேலம் சிவராஜ் குழுமத்தின் தலைவர் டாக்டர் ஆர் சிவராஜ் சிவகுமாரின் மகன் டாக்டர் சிவராஜ் சஞ்சய் காலமானர். அவருக்கு வயது 50. சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 7 தலைமுறையாக இயங்கி வரும் சிவராஜ் சித்த வைத்திய சாலையின் இயக்குநரான சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் (78) உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி காலமானார். சிவராஜ் சிவகுமார் மறைவுக்கு பிறகு அவரின் மகன் சஞ்சய் சிவராஜ், சிவராஜ் சித்த வைத்திய … Read more

கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனிவா:  கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று  உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறியதாவது, உலகம் இன்னும் கொரோனாதொற்றுநோயின் பிடியிலிருந்து விடுபடவில்லை. இன்னும் அதிகளவிலான மாறுபட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார். உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயசஸுடன் தடுப்பூசி உற்பத்தி நிலையங்களுக்குச் சென்ற  அவர்,  செய்தியாளர்களிடம் பேசுகையில்,  தொற்றுநோய் எப்போது முடிவுக்கு வரும் என்று யாராலும் கணிக்க முடியாது.   இப்போது சிலர் … Read more

மாணாக்கர்கள் சீருடையுடன்தான் பள்ளிக்குள் செல்ல வேண்டும்! நடிகை குஷ்பு

சென்னை: மாணாக்கர்கள் சீருடையுடன்தான் பள்ளிக்குள் செல்ல வேண்டும் சாதி, மதத்தை அல்ல என்று சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக உறுப்பினர்களுக்கு வாக்கு சேகரித்த நடிகையும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான நடிகை குஷ்பு தெரிவித்தார். கர்நாடகாவில் எழுந்துள்ள ஹிஜாப் சர்ச்சை நாடு முழுவதும் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தை தேசிய பிரச்சினையாக்காதீர்கள் என்றும் உச்சநீதி மன்றமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தையொட்டி, சென்னையில் பிரச்சாரத்தை தொடங்கிய குஷ்பு, செய்தியாளர்களை சந்தித்தார். … Read more

வாக்குப்பதிவு நாளன்று விடுப்பு எடுக்கும் தொழிலாளர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யக்கூடாது! தேர்தல் ஆணையம் கண்டிப்பு…

சென்னை: வாக்குப்பதிவு நாளன்று விடுப்பு எடுக்கும் ஊதியம் பிடித்தம் இல்லாமல் விடுமுறை வழங்க வண்டும் என்று நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்பாளர்கள் பட்டியில் வெளியிடப்பட்டு தேர்தல் பணிகளும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சியினரும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி, இம்மாதம் 19 ஆம் தேதி பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற … Read more

அமைச்சர் தா.மோ.அன்பரசனின் தாயார் காலமானார்… முதலமைச்சர் நேரில் அஞ்சலி…

சென்னை: தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசனின் தாயார் காலமானார். அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழக சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன். அவரின் தாயார் ராசாமணி (வயது 83)  வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு காலமானார். இதையறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரில் சென்று திருமதி. ராஜாமணி அம்மாள் அவர்களின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். முதல்வருடன் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு,திமுக அமைப்புச்செயலாளர் … Read more

வார ராசிபலன்: 11.2.2022 முதல் 17.2.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபங்களை அடையமுடியும். ஸ்டூடன்ட்ஸ்க்கு படிப்புல நல்ல முன்னேற்றமும் உயர்வும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கெடைக்குங்க. வெளியூர் அல்லது ஃபாரின் தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளிங்க கிட்டயும் சக ஊழியர்களிடமும் வெளிவட்டாரத்திலும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கணுங்க. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளையும் இடமாற்றங்களையும் பெறமுடியும். உயரதிகாரிகளின் அப்ரிசியேஷன் மனசை ஹாப்பியாக்கும். பணவரவுகள் கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல் ஈஸியா நடைபெறும். குடும்பத்தில் … Read more

உ.பி. முதல்கட்ட தேர்தலில் 60.17 % வாக்குப்பதிவு: பரபரப்பை ஏற்படுத்திய யோகி போலவே உடை அணிந்த வாலிபர்… வீடியோ

லக்னோ: உ.பி.யில் நேற்று நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 60.17 % வாக்குப்பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அங்குள்ள வாக்குச்சாவடி ஒன்றில், யோகி ஆதித்யநாத் போலவே உடை அணிந்து வாலிபர் ஒருவர் வாக்களித்த வந்த சம்பவம் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல் 7 கட்டங்களாக  நடக்கிறது.  முதல்கட்ட தேர்தல் நேற்று (பிபரவரி 10ந்தேதி) 11 மாவட்டங்கள் அடங்கிய 58 தொகுதிகளில் நடைபெற்றது.  காலை 7 … Read more

ஒரே மாதத்தில் 54% சிறார்களுக்குத் தடுப்பூசி போட்ட மகாராஷ்டிரா

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே மாதத்தில் 15-18 வயதுடைய சிறார்கள் 60.7 லட்சம் பேரில் 54% பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது சென்ற மாதம் 3 ஆம் தேதி முதல் 15-18 வயதான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.    இவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்படுகிறது.   கோவாக்சின் தடுப்பூசி இரு டோஸ்களுக்கு இடையே 28 நாட்கள் இடைவெளி இருந்தால் போதும் என்பதால் தற்போது சிறார்களுக்கு 2 ஆம் டோஸ் ஊசியும் போடப்படுகிறது/ மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே மாதத்தில் … Read more