இதுதான் மதம் போதிக்கும் பண்பா?

நெட்டிசன்: மூத்தபத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு இதுதான் மதம் போதிக்கும் பண்பா? அகால சம்பவத்தில் பள்ளி மாணவனான 7 வயது மகனை இழந்திருக்கிறார் ஒரு தாய்.. உலகமே திரண்டு ஆறுதல் சொன்னாலும் இப்படிப்பட்ட சோகத்தில் உள்ள ஒரு எந்த ஒரு தாயையயும் தேற்றுவது கடினம். கையில் சடலமாக கிடைக்கும் மகனை புதைக்க கல்லறையில் இடம் தர மறுக்கிறது கிறிஸ்தவ அமைப்பு.. பாதிக்கப்பட்ட தாயே, நீங்கள் எல்லாம் ஒரிஜினல் கிறிஸ்துவர்களா?” என்று கேட்கிறார். கேட்டால் விதிமுறை என்கிறார்கள். … Read more

தமிழ் புத்தாண்டையொட்டி நாகர்கோவில்- தாம்பரம் இடையே சிறப்பு ரெயில் அறிவிப்பு!

சென்னை: தமிழ் புத்தாண்டு விடுமுறையையொட்டி நாகர்கோவில்- தாம்பரம் இடையே  சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ் புத்தாண்டு விடுமுறை காலத்தில் பயணிகளின் வசதிக்காக தாம்பரம்-நாகர்கோவில் இடையே ஒரு சிறப்பு ரெயில் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி சித்திரை 1ந்தேதி தமிழ்ப்புத்தாண்டு தினமான வருகிற 13-ந்தேதி தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு அதிவிரைவு சிறப்பு ரெயில் (06005) இயக்கப்படுகிறது. இந்த ரயில் அன்று … Read more

2வது நாளாக வேலைநிறுத்தம்: தமிழ்நாட்டில் பேருந்து சேவை தொடங்கியது – வங்கி சேவை முடங்கியது…

சென்னை: தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள 2நாள் நாடுதழுவிய போராட்டத்தின் 2வது நாளான இன்று தமிழ்நாட்டில், பேருந்து சேவை தொடங்கி நடைபெற்று வருகிறது. 90 சதவிகித அரசு பேருந்துகள் இயங்குவதாக மாநில போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது. ஆனால், வங்கி சேவை உள்பட பல சேவைகள் முற்றிலும் முடங்கி உள்ளது. மோடி தலைமையிலான மத்திய அரசின் மக்கள் விரோத போக்கு, தனியார் மயம்,  ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்பட 12 அம்ச கோரிக்கை களை  வலியுறுத்தி வங்கி உள்ளிட்ட … Read more

கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் கீதாலட்சுமி நியமனம்!

சென்னை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் வி.கீதாலட்சுமியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  நியமித்தார். கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கிருட்டிணமூர்த்தி இருந்து வந்தார். அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதியதுணைவேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் மாநிலம் முழுவதும் 14 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை என 11 பட்டப்படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. தற்போது கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள … Read more

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  5.77 லட்சம் சோதனை- பாதிப்பு 1,259

டில்லி இந்தியாவில் 5,77,559 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,259 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,259 பேர் அதிகரித்து மொத்தம் 4,30,21,962 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  மரணமடைந்தோர் எண்ணிக்கை 35 அதிகரித்து மொத்தம் 5,21,070 பேர் உயிர் இழந்துள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 1,706 பேர் குணமடைந்து இதுவரை 4,24,85,534 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 15,378 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று இந்தியாவில் 29,92,407 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு … Read more

தமிழகத்தில் இன்று 60% பேருந்துகள் இயங்கும்

சென்னை பொதுமக்கள் மற்றும் மாணவர் நலனுக்காக தமிழகத்தில் இன்று 60% பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தொமுச தெரிவித்துள்ளது.   நேற்று தமிழகத்தில் நடந்த வேலை நிறுத்த போராட்டம் காரனமாக பேருந்துகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இயங்கியதால் மக்கள் பெரிதும் அவதியுற்றனர்.    மாணவர்களால் கல்வி நிலையங்களுக்குச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது.   இது குறித்து தொமுச நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். பிறகு அவர்கள் செய்தியாளர்களிடம், “இரண்டு நாட்களாக மத்திய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தன. நேற்று தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடந்தது. சுமார் … Read more

பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்வு

சென்னை பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் துயரம் அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்தன.  சமீபகாலமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. ஆயினும் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக தேர்தல் காரணமாக விலை உயர்த்தப்படவில்லை.  தேர்தல் முடிந்த ஒரே வாரத்தில் பெட்ரோல் … Read more

ஐபிஎல் 2022: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி

வான்கடே: லக்னோ – குஜராத் அணிகள் இடையே இன்று நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியில் தீபக் 55 ரன்களையும், ஆயுஸ் 54 ரன்களையும் அடித்தனர். குஜராத் அணி பந்து வீச்சாளர்களில் முஹமத் சமி 3 விக்கெட்டைகளையும், வருண் … Read more

பள்ளி வேன் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: பள்ளி வேன் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார் திருநகரி தனியார் பள்ளிக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி,அடுத்த 24 மணி நேரத்திற்குள் அந்த நோட்டீஸில் கண்ட ஆறு கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆழ்வார் திருநகரில் பள்ளி வேன் மோதி இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் பலியான விவகாரத்தில் தனியார் பள்ளிக்கு மெட்ரிகுலேஷன் … Read more

இந்த வாரம் துருக்கியில் உக்ரைன் – ரஷ்யா பேச்சு வார்த்தை

கிவ் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே இந்த வாரம் அடுத்த கட்ட பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது, ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது போர் தொடுத்து ஒரு மாதத்துக்கும் மேலாக போர் நடந்து வருகிறது.    ரஷ்யப் படைகள்  தாக்குதலால் உக்ரைன் நாட்டின் விமான நிலையங்கள் நொறுக்கப்பட்டுள்ளன.  இதனால் உக்ரைன் நாட்டுக்கு யாரும் செல்ல முடியாத நிலை மற்றும் நாட்டை விட்டு வெளியேறா முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த போரையொட்டி ரஷ்யாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதாரத்தடை … Read more