19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் விசா விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்தம்… அமெரிக்கா அறிவிப்பு

ஐரோப்பா அல்லாத 19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் கிரீன் கார்டு, குடியுரிமை உள்ளிட்ட அனைத்து குடியேற்ற (immigration) விண்ணப்பங்களையும் தற்காலிகமாக நிறுத்துவதாக ட்ரம்ப் அரசு அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம் வாஷிங்டன் டி.சி.யில் வெள்ளை மாளிகை அருகே தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர் ஆப்கான் நாட்டைச் சேர்ந்தவர் என்பது உறுதியானதை அடுத்து வெளிநாட்டினரின் விசா கோரிக்கைகள் … Read more

2 மாத அட்வான்ஸ் மட்டுமே… வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025 புதிய கட்டுப்பாடுகள்

வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025-ன் படி வாடகைக்கு குடியேறுவோர் மற்றும் வீடுகளை வாடகைக்கு விடுவோருக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இச்சட்டம் வீட்டு உரிமையாளர்களுக்குப் பல புதிய கட்டுப்பாடுகளையும் வாடகை செல்வோருக்கு புதிய விதிமுறைகளையும் கட்டாயமாக்கியுள்ளன. வீடு வாடகைக்கு விடும் போது 2 மாத வாடகை மட்டுமே முன்பணமாக பெற முடியும். உரிமையாளரும் வாடகைதாரரும் இணைந்து தயாரிக்கும் ஒப்பந்தம் ஆதார் அடிப்படையிலான e-verification மூலம் 2 மாதங்களுக்குள் சார் பதிவாளர் அலுவலகம் அல்லது இணைய வழியாக கட்டாயம் … Read more

மழையால் மக்கள் தத்தளிப்பு: ஒரே நாளில் 8,46,250 நபர்களுக்கு உணவு வழங்கியது சென்னை மாநகராட்சி!

சென்னை: சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொதுமக்கள் தத்தளித்து வரும் நிலையில், நேற்று (டிசம்பர் 2) மட்டும்  சென்னை மாநகராட்சி சார்பில் ,46,250 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகளின் விவரத்தை  பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.   அதில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு, சென்னையில் மழையின் அளவு 17.10.2025 அன்று காலை 8.30 மணி முதல் இன்று (02.12.2025) காலை 8.30 மணி வரை சராசரியாக 369.70 … Read more

டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் பெயர் “சேவா தீர்த்’ என மாற்றம்?

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அலுவலகம் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி,  பிரதமர் அலுவலகத்தின் பெயர் “சேவா தீர்த்’ என மாற்றம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் பிரதமர் அலுவலகத்துக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்துக்கு “சேவா தீர்த்’ (சேவைத் தலம்) என்று பெயர் வைக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொது சேவைக்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், பிரதமரின் இல்லம் 2016 ஆம் ஆண்டு லோக் கல்யாண் மார்க் என … Read more

மூன்றாவது நாளாக தொடரும் மழை! சென்னையில் தொடரும் துயரம் – சாலைகளில் வெள்ளம் – பொதுமக்கள் கடும் அவதி!

சென்னை: டிட்வா குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நிலை கொண்டுள்ள நிலையில், இன்று  மூன்றாவது நாளாக மழை தொடர்ந்து வருகிறது. அவ்வப்போது கனமழையும் பெய்து வருவதால், சாலைகளில் வெள்ளம்  பெருக்கெடுத்து ஓடுகிறது. பல பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால்,  பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். சென்னைக்கு 100 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில்   இன்று 3வது நாளாக மழை பெய்து வருகிறது.  தற்போது மணிக்கு 3 கி.மீ … Read more

SIR குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளி: 2வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்…

டெல்லி: நாடாளுமன்றத்தில் வாக்காளர் தீவிர சீர்திருத்தம் (SIR) குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் இன்று 2வது நாளாக முடங்கி உள்ளது. மதியம் 2மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நேற்று (டிசம்பர் 1) தொடங்கியது.  இந்த கூட்டத்தொடர் 19 அமர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்நேற்று எதிர்க்கட்சிகள் SIR குறித்து விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை பாராளுமன்றம் … Read more

டிட்வா புயலுக்கு 4 பேர் பலி; பயிர் ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு! அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் டிட்வா புயலுக்கு 4 பேர் பலியாக உள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்,  கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக  தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்  கூறியதாவது, டிட்வா புயல் காரணமாக பெய்த மழை காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் 85,521.76 ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. நீரில் மூழ்கி சேதமடைந்த விளை … Read more

நாளை மகாதீபம்: திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நாளை கார்த்திகை மகா தீபம் ஏற்பட்ட உள்ள நிலையில், அங்கு  பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்  குறித்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் வருகிற 3-ந்தேதி (புதன்கிழமை) ஏற்றப்படுகிறது.  நாளை  அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் … Read more

வலுவிழந்த டிட்வா – தொடர் கனமழை: சென்னை, திருவள்ளுவர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை…

சென்னை: தமிழ்நாட்டை மிரட்டி வந்த டிட்வா புயல் வலுவிழந்த நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டமாக சென்னை அருகே நிலைகொண்டுள்ளதால், சென்னை உள்பட சுற்றுவட்டார மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேஙகி இருப்பதுடன், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை  பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை 2வது நாளாக  விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. திருவள்ளுர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ‘டிட்வா‘ புயல், … Read more

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதியை எதிர்த்து அறநிலையத்துறை மேல்முறையீடு… மதுரையில் பரபரப்பு…

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து கோவில் நிர்வாக அதிகாரி சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.  இது மதுரை உள்பட தென்மாவட்ட மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக அரசின் நடவடிக்கைக்கு இந்து முன்னணி, பாஜக, முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனால் மதுரை யில் பரபரப்பு நிலவி வருகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு, … Read more