இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பான நாடு என்பதை பிரச்சாரம் செய்ய இளம்பெண் தன்னந்தனியாக சைக்கிளில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்..!

இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பான நாடு என்பதை பிரச்சாரம் செய்ய 24 வயதான இளம்பெண் ஆஷா மால்வியா என்பவர் தன்னந்தனியாக சைக்கிளில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தி அருகே உள்ள நாதாராம் கிராமத்தைச் சேர்ந்த இவர், இதுவரை 21 மாநிலங்களுக்கு தனியாகவே சைக்கிளில் 17 ஆயிரத்து 250 கிலோமீட்டர் தூரம் வரை பயணித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவை தமது விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நோக்கம் என்று கூறும் ஆஷா, இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பானது … Read more

ஹைதரபாத்தில் 3 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற ‘மீன் மருந்து திருவிழா’.. மீன்களை உயிரோடு விழுங்கிய மக்கள்

ஆஸ்துமா நோயாளிகளை உயிருள்ள மீன்களை விழுங்கச்செய்யும் மீன் மருந்து திருவிழா ஹைதரபாத்தில் நடைபெற்றது. பாரம்பரியமிக்க பத்தினி குடும்பத்தினர், 177 ஆண்டுகளாக இந்த மீன் மருந்து திருவிழாவை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் 3 ஆண்டு இடைவெளிக்கு பின் நடைபெற்ற விழாவிற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். மூலிகை மருந்து தடவப்பட்ட மீனை அவர்கள் விழுங்கவைக்கப்பட்டனர். உணவுக்குழாய் வழியாக துடித்தவாறே செல்லும் மீன் நுரையீரலில் உள்ள சளியை நீக்கி ஆஸ்துமாவை குணப்படுத்தும் என்பது அவர்களின் நம்பிக்கை. Source … Read more

தாயின் நினைவாக ரூ.5 கோடியில் தாஜ்மஹால் வடிவில் நினைவிடம் கட்டிய மகன்..

திருவாரூரில் மறைந்த தாயின் நினைவாக 5 கோடி ரூபாய் மதிப்பில் மகன் ஒருவர் தாஜ்மஹால் போன்ற நினைவிடத்தை கட்டியுள்ளார். அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான அமுர்தீன் என்பவர் 2020ம் ஆண்டு காலமான தனது தாயார் ஜெய்லானி பீவியின் நினைவாக இதனை கட்டியுள்ளார். ஷாஜஹான் கால கட்டிடக்கலை பாணியில் ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்ட வெள்ளை பளிங்கு கற்களைக் கொண்டு சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை கட்டி முடிக்க சுமார் இரண்டு வருட … Read more

மல்யுத்த வீராங்கனைகளிடம் பிரிஜ் பூஷன் தவறாக நடந்தது உண்மை – சர்வதேச நடுவர் ஜக்பீர் சிங்!

மல்யுத்த வீராங்கனைகளிடம் பிரிஜ் பூஷண் தவறாக நடந்துகொண்டது உண்மை என சர்வதேச மல்யுத்த போட்டிகளின் நடுவர்களில் ஒருவரான ஜக்பீர் சிங் கூறினார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், மல்யுத்த வீராங்கனைகளிடம் மதுபோதையில் பலமுறை பிரிஜ் பூஷன் அத்துமீறலில் ஈடுபட்டதை தானே கண்ணால் பார்த்திருப்பதாக தெரிவித்தார். அனைத்து குற்றச் சாட்டுகளையும் பிரிஜ் பூஷண் மறுத்திருப்பதைப் பற்றி கேட்டதற்கு, திருடன் எப்போதாவது தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்வானா என்று அவர் எதிர்கேள்வி எழுப்பினார். பாலியல் புகார் தொடர்பாக வரும் … Read more

அரசு உரிய நிதியை ஒதுக்கவில்லை.. தேசிய விளையாட்டில் தமிழக பள்ளி மாணவர்கள் பங்கேற்க இயலாத நிலை..? தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டு

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு பள்ளி மாணவர்கள் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியுள்ளனர். தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற சான்றிதழ் வைத்திருக்கும் மாணவர்களுக்கு பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேரும் போது விளையாட்டு பிரிவு தரவரிசையில் கூடுதலாக மதிப்பெண்கள் வழங்கப்படுவது வழக்கம். தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் போதிய நிதி ஒதுக்காததால் இந்தாண்டு தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்காத சூழல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் சங்க … Read more

காட்டுத் தீயை கட்டுப்படுத்த வரவழைக்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்க தீயணைப்பு வீரர்கள் கனடாவில் ஆடிப் பாடி நடனம்

கனடாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த வரவழைக்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்க தீயணைப்பு வீரர்கள் ஆடிப் பாடி தங்களை உற்சாகப்படுத்திக் கொண்டனர். கனடாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீ பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்டுத் தீயை விரைந்து கட்டுப்படுத்துவதற்காக தென்னாப்பிரிக்காவில் இருந்து 200 வீரர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். Edmonton நகருக்கு வந்தடைந்த வீரர்கள், தங்களது உடைமைகளுடன் விமான நிலையத்திலேயே நடனமாடினர். தீயணைப்பு பணியில் களமிறங்குவதற்கு முன்பாக, தங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளும் விதமாக, தென்னாப்பிரிக்க கொடிகளை ஏந்தியவாறு பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். … Read more

உள்நாட்டு பிரச்சினையில் உலக நாடுகளை தலையிடக் கோருவது நாட்டிற்கு பெரிய ஆபத்தை விளைவிக்கும் – அமைச்சர் ஜெய்சங்கர்!

இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினையில் உலக நாடுகளை தலையிடக் கோருவது நாட்டிற்கு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். டெல்லி ஆர்யபட்டா கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒவ்வொரு நாட்டிலும் பிரச்சினைகளும் வேறுபாடுகளும் இருப்பதாக கூறினார். தனிப்பட்ட நபர்களுக்கு தனிப்பட்ட கருத்துகள் இருப்பது இயற்கையே என்று குறிப்பிட்ட அவர், அதற்காக அன்னிய நாடுகளை இந்திய பிரச்சினைகளில் தலையிடுமாறு கோருவது மேலும் பெரிய பிரச்சினைகளைத் தான் கொண்டு வரும் என்றார். அந்த வகையில் இந்தியாவை இழிவுபடுத்தும் … Read more

மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடிப்பு – 3 பேர் உயிரிழப்பு

மெய்தேய் மற்றும் கூகி பழங்குடியினருக்கு இடையே கடந்த மாதம் 3-ஆம் தேதி வெடித்த மோதல் காரணமாக மணிப்பூரில் இதுவரை 100-க்கும் அதிகமானோர் பலியாகிவிட்டனர். 35 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். சில நாட்களுக்கு முன் உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்றதன் பேரில் நிலைமை சற்று கட்டுக்குள் வந்தது. தற்போது மீண்டும் வன்முறை சம்பங்கள் அரங்கேறத் துவங்கி உள்ளன. மேற்கு இம்பால் மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் பாதுகாப்புப் படையினர் போல வேடமணிந்து சென்ற … Read more

நீச்சல் குளத்தில் மூழ்கி பலியான 6 வயது சிறுவன்… நீச்சல் குளத்திற்கு சீல்.!

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே, நீச்சல் குளத்தில் பெற்றோருடன் குளிக்கச் சென்ற 6 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, நீச்சல் குளத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆகச்சிறந்த உடற்பயிற்சிகளில் ஒன்றாக திகழும் நீச்சலை கற்றுக்கொள்ளும் ஆசையால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த 6 வயது சிறுவன் சஸ்வின் வைபவ் இவர் தான்….. சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார், இவரது மனைவி தாரிகா. கோடை விடுமுறையையொட்டி தாரிகா தனது இரு மகன்களுடன் … Read more

சமையல் வீடியோக்களை பார்த்து உணவுகளை தயாரிக்கும் ரோபோவை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள்..!

சமையல் வீடியோக்களை பார்த்து உணவுகளை தயாரிக்கும் வகையில் ரோபோ ஒன்றை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். இதற்காக புரோக்ராம் செய்யப்பட்ட அந்த ரோபோ, மனிதர்கள் உருவாக்கும் சமையல் வீடியோவைப் பார்த்து, அது என்ன ரெசிபி என்பதை கண்டுபிடித்து அந்த உணவை தானே தயார் செய்து அசத்தியுள்ளது. இதன் பின் 8 சாலட் குறிப்புகள் அடங்கிய புத்தகம் ஒன்றை அந்த ரோபோட்டிடம் கொடுத்ததாகவும், அதனை படித்து, அந்த 8 உணவுகளையும் சமைத்த ரோபோட், ஒன்பதாவதாக தானே ஒரு … Read more