திரைப்படம் என்ற பெயரில் குப்பைகளை விற்காதீர்கள்…!”கெஹ்ரையான்”படத்திற்கு எதிராக பொங்கி எழ்ந்த கங்கனா…!

`நானும் இந்த மில்லினியல் தலைமுறையை சேர்ந்தவள்தான். அந்தக் காதல் மற்றும் ரொமான்ஸை என்னால் அடையாளம் காண முடியும். ஆனால், மில்லினியல்/நியூ ஏஜ்/நகர்ப்புற காதல் திரைப்படம் என்ற பெயரில் குப்பைகளை விற்காதீர்கள், ப்ளீஸ்.” – கங்கனா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓடிடியில் வெளியானது இந்தி படமான `கெஹ்ரையான் . இதில் தீபிகா படுகோன், அனன்யா பாண்டே, சித்தாந்த் சதுர்வேதி , தஹரியா கர்வா ஆகியோர் நடித்துள்ளனர். ஷாகுன் பத்ரா இப்படத்தை இயக்கியுள்ளார். சிம்புவிற்கு அழைப்பு விடுத்த ரஜினி..கதைல … Read more

திருப்பதிக்கு ஒகே… ஆனால் பாலாஜிக்கு நோ… வலுக்கும் எதிர்ப்பு!

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆந்திரா, தெலங்கானா என்று இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. ஹைதராபாத்தை தலைநகராக கொண்ட தெலங்கானா மாநிலம் மொத்தம் 31 மாவட்டங்களை கொண்டுள்ளது. அதேசமயம், ஆந்திர மாநிலத்தில் மொத்தம் 13 மாவட்டங்களே உள்ளன. இந்த 13 மாவட்டங்களும் அதிக பரப்பளவு கொண்டவையாக இருப்பதாலும், மாவட்ட தலைநகரங்கள் வெகு தொலைவில் உள்ளதாலும் அன்றாடம் அரசு சார்ந்த பணிகளுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உளளிட்ட இடங்களுக்கு செல்ல பொதுமக்கள் அதிக தூரம் பயணிக்க … Read more

அரபிக் குத்து பாடலை விஜய் பாடாததற்கு இதுதான் காரணமா ?ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. நெல்சன் இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதைதொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு பீஸ்ட் படத்திலிருந்து அரபிக் குத்து எனும் பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை ஒரு வித்யாசமான ப்ரோமோவின் மூலம் படக்குழு அறிவித்தது. மேலும் சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் … Read more

எல்ஐசி பங்குகள் விரைவில் விற்பனை… ஆக்ஷனில் இறங்கிய மத்திய அரசு!

நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை விற்று, அதன் மூலம் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி திரட்டப்படும் என்று மத்திய அரசு தொடர்ந்து தெரிவித்து வந்தது. மத்திய அரசின் இந்த முடிவுகக்கு கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனாலும் எல்ஐசி பங்குகளை விற்பது என்ற மத்திய அரசின் முடிவுக்கு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏஐ) அண்மையில் அனுமதி அளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 1 ஆம் தேதி, … Read more

விவாகரத்து அறிவிப்பிற்கு பின் குட் நியூஸ் சொன்ன ஐஸ்வர்யா: ரசிகர்கள் மகிழ்ச்சி..!

இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இது தொடர்பாக இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் தனித்தனியாக அறிக்கைகள் வெளியிட்டனர். அதில், நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் … Read more

Sell Old Phone: பழைய போனுக்கு நல்ல விலை வேண்டுமா… கவலைய விடுங்க!

நீங்கள் உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை விற்க விரும்பினால், அதை விற்று நல்ல சலுகையைப் பெறுவதற்கான தளத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், Flipkart இன் புதிய சேவை உங்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும். Flipkart இன்று (பிப்ரவரி ) முதல் பயனர்களுக்காக ‘Sell Back Program’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உங்கள் பழைய ஸ்மார்ட்போனை Flipkart இல் நல்ல விலையில் விற்கலாம். பிளிப்கார்ட் பழைய போனுக்கு ஈடாக மின்னணு பரிசு கூப்பனை அதிரடி சலுகைகளுடன் உங்களுக்கு … Read more

வாசலோடு நிறுத்தி… பர்தாவைக் கழற்றிய டீச்சர்.. கர்நாடகத்தில் மீண்டும் பரபரப்பு!

கர்நாடகத்தில் இன்று பத்தாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டபோது ஹிஜாப் தொடர்பான பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்கின. கர்நாடகத்தில் சில கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் போடுவது தடை செய்யப்பட்டது. இதையடுத்து பிரச்சினை உருவாகி போராட்டங்கள் வெடித்தன. இதைத் தொடர்ந்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இந்த நிலையில் இன்று 10ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மாணவ மாணவியர் பள்ளிகளுக்கு வருகை தந்தனர். ஆனால் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளை வாசலோடு நிறுத்தி அதை … Read more

மருத்துவ ஆராய்ச்சிக்கு விலங்குகளை பயன்படுத்த விரைவில் வருகிறது தடை?

மருத்துவ அறிவியல் நாளுக்கு நாள் வளர்ந்துவரும் அளவுக்கு நோய்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. புதிது புதிதாக உருவாகிவரும் நோய்களை தீர்க்க மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கூட கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டறியும் ஆராய்ச்சியில் மருத்துவ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அதன் பயனாக தற்போது உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா போன்ற புதிய தொற்றுகள், நோய்களுக்கு மருந்துகளை கண்டுபிடிக்கும்போது, அவை விற்பனைக்கு வருவதற்கு முன் முதலில் எலி, … Read more

இருபது நிமிடத்தில் அஜித்தின் சாதனையை முறியடித்த விஜய்..! இது வேற லெவல் பா..!

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்திலிருந்து தற்போது அரபிக் குத்து பாடல் வெளியாகிவுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இப்பாடல் செம வைரலாகிவருகிறது. விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் அசத்தல் நடனத்தில் கலர்புல்லாக வெளியாகியுள்ள இப்பாடல் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் இன்று 6 மணிக்கு வெளியான இப்பாடல் ஐந்து நிமிடத்திற்குள் 4 லட்சம் பார்வையாளர்களை பெற்றது. வெளியானது அரபிக் குத்து..ஆனால் ரசிகர்களுக்கு ஒரு வருத்தம்..! இதைத்தொடர்ந்து அரபிக் … Read more

பிரதமர் மோடியால் யாருக்கு பலன்? – ராகுல் காந்தி கடும் தாக்கு!

பிரதமர் நரேந்திர மோடியால் நாட்டு மக்களுக்கு எந்த பயனுமில்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து உள்ளார். பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, வரும் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதலில், 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த … Read more